தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
முனைவர் தி. பெரியசாமி
(பேராசிரியர் மற்றும் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்)
தமிழ் என்பது மொழி மட்டுமலல்; அது ஒரு வாழ்நெறி. தமிழ்நிலம் தொன்மையானது. தொல்பழங்காலத்தில் தோன்றிய மொழி தமிழ். மிகப்பழங்காலத்திலிருந்தே இலக்கிய, இலக்கணங்கள் தமிழர்களின் வாழ்வை விளக்குவன. இலக்கியம் என்பது அந்த வரையறைக்குள் உட்புகுத்தப்படும் கருத்துக் கோவை. இலக்கண, இலக்கியங்களில் எண்ணற்ற சிந்தனைக் கருத்தாக்கங்கள் பொதிந்து கிடப்பது அனைவரும் அறிந்த உண்மையே.
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் அறிந்த சிந்தனை நெறிகளை இன்றைய தலைமுறைக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இப்பணியைக் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செய்து வருவதை நான் நன்கு அறிவேன். அப்போக்கில் “தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.