தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
முனைவர் மா. கார்த்திகேயன்
(முதல்வர், கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு)
"அறிவை விரிவு செய் அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை”
என்று தூங்கிக் கொண்டிருந்தோரைத் தட்டி எழுப்பினார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழன் மொழி வழியாகச் சிந்தித்த காலத்தைக் கணக்கிட்டு அறியலாகாது. ஏனெனில் அத்தகைய காலப்பழமையே காரணமாக அமைகிறது. இலக்கண பழமைக்குத் தொல்காப்பியமும், இலக்கியப் பழமைக்குச் சங்க இலக்கியமும், பக்தி க்குத் தேவார, திருவாசகமும் சான்றுகளாக அமைகின்றன. இத்தகைய சிறப்புகளுடன் திகழும் நம் தமிழ் மொழிக்கு ஆற்ற வேண்டிய அரும்பணிகள் ஏராளமாகும். அதைச் செம்மையான நோக்குடன் நிகழ்த்தத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை.
பரந்துபட்ட களத்தைத் தெரிவு செய்து அதில் நேர்த்தியான ஆய்வுரைகளைத் தாங்கி வெளியிடுவது என்பதைக் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நேர மேலாண்மை, விருந்தோம்பல், ஆய்வுரை வழங்கல், ஆய்வுரையைத் தொழில்நுட்பத்துடன் அளித்தல் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதை நானறிவேன். அவ்வகையில், இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கையும் மிகச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இக்கருத்தரங்கில் ஆய்வுரைகளை வழங்கவுள்ள அனைத்து ஆய்வாளர்களையும், இக்கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைத்துப் பேராசிரியர்களையும் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.