இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

1. தமிழ்ச் சிறுகதைகளில் பண்பாட்டுச் சிந்தனைகள்


முனைவர் சு. அரங்கநாதன்
உதவிப் பேராசிரியர், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை - 15.

முன்னுரை

இலக்கியங்கள் எப்போதும் ஒன்றை மட்டுமே பேசுவன அல்ல. மாறாக அது பன்முகச் சிந்தனையின் வெளிப்பாடு, ஒரு படைப்பு என்பது ஒருவிசயத்தைப் பேசிவிட்டுப் போவதல்ல, அதன் வழியாக பல சிந்தனைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் சமூகச் சரிப்படுத்தலை மேற்கொள்கிறது. குறிப்பாகப் பண்பாடு குறித்த பதிவுகளில் முக்கியக் கவனம் செலுத்துகிறது. தமிழ் இலக்கிய மரபில் உள்ள எல்லா வகையான இலக்கியங்களிலும் பண்பாடு என்பது மிகக் கவனத்துடன் பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது. குறிப்பாக தமிழ்ச் சிறுகதைகள் பல பண்பாட்டுப் பதிவுக் கூடமாக விளங்குவதைப் பார்க்கிறோம்.

சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உண்டு. சொந்த அனுபவங்களை டயரியில் பதிவது ஒரு கதை, பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது ஒரு கதை, குழந்தைகள் பேசுவதே ஒரு கதை, இன்னும் காதலன் - காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்றவற்றில் கதைகளைப் பெரிதளவில் காணலாம்.

தமிழர்கள் காலந்தோறும் இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைச் சொல்லியும் கேட்டும் வந்திருக்கின்றனர். இக்கதைகளின் வழியாக வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகள் அறிவுறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்று சுவையுணர்வோடு கதையைத் தொடங்கும் மரபு நம்மிடையே இருந்து வந்துள்ளது. பொய்மொழி, பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் பாட்டி கதை சொல்லும் மரபு போன தலைமுறைவரை உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

பிறகு பேசிய மொழிக்கு நம் முன்னோர்கள் வரிவடிவம் கொடுத்தனர். அதாவது எழுத்தை அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாகக் கதைகள் பெரிய எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர வருகையினால் அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. தமிழ்ப் புனைகதை மரபுடன், மேலைநாட்டுப் புனைகதை மரபு சங்கமித்ததன் விளைவாகப் புதிய சிறுகதைகள் பிறந்தன. இச்சங்கமம் சிறுகதையைப் பொறுத்தவரை 19 ஆம் நூற்றாண்டு வரை நிகழவில்லை.



தொல்காப்பியர் கூறும் கதை மரபு

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’

என்று உரைப்பார்.

தமிழில் புதிய இலக்கிய வகைகள் - காரணங்கள்

தமிழில் புதிய இலக்கிய வகைகள் தோன்றியதற்கு அரசியல் பின்னணி, கல்விப் பின்னணி, சமயப் பின்னணி, சாதி, பெண்கள் நிலை, பொருளாதாரச் சூழல், இலக்கியச் சூழல் ஆகியவை காணமாக அமைகின்றன. எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் வாழ்க்கையின் ஒரு கூறோ அல்லது பல கூறுகளோ இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். இலக்கியம் என்பது வாழ்க்கை அனுபவம், வாழ்க்கையைக் கூர்ந்து ஆர்வம், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் இணைந்ததாக இருக்கும். இதில் சிறுகதை எனும் இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பில் கால் பதித்தில் இருந்து இன்று வரை எண்ணிலடங்கா கதைகள் படைக்கப்பட்டுள்ளன. இம்மரபு புதிய இலக்கிய வடிவமாக மேலைநாட்டு வருகையாகச் சொல்லப்பட்டாலும் நமது மரபான இலக்கிய வகைமைகளிலும் இதன் சுவடுகளைக் காணமுடியும்.

காவியங்களில் சிறுகதைகள்

சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.

தமிழ்ச் சிறுகதைகளைப் பொறுத்தவரை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. நகரத்தை கதைக் களமாகக் கொண்ட சிறுகதைகள்

2. கிராமத்தை கதைக் களமாகக் கொண்ட சிறுகதைகள்.

பொதுவாக இதனை வட்டாரச் சிறுகதைகள் என்றும் குறிப்பிடலாம்.

கிராமத்தைக் களமாகக் கொண்ட கதைகள் அதன் மையப்பொருண்மையில் ஒரே அமைப்புடன் காணப்படுகின்றது. ஆனால் அந்தக் கதை வழங்குகின்ற சாதி, மத அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பண்பாட்டுப் புனைவுகளுடனும், இடப் புனைவுகளுடனும், வட்டார மொழிப் பயன்பாட்டுடனும், வழக்காறுகளுடனும் கட்டப்படுவதைப் பார்க்கின்றோம். இந்தக் கட்டுமானம் கதை சொல்லியின் தனித்திறனை அடிப்படையாகக் கொண்டது. தன் இனத்தின் பண்பாட்டு, வாழ்வியல் கூறுகளை கதைகள் மூலமாக இளைய சமூகத்தினருக்கு கொண்டு செல்லும் பணியை கதைசொல்லி தன் எடுத்துரைப்புத் திறன் மூலம் கதையின் ஊடாக இயல்பாகப் பொருத்துகின்றார். இது ஒரு படைப்பாளி அல்லது கதைசொல்லி தன் இருப்பை இடப்புனைவுகள் மூலம் பதிவுசெய்கின்ற போது ஒரு திருப்தியை அடைந்து விடுகிறான்.



இவற்றை வெறுமனே பதிவுகள் என்று சொல்லி விடமுடியாது மாறாக, இப்பதிவுகள் முழுக்க முழுக்க படைப்பாளி தான் வாழும் நிலவியல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளாகும். தான் வாழும் நிலம் சார்ந்த அடையாளங்களை, பண்பாட்டு எச்சங்களைப் பதிவு செய்வதன் மூலம் தனக்கான இருப்பை இந்த உலகிற்கு அளிப்பதாக படைப்பாளி கருதலாம். தனது மொழி, தனக்குப் பழக்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு கதை முழுமை பெற்றுவிடுகிறது.

இதுவே நகரத்தை மையமாகக் கொண்ட கதைகளில் இடப்புனைவுகளும், வட்டாரப் பண்பாடும் பெருமளவு பேசப்படுவதில்லை. நகரமயதாலின் வேகத்தில் கதை சொல்லிச் செல்கின்ற போது இது சாத்தியப்படுவதில்லை என்று தான் தோன்றுகிறது.

பொதுவாக, சிறுகதைகளில் பேசப்படும் பண்பாட்டுப் பதிவுகளை இரண்டு விதாமாகப் பார்க்கலாம். ஒன்று அழிந்து வரும் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதற்காக கதைகளின் மூலம் பதவு செய்தல். மற்றொன்று அடக்குமுறையான சாதி, மதம் என்னும் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிதம் செய்யும் பண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது, அதனை மீறுவது. அல்லது அதை இச்சமூகப் பண்பாட்டிலிருந்து முழுவதும் விலக்கி விடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.

சிறுகதைகளில் இடம்பெறும் கற்பனைக் கூறுகளையும், பொய்யுரைகளையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், கதை வழங்கும் சமூகத்தில் பண்பாட்டு அடையாளங்களையும், சமூக இயங்கியல் தளத்தையும் பார்க்க முடியும். ஏன்? திறன்மிக்க ஒரு கதையாளி சொல்லும் கதைகளில் உண்மையான சமூக வாழ்வும், வட்டார வரலாறும் சேர்ந்தே சொல்லப்படுவதைப் பார்க்க முடியும். பொதுவாகக் கதைகளை “அது வாழும் சமூகத்தின் வெளிப்பாடு” என்று சொல்லுவர்.

என். ஸ்ரீராம் எழுதி சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான ‘உடுக்கை விரல்’ எனும் சிறுகதை பழனி வட்டாரத்தைக் கதைக்களமாகக் கொண்டது. இக்கதையின் தொடக்கமே இதை உறுதிப்படுத்துகிறது. ஒரு கூத்துக் கட்டும் குடும்பம் வறட்சி காரணமாக, வறுமையில் வாடுகிறது. அந்தப் பகுதியோ மழையில்லாமல் காய்ந்து கிடக்க, கூத்து நடத்த யாரும் சம்மதிக்காத வேளையில் கூத்து கட்டுபவன், கூத்துக்கட்டுனா மழைவரும்னு உடுக்கையை எடுத்துக் கொண்டு சண்முகா நதியில இருந்து அண்ணமார் கதைபாடி மழைவர அதன் பிறது பக்கத்துக் ஊர்க்காரங்க கூத்து கட்ட கூப்பிட்டறது தான் கதை. இக்கதை பழநி வட்டாரப் பகுதியை கதைக்களமாகக் கொண்டது. “தூரத்தில் பழநிமலைப் படிக்கட்டுகளும் உச்சிக்கோபுரமும் மின்சார விளக்கு ஒளியில் ஜொலிப்பது,” என்று தொடங்குகிறது.

அண்ணமார்சாமி உடுக்கையடிக் கதைப்பாடல் பாடினால் மழை வரும், குழந்தைப் பேறு கிட்டும் என்ற நம்பிக்கை சார்ந்த பண்பாடாக கொங்குவட்டாரப் பண்பாடு ஆகும். இப்பண்பாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இக்கதையின் ஆசிரியர் காலப் பின்னணியை ஆங்கிலேயர் ஆட்சிக் காலமாகக் குறிப்பிடுகிறார்.

“என் கனவு எல்லாம் பொள்ளாச்சி சென்று மகாலிங்கம் பஸ் கம்பெனியில் கரிப்புகை பஸ் ஓட்ட வேண்டும் என்பதுதான். அதேபோல் பிரிட்டிஷ் துரைக்கு ஜீப் ஓட்ட வேண்டும் என்பதுதான்” என்பதிலிருந்து கதையின் காலப்பின்னணி தெளிவாகிறது. அதுமட்டுமல்ல கதையின் பிற்பகுதியில்

“அந்த வருடத்தில் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. வெள்ளைக்காரத் துரையின் குடும்பத்தினர். கீழை நாட்டின் சடங்கு, சம்பிரதாயக் கூத்துக்களைப் பார்க்க ஆர்வம் கொண்டிருந்த துரை சாணி அம்மாவுக்காக, கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.”

என்ற வரிகளும் காலப் பின்னணியை உறுதிசெய்கின்றன.



அண்ணமார்சாமி கூத்துக்காரர்களின் கூத்துத் திறமையை வெளிக்காட்ட நினைத்த ஆசிரியர் அண்ணமார் சாமி கதையாடல் குறித்தப் பண்பாட்டுப் பதிவாகவும் இதைச் செய்திருக்கிறார்.

“ஆட்டக் களத்திலே ஆடும் கலைஞனுக்கம்
பார்க்கும் மக்களுக்கும் குத்தம் குறை வராமே
தீட்டு தடங்கல் வராமே காத்துக் கருப்பு அண்டாமே
கனதிடமாக் காத்து நின்று கூத்து நடக்க வேணுமப்போ...
திருக்கோயில்விட்டு மங்கே ஆடிவர வேணுமம்மா
தவசுமரம் சோலையிட்டு தானிறங்கி வாருமம்மா…”

கொங்கு வட்டாரப் பகுதிகளில் அண்ணமார் சாமி கூத்து பண்பாட்டாடோடு தொடர்புடையது. இப்பண்பாட்டை என். ஸ்ரீராம் அவ்வளவு நேர்த்தியாக தந்திருக்கிறார். “அய்யோ சின்னண்ணா… பெரியண்ணா... அருக்கானி... தங்காயீ… பெரியகாண்டித்தாயீ…”

என்று வட்டார தெய்வங்களை அழைப்பதாக வருகிறது. கூத்து போட்டா மழைவரும் என்பது கொங்கு பகுதியில் இன்னும் உள்ள மழைசார்ந்த நம்பிக்கையாகும். இந்நம்பிக்கையை ஆசிரியர் தெளிவாகப் படைத்துக்காட்டுகிறார்.

‘உடுக்கப் பாட்டுப் பாடினா மழை எறங்குமுன்னு சொன்னீங்களா”

இதில் மற்றொரு வட்டாரப் பண்பாட்டையும் பார்க்க முடிகிறது. வேப்பிலை என்பது மாரியம்மனுக்கான குறியீடாகவும், பேய் அண்டாமல், நோய் நொடி வராமல் வேப்பிலை பாதுகாக்கும் என்ற பண்பாடு மாரியம்மன் வழிபாட்டோடு தொடர்புடையது. அதனால் காப்பு கட்டு என்ற பண்பாட்டில் வேப்பிலை முக்கிய இடம்பெறுகிறது.

“அப்படியே ஆராவது ரெண்டு பேர் ஊருக்குள்ள ஒடி, எல்லாவூட்லேயும் நெலவுல வேப்பங்கொலயைச் சொருகி வெச்சு, பொண்டு புள்ளைகளை எல்லாம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க”


பண்பாட்டுக் கூறுகளின் உயிர்த்தன்மை (இயங்கியல்) அது வழங்கும் வட்டாரப் புனைவுகளுடனும் வட்டார வழக்குகளுடனும் வழக்கில் இருப்பதில் அமைந்திருக்கிறது. நிறையக் கதைகளில் கதை வழங்கும் வட்டாரத்தின் இடப்புனைவுகள், ஊர்ப்பெயர்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும்.

கதைக்கு உயிரளிப்பது அந்தந்த வட்டாரப் பகுதியில் வழங்கும் பேச்சு வழக்கே ஆகும். இந்த வட்டார வழக்குதான் கதை வழங்கும் பகுதியில் உள்ள மக்களின் சமூக மொழியும் ஆகும். அதுமட்டுமல்லாமல் ஒரு சொல் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக இருப்பதையும், ஒரு சொல் ஒரு சாதியம் சார்ந்த உணவு, தொழில் சார்ந்த பண்பாட்டு அடையாளமாக இருப்பதையும் பார்க்கிறோம். மேலும், கூடை முறம் பின்னும் குறவர்கள் மேற்கொள்ளும் மருத்துவக் குறிப்பு ஒன்று எடுத்தாளப்படுகிறது. இது குறவர்கள் தொழில் செய்யும் போது ஏற்படும் கத்திக் காயத்துக்கு செய்யும் வைத்தியமாகும். இதனை,

“நாங்க மூங்கில் சீவும் போது விரல்ல கத்தி பட்டா வேலாம்பட்டையும் , வெட்டுக் கட்டாந்தழையும் தான் வெச்சுக் கட்டுவோம். சீக்கிரத்திலேயே புண் ஆறிடும். உங்களுக்கும் அதைத்தான் வெச்சுக் கட்டியிருக்கேன்.”

இது நாட்டுப்புற மக்கள் தங்களுக்குத் தாங்களே வைத்தியம் பார்த்துக் கொள்ளும் பண்பாட்டுக் கூறாகும்.

என். ஸ்ரீராமின் மற்றொரு சிறுகதை ‘கருட வித்தை’ என்பதாகும். இக்கதையில் நாட்டுப்புறப் பண்பாடு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாம்புப் பாடம் போடுதல் எனும் பண்பாடு இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. மனிதர்களுக்குத் தேள்கடி, பாம்பு கடி பாடம் மட்டுமல்ல, ஆடு, மாடுகளுக்கும் பாடம் போடும் பண்பாட்டை கொங்கு வட்டாரங்களில் இன்றளவும் மிகுதியாகப் பார்க்க முடிகிறது. மருத்துவத் துறையில் பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும் இந்தப் பண்பாடு இன்றும் தொடர்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஒரு கிராமத்தில் இந்தப்பாட முறையை அனைவரும் தெரிந்திருக்க மாட்டார். யாராவது ஒருவருக்குத் தான் தெரியும். என்ன பாடம் சொல்லனும் என்பதை அவரது இறப்புக் காலம் நெருங்கும் வரை யாருக்கும் சொல்லித் தரமாட்டார்கள். இதனை, கருட வித்தை சிறுகதையில் என்.ஸ்ரீராம் அழகாகப் பதிவு செய்துள்ளார்.

”பூச்சி தொட்டிருச்சுடா… கட்டுவிரியன், ஊருக்கு ஓடி அப்பாவை பாம்புப் பாடம் போடுற அய்யனைக் கூட்டிட்டு வரச் சொல்லு…”

“பாம்புப் பாடத்து அய்யன் சித்தப்பாவின் நாடியைப் பார்த்துவிட்டு வேப்பங்குழாய் ஒடித்து வந்து பாம்புப் பாடத்தைப் போட்டார்.”

அதோடு ஒரு நாட்டுப்புற வழக்காறையும் பதிவு செய்து இருக்கிறார்.

“விதி முடிஞ்சாதான் விரியன் கடிக்கும்”

இப்பழமொழி ஒரு சமூகத்தின் பன்னெடுங்கால அனுபவத்தின் வெளிப்பாடாகும். இன்றும் கிராமப்புறங்களில் இப்பழமொழி வழக்கில் உள்ளது.

மேலும், இக்கதையில் மற்றொரு வழக்காறும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

”அக்கா புருஷன் அகலக் குடைக்காரன்
தங்கச்சி புருஷன் தங்கக் குடைக்காரன்
எம் புருஷன் மட்டும் இளிச்சவாயன்”

எள்ளுச் செடி என்பது விடையாகும்.


அதே போல் இப்பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிவதை அக்னி கழுவு என்கின்றனர். மேலும், கவலை ஓட்டுதல் எனும் வேளாண் பண்பாட்டு மரபு, ஆழ்துளைக் கிணறு முறை வந்த பிறகு குறைந்து விட்டது. இதை இக்கதையில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

“மறுதினம் பொழுது கிளம்பும் முன்னே சித்தப்பா கிணற்று தொலைவாரியில் கவலை பூட்டினார். வடத்தில் இருந்து நீர் இறைக்கும் சால்பறிக்குப் பதிலாகக் குடைசீத்தை சிமிரால் பின்னப்பட்ட கல் சுமக்கும் கொறக்கூடையை மாட்டி கிணற்றுக்குள் விட்டார். ஏற்கனவே கவலை ஓட்டி பழகிய எருதுகள் பின்னோக்கியும் சாதுவாகவே வந்தன. நான் கிணற்றுக்குள் இறங்க முடியாமல் தவித்தபோது சித்தப்பா என்னை தூக்கி இந்தக் கொறக்கூடையில் உட்காரவைத்து கிணற்றுக்குள் இறங்கச் செய்தார். கூடையில் கல் ஏற்றிவிடும் பெருமாள் போயரும் எல்லம்மாவும் எனக்கு நிறைய விடுகதைகளையும் ராஜா- ராணி கதைகளையும் சொன்னார்கள். நான் பசி மறந்து நாள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்பா வந்து தொளைக்காலைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டாலும் மேலே ஏற மனசு கேட்காது.

“எழுபத்தைந்து அகலப்படிகள் கொண்ட அகலமான சதுரக் கிணறு. பட்டுவரிக்கற்கள் அடுக்கிக் கட்டிய நாலு திசை பாம்பேறி”

எனும் வரிகள் நீண்ட நெடிய வேளாண் பாரம்பரியத்தைக் கொண்ட கொங்கு மக்களின் வேளாண் தொழில் நுட்ப பண்பாடு ஆகும். கல்லு ஒட்டன், மண்ணு ஒட்டன் எனும் சாதியப் பண்பாட்டையும் இக்கதை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டர் சாதிக்குள் இருக்கும் இருபிரிவினைகளையும், அவர்களுக்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.

”எல்லம்மாவ... நான் கலியாணம் மூச்சுக்கலாம்னு இருக்கிறேன்… நீ… கல்லு ஒட்டன். நான் மண்ணு ஒட்டன். மண்ணு ஒட்டனைக் கல்லு ஒட்டன் மதிக்க மாட்டான். மதிக்காத கூட்டத்துக்கு நான் என் பொண்ணைக் குடுக்கச் சொல்றியா?”

”பாம்புப் பாடம் போடுறவங்க குடும்பம் விருத்தியாகாதுன்னு சொல்லுவாங்க” என்ற வழக்காறும் காணப்படுகிறது.

அடுத்து க. சீ. சிவக்குமார் எழுதிய ரசாயனக் கலப்பை எனும் சிறுகதை 23-9-2015 ஆனந்த விகடன் இதழில் வெளியானது. இக்கதையும் கொங்கு வட்டாரப் பகுதிகளைக் கதைக்களனாகக் கொண்டது. வெள்ளக்கோவில், இலுப்பைக்கிணறு, வடுகப்பட்டி, வெள்ளியணை, இடையன் கிணறு போன்றவை கதை நிகழ்வுக் களங்களாகும். இக்கதை கொங்கு வட்டாரத்தின் முந்தைய வேளாண் பண்பாட்டைப் அதன் மொழியிலேயே தந்திருக்கிறார்.

“மாமா கவலை ஓட்டுவதை, அதன் ஏற்றுவாரியில் இருந்தவாறு சிறுவனாக இருந்த நாட்களில் பல நேரம் கண்டிருக்கிறேன். எருதுகளின் பின்நடையின் போது, சால்பரி துலாக்கல் ராட்டை வழியயே பயணிக்கும். பின்னர் கயிறு தன் முடுக்கத்தைக் கைவிட்ட தருணத்தில் கிணற்றில் புகுந்து நீர் முகக்கும். எருதுகளை முன்னோக்கி ஓட்டிக்கொண்டு வாரியின் விளிம்புக்கு வந்ததும் சால்பரியின் தோல் பையைப் பின்னி இருக்கும் சூட்டிக்கயிற்றைத் தளர்த்துவார் மாமா. பலகைக் கற்களால் தொடங்கப்பட்டு மண்ணால் வரம்புகொண்டு தொடரும் வாய்க்காலில் தண்ணீர் மொடோச் எனச் சரியும். நீண்ட முக்கோணமாகத் தோற்றம் காட்டும் வாரியின் நீளத்துக்கும் கிணறுகளின் ஆழத்திற்கும் ஒருங்கிசைவு உண்டு. கிணற்றில் தண்ணீர் அதிகமானால் கயிற்றின் நீளம் குறைந்து மாடுகளின் நடைதூரம் மிச்சமாகும். வாரியில் கயிறுகள் அனுமதிக்கும் கடைப் பகுதிக்கும், கிணற்றின் சில தப்படிகளுக்கு முன்பாக ஆராம்பிக்கும் மடைப் பகுதிக்கும் இடையிலாக மாடுகளின் தடையறாத போக்குவரவின் நடை இருக்கும்.

எருதுகள் நடந்த இரட்டைத் தடம், தனித்த தண்ணீர் வாய்க்கால் போல் இருக்கும். இடைப்பட்ட திரட்டின் மையத்திலும், கிணற்று விளிம்பிலும் சால்பரியின் கயிறுகள் உருண்டு போகத் தோதாக, கற்களில் காடியிடப்பட்டுப் பொருத்திவைத்த உருளைகள் இருக்கும். உருளைகளில் கயிறு தோய்ந்த பகுதிகளோ கண்ணாடி போன்ற பளபளப்பை அடைந்திருக்கும்.

சால்பரியில் நீர் முகக்கப்பட்டதை உணர்ந்ததும் எருதுகளின் தளைக் கயிற்றை உதறுவார் மாமா, அவற்றின் கீழ்நோக்கிய நடை ஆரம்பித்ததும் மாமா சட்டென வடக்கயிற்றின் மீது அமர்ந்து விடுவார். உட்காரும் இடத்தின் அடையாளமாக ஈரிழைத் துண்டு சுற்றப்பட்டிருக்கும்.

மாடுகளின் தளைக்கயிறு, வடக்கயிறு, வால்கயிறு, சால்பரியின் குடாப்பைக் கட்டவும் கவிழ்கவுமான சூட்டிக்கயிறு இதுவும் போதாது என, எருதுகளை ஊக்குவிக்கும் சாட்டைக்கயிறு இவ்வளவோடும் ஏகப் பரிச்சயம் கொண்டிருப்பார்” மாமா.

மேலும், இதில் உணவுப் பண்பாடும் பேசப்படுகிறது.

”அந்த உணவில் ராகிக் களியும் ரக்கிரி மசியலும் பல நாள் இருக்கும். தட்டிப்போட்ட கொத்த மல்லியின் வாசமும் இடையீடுமாகக் கமழும் ரக்கிரிக் கீரை.”

கொங்குப் பகுதிகளில் குறிப்பாக, வெள்ளக்கோயில், கரூர் வட்டாரப் பகுதியில் ராகிக்களிக்கு புளிச்சக் கீரையும், நிலக்கடலைச் துவையலும் இன்றும் வழக்கத்தில் உள்ள உணவு முறையாகும்.

“அந்த நேராங்களில் மாமாவோ, எருதுகளுக்கு இடறாத பூவரச மரத்தின் வேர் ஓரத்தில் என்னை அமர்த்திவிடுவார். மரத்தின் கீழ் இருந்த பலகைக் கல் ஒன்றில் பூவரசு ஈந்த பச்சைப் பம்பரங்களைச் சுழலவிட்டுக்கொண்டிருப்பேன்.”

இது நாட்டுப்புற விளையாட்டுப் பண்பாடு ஆகும்.


களப்பின்னணி, கதைப்பின்னணி போன்றவற்றிற்கு ஏற்பவும் வட்டாரப் பண்பாட்டைப் பதிவு செய்துயிருக்கின்றன. உடுக்கை விரல், கருட வித்தை, ரசாயனக் கலப்பை என்ற கதைகளுக்கான களம் கிராமம். அதில் வரும் கதாபாத்திரங்களின் பண்புகளும், பிரசனைகளும் பண்பாட்டோடு தொடர்பு கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். அதே போல் மூன்று கதைகளின் காலப் பின்னணியும் சமீபத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. இக்கதையின் ஆசிரியர்கள் தொலைந்து போன பண்பாட்டை மீட்டெடுக்கவும், அல்லது அதை பண்பாட்டுப் பதிவாக்கவும் நேர்ந்திருக்கிறது. இப்பண்பாட்டுப் பதிவுகள் சிறிதளவும் கூடாமல் கதையோட்டத்தோடு பொருத்தி பொருத்திப் பேசப்பட்டிருப்பதனாலேயே சுவை கூடுகிறது. வட்டாரப் பண்பாட்டுக் கூறுகள் என்பது கதையோட்டத்திற்கு தேவையான இடத்தில் இயல்பாகவோ அல்லது படைப்பாளியின் தனிப்பட்ட ஆர்வத்தினாலோ இடம்பெறுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் பண்பாட்டுக் கூறுகள் அனைத்துக் கதைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கதைக்களம், காலப்பின்னணி, கதைமாந்தர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கதையில் பண்பாட்டுப் பதிவுகள் இடம் பெறுவதைப் படைப்பாளி தீர்மானிக்கிறான். பண்பாட்டுப் பதிவுகள் ஒரு உதிரியைப் போல் அல்லாமல், கதையோட்டத்திற்கு ஏற்ப அதன் போக்கில அமைத்துக் காட்டும்போதுதான் அது சிறப்புக்குரியதாக ஆகும்.

தமிழ்ச் சமூகம் பல வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணியைக் கொண்டது. இப்பண்பாட்டினை வட்டார அடிப்படையில் அணுகுகின்ற போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் நெறிகளையும், செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள முடியும்.

பயன்கொண்ட நூற்கள்

1. ஆனந்த விகடன்.

2. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுடெல்லி.

3. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மு. பாக்யமேரி, சென்னை.

4. படைப்பும் படைப்பாளியும், காவ்யா, பெங்களுர்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License