தமிழர்கள் இயற்கையோடு இயைந்து ஆண் - பெண் சரிநிகர் சமானமாய் வாழ்ந்திருந்த காலத்தில் தமிழகத்தில் வந்து குடியேறிய சமசுகிருதத்தை மொழியாகக் கொண்ட ஆரிய இனம் தனது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தமிழின் மீதும் தமிழரின் மீதும் சிறிது சிறிதாகத் திணிக்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் சமயக் கருத்துக்கள் சில பகுத்தறிவு சிந்தனையாளர்களால் சிறிதும் ஏற்கப்படவில்லை. எனவே அதற்கு எதிரான மெய்யியல், தருக்கவியல் கோட்பாடுகள் பகுத்தறிவு சிந்தனையாளர்களால் உருப்பெற்று மக்களை விழிப்படையச் செய்தது. அவ்வகையில் தோன்றிய ஒரு அறிவியல்கோட்பாடே உலகாய்தம் என்னும் பூதவாதமாகும்.
ஐம்பூதக் கோட்பாடு என்பது தமிழர்களுக்கே உரியது. இவ்வைம்பூதங்களை ஆய்ந்ததினால் இவை பூதவாதம் என்று வழங்கப்படுகிறது. இது பண்டைய கலத்திலேயே தமிழகத்தில் அரும்பி மலர்ந்து மணம் வீசிய ஓர் அறிவியல் கோட்பாடாகும்.
உலகிலுள்ள அனைத்துக் கருத்துக்களையும் இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று காட்சி, மற்றொன்று அநுமானம்.
நமது ஐம்பொறிகளால் உணரக்கூடிய, நேரடியாகக் கண்ணெதிரே காணக்கூடியவற்றைக் காட்சி என்கிறோம். இவையே காட்சி அளவை எனப்படுகிறது.
ஆனால் நேரடியாகக் காணமுடியாத, அறிய முடியாத ஒன்றை ஊகத்தின் மூலம் அறிந்து கொள்வது அநுமானம் எனப்படும். இந்த அநுமானம் என்பது தெளிவு பெறாத சற்று ஐயப்பாடு நிறைந்ததாகும். எனவே காட்சி அளவையை ஏற்கும் உலகாயதர்கள் அநுமானத்தை ஏற்கவில்லை.
உலகத் தோற்றம் குறித்து உலகில் தோன்றிய அனைத்து சமயங்களும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளது. ஆனால் அண்டம், உலகு, உயிர் பற்றி முழுமையான அறிவியல் முறையில் ஆராய்ந்த ஒரு கோட்பாடு உலகாயதம் மட்டுமே.
காட்சிக்குப் புலனாகும் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்குமே அடிப்படையானப் பொருள்கள். ஆகாயம் காட்சிக்குப் புலனாகாதது. அநுமானம் மூலமே அறியப்படுகிறது. எனவே ஐந்தாவது பூதமாக ஆகாயத்தை உலகாயதர்கள் ஏற்கவில்லை.
இந்த அடிப்படையான நான்கு பூதங்களும் வெவ்வேறு விதத்தில் ஒன்று சேர்வதால் உருவானதே இவ்வுடலும், உலகிலுள்ள பிறப் பொருள்களும் என்பது உலகாயதர் கொள்கை.
உலகத் தோற்றம் குறித்த கருத்துக்கள் நமது சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் காணக் கிடைக்கிறது. பூதவாதிகளின் கொள்கையை மெய்ப்பிக்கும் வகையில் தொல்காப்பியம்,
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”
(தொல். மரபு -90)
என்கிறது. இவ்வாறே உலகம் தோன்றிய விதத்தை பரிபாடல் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.
“கருவளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
செந் தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்வு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்”
(பரிபாடல். 2: 5-12) முன்னுரை
உள்ளத்து உணர்ச்சிகளை உற்று நோக்கியும், உணர்ந்து பார்த்தும் கண்டுபிடிக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கின்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே மனிதனிடம் அமையப் பெற்றுள்ளன. உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என பெயரிட்டு அழைத்தனர். தொல்காப்பியர் கூறிய எண் வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகின்ற திருக்குறளில் பயின்று வந்துள்ளதை இக்கட்டுரையின் வாயிலாகக் காணலாம்.
மெய்ப்பாடு
மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்கள் என்று தொல்காப்பியர் பகுத்துள்ளதை,
“நகையே அழுகை இளிவிரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல். மெய் : 1)
என்ற தொல்காப்பிய நூற்பா வாயிலாக அறிய முடிகிறது.
உடலில் மெய்ச் சுவைகள் அதாவது, மெய்யுணர்வுகள் இவை அனைத்தும் புறப்பொருள்களிலிருந்து தோன்றுகின்றன. இவையேயன்றிக் காதல் வாழ்க்கையில் காதலர்களிடையே தோன்றும் மெய்ப்பாடுகள், அவத்தை, அழிவில் - கூட்டம், ஒப்பு, ஒப்பின்மை என்னும் உணர்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளன.
நகை
சிரிப்பு என்பது மனிதரோடு மனிதரை இணைக்கும் காந்தம். சிரித்தபடி வாழ்வதே சிறந்த வாழ்வென்பர் சார்லஸ் பிக்கன்ஸ். நகை என்பதற்கு எயிறு; பல்; நகுதல்; மொட்டு; ஒளி; இன்பம்; இகழ்ச்சி; நயக்கிளவி; எள்ளல்; மூரல்; சிரிப்பு; சிரித்தல்; அசதியாடல்; நக்கல் என்று நிகண்டு நூல்கள் விளக்கம் தருகின்றன. நகை என்பதற்கு ‘அணிகலன்’ என்ற பொருளும் உண்டு.
நகை என்ற மெய்ப்பாடு தோன்றுவதற்கான காரணங்களாகத் தொல்காப்பியர்,
“எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய் : 4)
என்கிற நூற்பாவின் மூலம் எடுத்துரைக்கின்றார். இதன் வழி நகையானது இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது ஆகிய நான்கு காரணங்களால் தோன்றுகிறது என்றகிறார்.
“நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு” (குறள் - 953)
என்ற குறளில்
எக்காலமும் திரிப்பில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும் இகழாமையும் உரியனவாம் என்று இகழ்தல் பொருளில் வந்துள்ளதை அறியமுடிகிறது.
அழுகை
அழுகை என்பது கண்களிலிருந்து நீரைச் சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை எனும் மெய்ப்பாடு தன் மாட்டும், பிறர் மாட்டும் பிறக்கும் எனக் கூறுவர். அழுகை என்பது இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கு காரணங்களால் ஏற்படும் என்பதை,
“இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல். மெய் : 5)
என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார்.
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற் பயக்கும் நற்பாலனவை” (குறள் : 659)
ஒருவன் தீய செயல்களைச் செய்வது பிறரை வருத்திப் பெற்ற செல்வம் எல்லாம் அவன் அங்ஙனம் வருந்துமாறு செய்து, அவனை விட்டு நீங்கிப் போகும். தூய செயல்களால் வந்த பொருள்களோ, முன்பு இழக்கப்படினும் பின்பு வந்து பயன் தரும் என்று இழிவு என்ற பொருளில் தொல்காப்பிய மெய்ப்பாடு வந்துள்ளதைக் காண முடிகின்றது.
“வறியார்க்குஒன்று ஈவதே ஈகையற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர நுடைத்து” (குறள் : 221)
வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது என்று வள்ளுவர் கூறுவதில் வறுமை என்கிற அழுகை பொருள் வந்துள்ளதைக் காணமுடிகிறது.
மருட்கை
மருட்கை என்னும் சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் காரணங்களால் தோன்றும். இதுகாறும் காணாத ஒன்றைக் காணுதல் புதுமை, அளவிளந்த ஒன்றைக் காணுதல் பெருமை, மிக நுண்ணியனக் காணுதல் சிறுமை, ஒன்றன் பரிணாமம் காணுதல் ஆக்கம் என்பதை,
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (தொல். மெய் : 7)
என்று தொல்காப்பியர் இயற்றியுள்ளார்.
திருக்குறளில் பெருமை என்னும் மெய்ப்பாட்டினை,
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு” (குறள் : 18)
என்ற குறளில் காணமுடிகிறது.
மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது என்று மழையின் பெருமையைத் தெரிவிப்பதாக இக்குறள் அமைந்துள்ளது.
அச்சம்
அஞ்சத் தக்கவற்றைக் கண்டு அஞ்சுதல் அச்சமாகும். அணங்கு, விலங்கு, கள்வர், இறை (அரசன்) என்னும் நான்கு பொருள்களாலும் அச்சம் பிறக்கும் என்பதை,
“அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல். மெய் : 8)
எனத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசனால் அச்சம் ஏற்படும் என்பதை,
“அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறது” (குறள் : 1075)
கீழ்மக்களின் ஒழுக்கத்திற்கு ஒரே காரணம் தம் தீயொழுக்கம் கண்டுபிடிக்கப்பட்டால் அரசனால் தண்டனை வரும் என்று அஞ்சும் அச்சமே. அது தவிர தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாலும் சிறிது ஒழுக்கம் உண்டாம் என்று திருக்குறளில் வாயிலாக அறிய முடிகிறது.
பெருமிதம்
பெருமிதம் என்பது வீரம். கல்வி, தறுகண், இசைமை, கொடை என்னும் நான்கு பொருள் பற்றி தோன்றும். கல்வி என்பது தவமுதலாகிய விச்சை, தறுகண் என்பது அஞ்சத் தக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமை என்பது புகழெனின் உயிருங் கொடுத்தல்; பழியெனின் உலகுடனும் வரினும் கொள்ளாது நிற்றல்; கொடை என்பது உயிர், உடம்பு, உறுப்பு முதலிய எல்லாவற்றையும் கொடுத்தல், இவற்றின் காரணமாகப் பெருமிதம் உண்டாகும் என்பதை,
“கல்வி தறுகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல். மெய் : 9)
என்று தொல்காப்பியர் விளக்கியுள்ளார்.
“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள் : 236)
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது.
மேற்கண்ட குறளின்வழி, பெருமிதம் இசைமைக் காரணமாகத் தோன்றியதை அறிய முடிகிறது.
வெகுளி
வெகுளி என்பது சினம். இது வெறுப்பின் காரணமாக எழுவது. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்பவற்றின் வாயிலாக இஃது பிறக்கும் என்பதை,
“உறுப்புறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (தொல். மெய் : 10)
என்ற நூற்பா வழி விளக்கியுள்ளார்.
எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும் என்று வள்ளுவர் வெகுளி (சினம்) யின் தன்மையை,
“மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்” (குறள் : 303)
என்ற குறளின் வாயிலாக தெளிவுப்படுத்துகின்றார்.
உவகை
உவகை என்பது காமம் அல்லது மகிழ்ச்சி என்று பொருள்படும். செல்வம், அறிவுடைமை, புணர்ச்சி விளையாட்டு ஆகியவற்றால் உவகை தோன்றும் என்பதை,
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல். மெய் : 7)
என்ற அடிகளின் வாயிலாகத் தொல்காப்பியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது. அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம் என்று புணர்ச்சியினால் உண்டாகும் உவகையை,
“தம்மில் இருந்து தமது பாத்து உண்டாற்றல்
அம்மா அரிவை முயக்கு” (குறள் : 1107)
என்ற குறளின் மூலம் தொல்காப்பியர் வழி நிறுவியுள்ளார்.
முடிவுரை
* மெய்ப்பாடு மற்றும் மெய்ப்பாட்டின் வகைகள் பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.
* தொல்காப்பியர் கூறிய முப்பதிரண்டு வகையான மெய்ப்பாட்டு யுக்திகளும் திருக்குறளில் பயின்று வந்துள்ளதைக் காண முடிகிறது.
* தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களுடைய பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் எடுத்தியியம்பும் காலக் கண்ணாடி என்பதை இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
* சங்ககாலம் முதல் இக்காலம் வரை மெய்ப்பாட்டு வகையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதைக் காண முடிகிறது.
* மேலும், உடலின் அங்க அசைவுகளால் மெய்ப்பாடு தோன்றுகின்றது என்றும் ஐம்பொறி மாட்டு நிகழக் கூடியதென்றும் அறிய முடிகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.