இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

107.கணினித் தமிழ் வளர்ச்சியின் மரபுச் சிந்தனை


ஜா. ஸ்டெல்லா மேரி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02

முன்னுரை

மரபு என்பது, நம் முன்னோர்கள் பின்பற்றிய நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், சமயம், மொழி, இனம் ஆகியவற்றை நாமும் பின்பற்றுவதையேக் குறிக்கும். அந்த வகையில் தமிழ் மொழி என்பது மரபு அடிப்படையில் ஆராயும் போது, அவற்றின் வளர்ச்சியினைக் குறிக்கும். நாம் பின்பற்றிய தமிழ் மொழி, தாய்மொழி இன்றும் சிதையாமல் எந்த நூற்றாண்டிலும் செம்மையாகவும், சீரிளமையுடனும் வளர்ந்து வரும் என்பதற்கு அடையாளமாகத் தமிழ் மொழி ‘செம்மொழி’ என்ற சிறப்பை 2004 அக்டோபரில் பெற்றுள்ளது. தமிழ் மொழியானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ், அறிவியல் தமிழ், கணினித் தமிழாக வளம் பெற்று இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணினித் தமிழ் என்ற வளம் பெற்று இணையம் என்ற இணையற்ற அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ச்சியில் தமிழ் மொழியானது கன்னித்தமிழாய் உலகலாவிய வலைத்தளங்களில் வலம் வருவதை இந்த ஆய்வின் வழி விளக்கப்படுகிறது.

மரபு என்பதற்கான விளக்கம்

மரபு என்பதை,

“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே” (நூற்பா எண் : 387)

என்கிறது நன்னூல். ‘அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும்’ என்பதே இதன் பொருள். சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவதும் மரபே. பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு (Tradition) என்கிறது தமிழ் அகராதி. ஒரு காலத்தில் செய்யப்படுகின்ற செயல்களில் உண்மையும் நன்மையும் இருப்பின் அவை பின்வரும் தலைமுறையினரால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிவழியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவையே பின்னாளில் மரபாக நிலைத்து விடுகின்றன. பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகள் ஆகும். ஊர்தோறும் நாடுதோறும் மக்களினம் வாழும் இடந்தோறும் இம்மரபுகள் நீக்கமற நிறைந்துள்ளன. மரபு என்ற சொல் இன்று மரபியல், மரபினம், மரபுக் கூறு, மரபுக் கலை, மரபுத் தொடர், மரபு நோய், மரபணு என்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருவதை அறியலாம்.



திருக்குறளில் மரபுச்சிந்தனை

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்ற திருக்குறளில் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் சொல். சக்தியைப் பாகத்தில் உடையது பரம்பொருள் என்று இதற்கு ஒரு சைவ மரபு உரை உண்டு. சிவபெருமானை அம்மையப்பனாகவே சிந்தனை செய்தல் வேண்டும். வழிபடுதல் வேண்டும் என்ற மரபு வழி வழி பின்பற்றப்படுகிறது. சிவபெருமானும் அருளிச் செயல் நிகழும் போதெல்லாம் பெண் சுமந்த பாகத்தனாகவே எழுந்தருளி அருள்பாலித்துள்ளான். “பெண் சுமந்த பாகத்தன்” என்று போற்றுவது உலகியல் தமிழ் மரபு என்று குன்றக்குடிஅடிகளார், திருவாசக தேன் என்ற நூலில் திருக்குறளின் சிந்தனை மரபைக்கூறியுள்ளார்.

தொல்காப்பிய மரபுச் சிந்தனை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மரபியலில் மரபு சிந்தனை பற்றிய செய்திகள் எண்ணிலடங்கா நூற்பாக்களின் வழி கையாண்டுள்ளதை அனைவரும் அறிந்த உண்மையே. உதாரணமாக;

“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே” (நூற்பா : 643)

என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்பதில் தமிழ் மொழியின் சிந்தனைகள் புலனாய்கிறது.

தமிழ் மொழியின் தோற்றம்

மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப்போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது, “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். சிவபெருமானின் உடுக்கையில் பிறந்தவை தான் தமிழ் மொழி என்றும். சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழ் மொழியும் கொடுத்தார் என்று பல்வேறு இலக்கியங்கள் இத்தகவல்களைப் பதிவு செய்துபோதிலும் தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளுக்குக்கும் மூத்த மொழி என்பது இன்றய தமிழக அரசால் செம்மொழி என்ற அடையாளத்தைப் பெற்றதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டும். தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழின் தொன்மையைத் ‘தமிழென கிளவியும் அதனோரற்றே’ என்ற நூற்பாவழி பதிவு செய்கின்றது. அதேபோல் சங்கஇலக்கிய நூலான புறப்பாடலில் ‘தமிழ்கெழு கூடல் தன்கோல் வேந்தே’ அகப்பாடலிலும் ‘தமிழ்கெழு மூவா காக்கும்’ என்ற வாpகள் தமிழ் என்ற சொல்லாட்சி நிலவியுள்ளதைப் பதிவு செய்கின்றன. இதிலிருந்து தொன்மையான மொழி மற்ற மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மொழி இன்றும் வழுவாமல் கணினியில் தோற்றம் பெற்றுள்ளதை அறியலாம்.



கணினியில் தமிழ் மொழி தோற்றம்

1980ஆம் ஆண்டு கணினியில் தமிழ் எழுத்துருக்கள் தோன்றியுள்ளன. காரணம் இந்தக் காலக்கட்டத்தில்தான் தனிமேசை கணினி (அ) தனியாள் மேசைக்கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன. இந்த விற்பனையாளர்கள் தான் (1983-1984)ம் காலகட்டத்தில் தழிழைக் கணினியில் கொண்டு வர முயற்சிகள் செய்துள்ளனர்.

1984இல் கனடாவில் வாழும் காலநிதிஸ்ரீநிவாசன் என்பவரால் முதன் முதலில் ஆதமி (Admi) என்ற ஒரு தமிழ் மென்பொருள் ஆவணம் உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளலாம். இவை அக்கால IBMDOS, 2.X இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ஆதவின்’, பாரதி (சிங்கப்பூர், மலேசியா) நாடுகளில் தமிழ் மொழி கணினிப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களாகும்.

தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்

1980களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி என்பரால் ஒரு தமிழ் எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. முதற்பகுதியில் ‘மக்கின்டாஸ்’ கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Font) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1984ல் ஆதமி உருவாகுவதற்கு முன்னரே ஜியார்ஜ்ஹார்ட் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து யூனிக்சில் என்ற எழுத்துரு தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைப் பாலசுவாமிநாதன் என்பவர் அறிமுகப்படுத்தினார். இதன் வழியாக ஐ-ட்ரான்ஸ் (itrans) என்ற நிறுவனம் யூனிக்சில் கணினியில் தமிழ் எழுத்துக்களை அடிக்கவும் எழுத்துப் பெயர்ப்பு (Transliteration) முறைக்குப் பயன்படுத்தப்பட்டது. சான்றாக, அம்மா என்பதற்கு amma என்று விசைப்பலகையில் தட்டச்சு செய்யப்பட்டது. இவற்றிற்கு மென்பொருள் தேவையில்லை. தமிழில் எழுத்துருக்களைப் பல வல்லுனர்களும் தனக்கென்ற முறையில் உருவாக்கியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் எழுத்துருச் சிக்கலிலேயே முடிந்துள்ளது. இறுதியாக முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் உருவாக்கிய மைலை (Mylai), பாமினி (Bamini) போன்ற எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக ஆங்கிலக் கோப்புகள், அட்டவணைகள் தமிழ் மாற்றம் பெற்று தமிழில் பயன்படுத்த முடிந்தது. இன்று ஒருங்குறி (Unicode) எழுத்துருக்களே அதிகஅளவில் பயன்பாட்டில் உள்ளன.

கணினி விசைபலகையின் சிக்கல்களும், தீர்வுகளும்

கணினியைப் பொருத்தமட்டில் விசைப்பலகை ஆங்கிலத்தில் உள்ளதால் தமிழில் தட்டச்சு தெரிந்தவர் மட்டுமே தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்யமுடியும். அவ்வாறு தட்டச்சு செய்யும் போது விரும்பிய எழுத்துக்களில் தட்டச்சு செய்தால் அவை மற்றொரு கணினியில் தரவிறக்கம் செய்யும் போது எழுத்துரு மாற்றம் ஏற்படும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தமிழக அரசும், கணினி வல்லுநர்களும் இணைந்து தமிழ் 99 விசைப்பலகை என்ற அச்சுமுறையில் TAM, TAB என்ற இருவகை தமிழ் எழுத்துருக்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இவற்றிலும் ஒரு சில குறைகள் உள்ளன என்பதை அறியலாம். கணினி விசைப்பலகையின் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஒருங்குறியீட்டு முறையாகும் இதனைப்பற்றிய செய்திகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.



ஒருங்குறி (Unicode)

ஒருங்குறி அமைப்பாளர்களும், தமிழ் சீர்திருத்தவாதிகளும், தமிழ்மொழியின் சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய முன் வந்த போது, தமிழ்நாடு அரசு கணினியில் தமிழின் சீர்தரம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரசு ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. 1999ம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டின் போது கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அப்போது தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. தகுதரம் இங்கே சமர்ப்பிக்கப்பட்டும் ஏற்கப்படவில்லை. தமிழ்நெட்99 இன் முடிவை இதர பல நாடுகளின் தமிழ்ப்பிரிவுகளும் ஏற்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி சீர்தரமே எல்லோராலும் ஏற்கப்பட்டு இயல்பாகப் பாவனைக்கும் வந்து விட்டது. அத்துடன் தமிழ்நெட்99 இன் தொடர்ச்சியாக தமிழ்நெட் என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடைபெறுகின்றன. உத்தமம் என்ற ஓர் அமைப்பும் இப்பணிகளுக்கு உதவுகின்றது.

தமிழில் ஒருங்குறி முறைமை

தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான ஒருங்குறி (Unicode) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கென்று தனியிடம் கிடைத்துள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில களையப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது.

இந்த ஒருங்குறி (Unicode) முறை வாயிலாகப் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஒருங்குறி முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினிப் பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது.



கணினியில் தமிழ் மொழியின் வளர்ச்சி

கணினியில் இன்று தமிழ் மொழியானது தமிழ் இணையதளங்கள், தமிழ் இணைய இதழ்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (தமிழ் இணைய கல்விக்கழகம்) தமிழ் மின்நூலகம், முகநூல், குறுஞ்செய்தி, குறுஞ்செயலி என்ற சிறப்பான தளங்களில் தமிழ் மொழி கணினிமொழியாக வளர்ச்சியடைந்துள்ளது. அவை:

தமிழ் வலைதளங்கள்

அரசு

* தமிழ்நாடு அரசு இணையத்தளம் - http://www.tn.go.in

* இலங்கை - http://www.priu.gov.lk/tamil/indext.html

கல்வி

* தமிழ்நாடு அரசுப் பாடப் புத்தகங்கள் - http://www.textbooksonline.tn.nic.in/

* தமிழ் இணையப் பல்கலைக் கழகம் - http://www.tamilvu.org/

* கல்விமலர் - http://kalvimalar.dinamalar.com/home.asp

மருத்துவம்

* மருந்து இணையத்தளம் - http://www.marunthu.com/

அறிவியல்

* இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் - http://www.ciks.org/tamil/index.html

* தமிழ் ஜீனியஸ் அறிவியல் கற்கை தளம் - http://edu.tamilclone.com/

வேளாண்மை

* விவசாய தகவல் ஊடகம் - http://www.agriinfomedia.com/

* வேளாண் இணையத் தளம் - http://agritech.tnau.ac.in/ta/index.html

தொழில்நுட்பம்

* தமிழ் தரவுத்தாள் தளம் - http://tharavuthaal.50webs.com/

* தொழில்நுட்பம் (இணையத்தளம்) - http://www.thozhilnutpam.com/

இலக்கியம்

* தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் - http://encyclopediatamilcriticism.com/

தமிழ்க்கணிமை

கணித்தமிழ் சங்கம் - http://www.kanithamizh.in/

மின்னூலகங்கள்

* தமிழகம்.வலை - http://www.thamizhagam.net/index.html

* சென்னை நூலகம்.காம் - http://www.chennailibrary.com

* தமிழ் இணைய நூலகங்கள் - http://www.tamilvirtuvaluniversity.com

நூலகம் திட்டம்

* மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம், விருபா இணையத்தளம்

பண்பாடு

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் அகராதி

* தமிழ் மின் அகராதி (வலைத்தளம்) - http://www.tamilpadi.com/



வரலாறு

* வரலாறு (வலைத்தளம்) - http://www.varalaaru.com/

மனித உரிமைகள் சட்டம்

* மக்கள் சட்டம் (வலைத்தளம்) - http://www.makkal-sattam.org/

வாழ்வியல்

* தன்னம்பிக்கை - http://www.thannambikkai.net

இசை

* தமிழ் இன்னிசை.அமை - http://www.tamilinnisai.org

சமூகப் பிரச்சினை

* தமிழ் அரங்கம் - http://www.tamilcircle.net/

தகவல் களஞ்சியம்

* களஞ்சியம் (இணையத் தமிழ் கலைக்களஞ்சியம்) - http://www.tamilsurangam.com/

* அருவம் (உங்களுக்கு தெரியுமா ஃ தகவல் களஞ்சியம்) - http://www.aruvam.com/

* சாந்தன் (வலைத்தளம்) - http://www.santhan.com/

வலைவாசல்

* சிபி தமிழ் - http://tamil.sify.com/

* வெப்துனியா - http://tamil.webdunia.com/

* எம். எசு. என் தமிழ் - http://tamil.in.msn.com/

* யாகூ தமிழ் - http://in.tamil.yahoo.com/

* எ. ஒ. எல் தமிழ் - http://www.aol.in/tamil/

* தட்சு தமிழ் - http://thatstamil.oneindia.in/

* இந்நேரம் - http://www.inneram.com/

* தமிழ் ஸ்ரார் - http://www.tamilstar.com/tamil/

* தமிழ் சமூக வலைத்தளம் - http://www.eluthu.com/

கருத்துக்களம்

* தமிழ் சமூக வலைத்தளம் - http://eluthu.com/ennam/

* கருத்து - http://www.karuthu.com/

* தமிழ்மன்றம் - http://www.tamilmantram.com/vb/



தமிழ் இணைய இதழ்கள் (அ) மின்னிதழ்கள்

* தமிழகம்.வலை - http://www.thamizhagam.net/index.html

* கீற்று - http://www.keetru.com

* திண்ணை - http://www.thinnai.com

* பதிவுகள் - http://www.pathivukal.com

* முத்துக்கமலம் - http://www.muthukamalam.com

* நிலாச்சாரல் - http://www.nilacharal.com

* தமிழம் - http://www.thamizham.net

* காலச்சுவடு - http://tamil.sify.com/kalachuvadu

* உலகத்தமிழ் - http://www.ulagathamizh.com

* தமிழ்நெட் மலேசியா - http://www.tamilnetmalaysia.com

* தமிழ்வாணன்.காம் - http://www.tamilvanan.com

இலக்கியம்

* புதுவிசை - http://www.puthuvisai.com

* உன்னதம் - http://www.unnatham.keetru.com

* உங்கள் நூலகம் -http://www.noolagam.keetru.com

* தீம்தரிகிட - http://www.dheemtharikida.com

* புதிய காற்று - http://www.puthiyakaatru.keetru.com

* கூட்டாஞ்சோறு - http://www.koottanchoru.com

* அநிச்ச - http://www.anicha.keetru.com

* விழிப்புணர்வு - http://www.vizhippunarvu.com

* மனஓசை - http://www.selvakumaran.de

பெண்ணியம்

* பெண்கள் - http://www.selvakumaran.de/pennkal.html

ஈழம் மாற்றுக்கருத்து பார்வைகள்

* தமிழ் அரங்கம் - http://www.tamilcircle.net/

ஈழம்-புலிகள்

* புதினம் - http://www.puthinam.com

* சங்கதி - http://www.sankathi.net

* தமிழ்நாதம் - http://www.tamilnaatham.com

* நிதர்சனம் - http://www.nitharsanam.com

சமூகம்

* வினவு - http://www.vinavu.com/

* தலித் முரசு - http://www.dalithmurasu.com

* புரட்சி பெரியார் முழக்கம் - http://www.puratchiperiyarmuzhakkam.com

தமிழ்த் தேசியம்

* தென்செய்தி - http://www.thenseide.com

* தமிழர் கண்ணோட்டம் - http://tamizharkannotam.blogspot.com/

திரைப்படம்

* ‘நிழல்’ நவீன சினிமாவுக்கான களம் - http://www.nizhal.in

* சினிமா எக்ஸ்பிரஸ்.காம் - http://www.cinemaexpress.com



முடிவுரை

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் மொழியானது கணினி வழியாக இணையத்தில் வலைமனைகளாக, இணைய தளங்களாக, இணைய இதழ்களாக வளம் பெற்று அவை ஆன்மீகம், இலக்கியம், சமயம், மருத்துவம், கவிதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், கணிதம், பெண்கள், சிறுவர்கள் போன்ற பல்வேறு தளங்களின் செய்திகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு அவற்றில் தமிழில் தொன்மையும், பழமையும் இலக்கியங்களின் சாரத்தையும், இலக்கியங்களின் கட்டுப்பாட்டையும் சங்க இலக்கியத்திலிருந்து இக்கால இலக்கியம் வரை எடுத்துரைப்பதால் கணினித் தமிழ் என்றுமே வளம் பெற்றுதான் வருகிறது என்பதை இவ்வாய்வின்வழி விளக்கப்படுகிறது.

துணைநின்ற நூல்கள்

1. தமிழும் கணினியும், இராதாசெல்லப்பன், கவிதை வெளியீடு, 8அ, மகாலெட்சுமி நகர், கே.கே.நகர், திருச்சி - 620 021.

2. இணையமும் இனிய தமிழும், க.துரையரசன், இசைப்பதிப்பகம், 24, சபரிநகர், மூர்த்திசாலை, கும்பகோணம் - 612 001,

3. இணையத்தில் தமிழ் தரவுத்தளங்கள், துரைமணிகண்டன், கௌதம் பதிப்பகம், 2, சத்தியவதிநகர், முதல் தெரு, பாடி, சென்னை 600 050

4. தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசனார், சாகித்திய அக்காதெமி வெளியீடு

5. http://www.minnithal.com

6. http://www.tamilnadutalk.com/portal/topic/966


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p107.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License