இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

116.ஸ்ரீபதியின் “பறவையாடிப் பழகு” காட்டும் சமுதாய நிலை


முனைவர் வ. கணபதிராமன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
தொலைதூரக் கல்வி இயக்ககம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்

முன்னுரை

சமுதாயச் சிக்கல்களை மையமாக வைத்துப் புதிய இலக்கியம் படைத்தோருள் ‘ஸ்ரீபதி’ இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளார். இவர் முரண்பட்ட பல்வேறு சமூகச் சிக்கல்களைக் கருவாகக் கொண்டு பல சிறு கதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் ‘பறவையாடிப் பழகு’ சிறுகதை புலப்படுத்தும் சமுதாய நிலையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சமுதாயம்

“சமுதாயம் என்பது பொதுநல ஸ்தாபனம், சங்கம், கழகம், சமுதாயத்தில் வசதிமிக்கவர்கள் போன்ற விளக்கங்களைச் சமுதாயத்திற்குரியது” என பெரிய லிப்கோ அகராதி சமுதாயம் குறித்து விளக்குகிறது. “ஒன்றுபட்டால் அல்லது ஒன்று கூடினால் மட்டும் சமுதாயம் ஆகாது. சமூகத்தில் அங்கமாயிருக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்பதும் இன்றியமையாதது” என்பர்.

சமூகம்

சமுதாயம் என்பது ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடிய அமைப்பாகும். குழந்தைகள் பெற்றோரையும், பெற்றோர் சமூகத்தையும் சார்ந்து வாழ்கின்றனர். சார்ந்து வாழ்தலே மனிதப் பண்பு. “ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட நாட்களாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சமூகம்” ஆகும் (கலைக்களஞ்சியம் தொகுதி-4, ப. 477) “சமுதாயம் என்பதற்கு மக்களின் திரள், பொருளின் திரள், பொதுவானது சட்டம், சபை பின்னணி” என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது (கதிரைவேற்பிள்ளை மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 538)

சமுதாயமும் இலக்கியமும்

எந்தவொரு படைப்பாளனும் தான் படைக்கும் இலக்கியத்தை ஒரு சமுதாயம் சார்ந்தே எழுதுகிறான். சமுதாய நோக்கமற்ற இலக்கியம் சிறகற்ற பறவை. சமுதாயத்தில் தன்னை ஓர் அங்கமாகக் கருதிக் கொண்டு படைப்பாளன் படைக்கும் படைப்புக்களே சமுதாய இலக்கியங்கள் ஆகும். இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை அறிதற்குச் சிறந்த இலக்கிய நூல்களே பெருந்துணை புரிகின்றன.

சமுதாயம் வாழ்ந்த வாழ்வினைக் காணவும், இலக்கியத்தை அறியவும் பண்பாடு, நாகரீகம் குறித்துத் தெளியவும் அவர்களிடையே வளர்ந்துள்ள இலக்கியமும் கலைகளும் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் ‘இலக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது சமூகவியல்” என்பார் க. கைலாசபதி (சமூகவியலும் இலக்கியமும், ப.5)

சமுதாயத்தின் இன்றைய நிலை

சமுதாயத்தில் “நல்ல இலக்கியம் என்பது சமூகத்தில் நடைபெறும் காரண காரியங்களுடன் சித்தரிப்பது ஒருவகை படைப்பின் திறத்தோடு இணையச் சமுதாய மாற்றத்தை முன் மொழிவது இன்னொரு வகை ஆகும். புனைகதைகளில் அல்லது கதை சார்ந்த கவிதைகளில் சமுதாயத்தின் மாற்றத்தை மிக எச்சரிக்கையாக அணுக வேண்டும்” என்பார் தி.சு. நடராஜன் (திறனாய்வுக்கலை, பக். 63-64)

சமுதாயத்தின் அடிப்படை வசதிகள் பெருகும் பொழுது மாற்றம் நிகழும். சமுதாய மாற்றம் என்பது இலக்கியத்தைப் பொறுத்தளவில் படைப்பாளனுடைய சமுதாய உணர்வினையும் உலகக் கண்ணோட்டத்தினையும் பொறுத்தே அமைகிறது.



சமுதாயப் பணி

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. “மனிதன் தன்னந்தனியாக வாழ்பவன் அல்லன். கூடிவாழும் இயல்புடையவன். மனிதனின் ஆளுகை சமுதாயத்தின் மீதும், சமுதாயத்தின் ஆளுகை தனி மனிதன் மீதும் இறுகப் படிந்து ஒன்றையொன்று பற்றிக் கொண்டே இருக்கின்றன” என்பார்.

முதியோர் நிலை

தன் பிள்ளைகள் நலனுக்காகத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பெற்றோர் ஆவர். தம்முடைய வயோதிக நிலையின் தன் பிள்ளைகளின் அன்பான உபசரிப்பாவது கிடைக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. தன்னைப் பெற்று வளர்த்து இவ்வளவு பெரிய நிலைமைக்கு உயர்த்தியவர்கள் நம் பெற்றோர் என்பதை மறந்து அவர்களை ஒதுக்க நினைக்கிறார்கள்.

“அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும்
அவன் கட்டுன வீட்டுக்குள்ள போகல. அவன்
சம்பாத்தியத்துல கை நனைக்கல” (ப.ப., ப. 30)

‘லூசுக்கிழவியும் ரேசன் அரிசியும்’ என்ற கதையில் வயதான கிழவியின் வைராக்கியத்தையும் பிள்ளைகளின் மனப்போக்கையும் இடித்துரைக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை (அலுவலக மகளிர் நிலை)

இன்றைய சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. இருப்பினும் வேலைக்குச் செல்லும் பெண்களை அதிகாரிகளும், உரிமையாளர்களும், ஏனையோரும் அவர்களின் மனங்களில் உள்ள சபலப் புத்திகள் மூலம் பெண்களின் வாழ்வினைப் பறித்து கேவலப்படுத்திவிடுகின்றனர்.

“நாயை விடக் கேவலமாக சிலர் பாக்குறதும்,
நாய் மாதி நாக்கை தொங்கப் போட்டுப் பலர்
பார்க்கிறதும் அருவருப்பாக இருந்தது” (ப.ப., ப. 51)

என்று அதிகாரிகள் பார்க்கும் பார்வையினை ஆசிரியர் ‘பலான மனிதர்கள்’ என்ற கதையில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.



விஞ்ஞானத்தால் ஏற்படும் விபரீதம்

இன்றைய அறிவியல் உலகம் எல்லையற்று விரிந்து பரந்து செல்கிறது. அதன் வளர்ச்சியில் பல எண்ணற்ற செயல்களைச் செய்து கொண்டு வருகின்றது. அறிவியல் வளர்ச்சியால் மனிதன் உயர்ந்து வந்தாலும், நிம்மதியற்று வாழும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைய அனுயுகத்தின் அதிவேக முன்னேற்றத்தை “இன்னொரு உலகம்” என்ற கதையில் ஸ்ரீபதி,

“கடந்த ரெண்டு நூற்றாண்டுகளாக ஓசோன்
ஓட்டையைச் செயற்கை முறையில நாம்
அடைச்சிக்கிட்டுத் தான் இருக்கோம்” (ப.ப., ப. 17)

என்று அழகாகச் சித்திரிக்கிறார்.

ராணா சிரித்துக் கொண்டே,

“உண்மை தான், நாம ஒரு பக்கமா அடைக்கும்போது
அதைவிட பெருசா இன்னொரு பக்கம் ஓட்டை விழுதே.
இயற்கை தன்னைத் தானே சமச்சீர் செய்யாமல்
நம்மளால செயற்கை முறையில தகவமைப்பு செய்ய முடியாது” (ப.ப., ப. 17)

என்பதை ‘பறவையாடிப் பழகு” வழிச் செயற்கை முறையில் இன்னொரு உலகம் செய்தாலும் ஈடாகாது என்று கூறியுள்ளார்.

‘மைக்ரோ ப்ராப்ளம்’ என்ற கதையில் உலக கம்ப்யூட்டர்கள் எல்லாம் நின்றுவிட்டால் அணுகுண்டுகள்கூட தானாக வெடித்துவிடும் என்பன போன்ற செய்திகள் உலகையே பயமுறுத்துகிறது. இந்தக் கதையில் கம்ப்யூட்டர்கள் எல்லாம் தாறுமாறாகச் செய்திகளைச் சொல்லி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதை,

“எனக்குத் தெவசம் பண்ண இன்னைக்கு பர்மிசன்
கொடுத்து என் மகனுக்கு மெசேஜ் வந்திருக்கு” (ப.ப., ப. 81)

என்னும் சிறுகதை வரிகள் காட்டுகின்றன. சமூகம் விஞ்ஞானத்தை முழுவதும் நம்பி இருப்பதால் எழும் சமூகச் சிக்கலை ஸ்ரீபதி கிண்டல் செய்கிறார்.

“இயந்திரங்களுடன் இயங்கி இயங்கி இவர்களுக்குள்ளும்
மனிதத் தன்மை என்பது மறைந்து விடுகிறதோ?” (ப.ப., ப. 87)

எனும் வரிகளில் ஆசிரியர் சமூகத்தைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

“தாயே சேயாக” என்ற கதையில் இன்று ‘குளோனிங்’ முறையால் ஆடு, மாடுகளை உருவாக்கியிருக்கின்றார்கள். அதேபோல் அச்சு அசலாக புதிய உயிரை உண்டாக்கும் முறையே குளோனிங். ஒருவர் உடம்பிலிருந்து ஒரு ‘செல்’லை எடுத்து அதைக் கருவாக உருவாக்குவது குளோனிங் முறையாகும். சமுதாயத்தில் இதை ‘வாடகைத்தாய்’ என்று அழைப்பர்.

“தாயைச் சேயாக்கி வளர்த்துக் கொள்ள வகை செய்த
விஞ்ஞானத்தை வியக்காமல் இருக்க முடியுமா?” (தா.சே., ப. 63)

என்று கதையில் வரும் வரிகளின் வழி விஞ்ஞானத்தால் நன்மை ஏற்பட்டாலும், அதே விஞ்ஞானத்தில்

“உங்களுக்கு வாரிசு வேணும்னு இந்த குளோனிங்கைப்
பயன்படுத்தி இருக்கோம் நாம். ஆனா இதை வச்சு அடிமைகளை
உருவாக்கிட்டா … இந்த உலகமே நெனச்சுப் பார்க்க
முடியாத அளவுக்கு மோசமாகி விடும்” (ப.ப., ப. 65)

என்று கதையில் விஞ்ஞானத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினால் விபரீதம் ஏற்படும் என்பதையும் சுட்டியுள்ளார்.



இன்றைய காதலின் நிலை

காதலும், வீரமும் சங்க காலத்தில் மக்கள் வாழ்க்கையின் இரு கண்களாகப் போற்றி மதிக்கப் பெற்றன. இவ்வகையில் காதல் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப் பெற்றது. காதல் என்பது மக்களின் அகவாழ்வை ஒருங்கிணைப்பதாக அமைகின்றது. அன்றிலிருந்து இன்றுவரை தோன்றிய பல இலக்கியங்களின் பாடுபொருள்களும் காதலாகத் தான் காணப்படுகின்றன.

காதல் ஒவ்வொரு உயிரினமும் அதனுடன் எட்டி உறவாகும் வாழ்வு ஆகும். அன்பின் வெளிப்பாடு காதல் என்பர். சமுதாயத்தில் காதல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காதல் எந்த அளவிற்கு உண்மை என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது. காதல் என்பது ஒரு பருவத்தின் ஏக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

“கவிதையைக் கூட காசுக்கு வாங்கி காதலைச்
சொல்பவனை நம்பி விடாதே” (ப.ப., ப. 37)

என்று அப்பா தன் மகளுக்குக் கூறும் அறிவுரையில் கவிஞனை கேலி செய்வதையும் அறிய முடிகின்றது.

ஏழைகளின் நிலை

சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை ஏழ்மையின் நிலை படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது” (குறள், 104)

என்று வள்ளுவரும் வறுமையை எடுத்துக் காட்டுகின்றார்.

ஒரு குடியிருப்பைச் சேர்ந்த பூமியில் கிரானைட்கல் எடுக்க நிலம் வாங்கி உள்ளனர். அதனால் அடிக்கடி வெடிகள் வைப்பதால் அங்கு வாழும் குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபமான நிலையாகக் காணப்படுகிறது என்பதனை,

“நிலநடுக்கம் வந்தது போல் வீடுகள் இலேசாக ஆடின. பிள்ளைகள் சாப்பிட்டுக்
கொண்டிருந்த பழைய சோற்றில் புழுதி விழுந்தது. எப்போதும் நடப்பது தான்
என்பதால் அதைப் பிள்ளைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பசியால்
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்” (ப.ப., ப. 71)

‘கல்’ என்ற கதை வரிகளின் வழி ஏழைக் குடும்பங்களின் நிலையை ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளமையை அறியலாம்.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகர்ந்து செல்கிறது. மனித குலத்தின் அறியாமை மூடநம்பிக்கைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. இன்றைய சமுதாயத்தில் குழந்தையின்மை நிலை அதிகமாக இருக்கிறது. மக்களின் நம்பிக்கையில்தான் ஒவ்வொரு செயலும் நடைபெறுகிறது.

“ஒரே நேரத்துல ஒரு குடும்பத்துல அம்மா, மக, மருமக மூணு பேரும்
குழந்தை பெத்து மூணு தொட்டில் கட்டி ஆட்டுன வீடுன்னு அர்த்தம்” (ப.ப., ப. 70)

இந்த வீட்டை விலைக்கு வாங்கினால் நமக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையை ‘முத்தொட்டில்’ என்ற கதை அழகாக எடுத்துக் கூறுகிறது.

தொகுப்புரை

சமூகம் என்ற சூழலில் இலக்கியம் உருவாவதையும், அதன் வளர்ச்சியையும் அறிய முடிகின்றது. ஸ்ரீபதி சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் சித்திரித்துள்ளார். ஸ்ரீபதி சிறுகதைகளில் முதியோர்களின் நிலை, விஞ்ஞானத்தால் ஏற்படும் விபரீதம், அலுவலகப் பெண்களின் நிலை, இன்றைய காதலின் நிலை, மக்களின் நம்பிக்கை, ஏழைகளின் நிலை என்று பல கோணங்களில் சமுதாயத்தைப் பற்றி இவர் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p116.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License