இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

21. ஆரியமொழி உயர்வும் தமிழ்மொழி தாழ்வும்


க. கருப்பசாமி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

முன்னுரை

பண்டையக் காலத்தில் ஆரியர்கள் இந்தியாவில் நாடோடிகளாகப் புகுந்து தமிழ் மக்களோடு மக்களாகக் கலந்து தங்களது கருத்துகளையும் ஆரிய மொழியையும் தமிழ் இலக்கியத்தில் புகுத்தி ஆரிய மயமாக்கும் பொருட்டு, தொல்காப்பியர் காலம் முதல் இன்றைய காலம் வரை நூலும் நூல் உரைகளும் ஆரியப் பிராமணத் தமிழ்ப் புலவர்களால் தமிழ் மொழிகளைத் தாழ்த்தி வடமொழியான ஆரியமொழியை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

ஆரிய மொழியின் தாக்கம் தமிழில் மிக மென்மையாக முதலில் தொடங்கிக் காலப்போக்கில் மொழிக் கலப்பாக மாறிப் பின்னர் மொழி ஊடுருவலாக வலுப்பெற்றுச் செல்வாக்கடைந்து, தமிழ் மொழியைத் தாழ்த்தி ஆரிய மொழி இந்தியாவில் எவ்வாறு ஊடுருவியது என்பதைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

மொழி

படைப்பாற்றல் மிக்க மனிதன் படைத்த அருங்கலைகளுள் தலைமை சான்ற கலை மொழிக்கலையே. எண்ணத்தின் வடிவமாகவும், நாகரீகத்தின் சின்னமாகவும், பண்பாட்டின் பிரதிபலிப்பாகவும் திகழும் கருத்துப் பரிமாற்றக் கலையாகவும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், சமுதாய இணைப்புக்கும் துணை செய்து நிற்கின்றது.

மொழி - ஒரு தேசிய இனத்தின் உயிர். ஒரு தேசத்தின் முகவரி. கழிந்து போன காலத்தைப் பிடித்துச் சேமித்து வைக்கும் அதிசயக் களஞ்சியம். ஒரு சமூகத்தின் கருத்துக் கருவூலம். சகமனிதர்களிடையே செயல்படும் தகவல் தொடர்பு நரம்பு மண்டலம். மனிதப் படி மலர்ச்சியில் ஒரு பாய்ச்சல். உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே வாய்த்த அமுதசுரபி என்றெல்லாம் புகழப்படலாம்.

மொழித் தோற்றம்

மொழியின் தோற்றம் மனித சமுதாயத்தின் பல்வேறு தோற்ற நிலைகளோடு பிரிக்க முடியாத வண்ணம் இணைந்துள்ளது. உலகம் முழுவதிலும் ஏறத்தாழ நாலாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன முதன்முதலில் மனிதன் எங்கு தோன்றினானோ அங்கு தான் மொழியும் தோன்றியிருக்க வேண்டும். அந்த வகையில் குமரிநாட்டு மனிதன் தான் முதல் மனிதன். அவன் பேசிய மொழியே முதல் மொழி. அதுவே தாய்மொழியாம் தமிழ்.

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெரும் அவைகளையடங்கும். இவற்றுள் ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித் தொகுதியாகும். துரேனிய மொழியில் திராவிடக் கிளைக்குத் தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினுமினிய தமிழ் மொழியே.

தொல்காப்பியம் மொழி பற்றிய நூலானமையால் போலும், அதன் கண்ணே தமிழ் எனும் மொழிப்பெயர் இடம் பெற்று விடுகின்றது. பனம்பாரனார், இயற்றிய பாயிரம், தொல்காப்பியத் தொடக்கத்தில் அமைந்தது,

“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து”(சி.பா.1-3)

என மொழி பரந்து வழங்கிய நாட்டு விரிவை அளிக்கின்றது. பொருளுடைய மொழிகளாகி, ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ளும் வகையில் அமைவது மொழி. தமிழின் முதல் நூலும், காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியம் மொழி என்பதனைக் கண்டறிந்துள்ளது. சங்க இலக்கியம் மொழி என்ற சொல்லை பாஷை என்னும் பொருளைத் தருகின்றது.

“நிறை மொழி மாந்த ராணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப” (தொல்.செய்.178)

என்றும்,

“தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த்து” (தொல்.மரபு.97)

என்ற நூற்பா மூலம் வடமொழியின் மிகுதியான செல்வாக்குக் காரணமாக, தமிழ் மற்றும் அழிந்த பல திராவிட மொழிகளும், பிற இந்திய மொழிகளும் இன்றுவரை, பாஷை என்ற சொல்லை மொழி என்பதனைக் குறிக்கப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது.



ஆரியர் வருகை

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது கி.மு.1500 - 2000க்குள் எனக் கூறலாம். ஆரியர்கள் தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பு தமிழ் மொழி மிகவும் சிறப்புற்று இருந்தது. ஆரியர்கள் வந்த பின்பு தமிழ் மொழி, தமிழ் நாகரீகம், தமிழர் பண்பாடு முதலிய அனைத்தும் சிதையத் தொடங்கின. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, ஆரியர் இந்தியாவிற்குள் புகுந்து விட்டனர். அவர்கள் மொழி தமிழில் கலக்கத் தொடங்கியது. அதனாலேயே தொல்காப்பியர்,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (தொல்.சொல். 401)

என்று கூறுகிறார். ஆடு, மாடு மேய்க்க வந்த ஆரியர் ஆட்டக் கலையிலும் வல்லவராயினர். தமிழரொடு கலந்த ஆரியர் தமிழ்மொழியைக் கற்றனர். தமிழர் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் கெடுக்க நினைத்தனர். தமிழர்கள் எதிர்த்து நிற்காத அளவிற்குத் துணிவு கொண்டனர். அரசர்களையும், செல்வர்களையும் அண்டியே தனது காரியங்களைச் செய்து கொண்டனர். ஆரியர்களின் வெண்ணிறத்தாலும், வெடிப்பொலி பேச்சாலும், கூத்தாலும் தமிழ் மன்னர்கள் ஆரியர்களுக்கு அடிமையானார்கள்.

ஆரிய மொழிக் குடும்பம்

உலக மொழிகள் மொத்தம் ஏறத்தாழ மூவாயிரம். அவை முப்பது குடும்பம் போல் பகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆஸ்ட்ரிக் குடும்பம், இந்தோ ஆரிய மொழிக் குடும்பம், திபத்தோ சீன மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என நான்கு மொழிக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது ஆரியம், சேமியம், சித்தியம் என மூன்றாகச் சொல்லப் பெறும். இவற்றில் ஆரியம் முதன்மையாகக் கொள்ளப்பெறுகிறது.

ஆரிய மொழிக் குடும்பத்தை பதினொரு பிரிவாகப் பிரிப்பர். அவை இந்தியஆரியம், ஐரேனியம், பாலத்திய சிலாவோனியம், அர்மீனியம், அல்பானியம், கிரேக்கம், இலத்தீனம், செலத்தியம், தியூத்தானியம், தொக்காரியம், இத்தைத்தம். இவற்றுள் முதலாவதாக ஆரியம் அமைந்துள்ளது. ஆரியம் என்னும் பெயர் ஒரு மொழிக் குடும்பத்தைப் பொதுவாகக் குறிப்பதுடன், இந்திய ஆரியத்தைத் தனிப்படக் கூறவும் செய்யும். இதனால் ஆரிய மொழிக் குடும்பம் இந்திய ஐரோப்பியம் அல்லது இந்திய செருமானியம் என்று சொல்லப் பெறும். தொடக்க நிலையிலிருந்தே ஆரிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக்குடும்பம் ஒன்றன் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்தியுள்ள உண்மை நிலையைக் கண்டு கொள்ள முடிகின்றது.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. ஆரிய நாடு, ஆரிய வர்த்தம், ஆரிய பூமி என்று சொல்லப்படுவது இமயமலைக்கும், விந்திய மலைக்கும் இடைப்பட்டதாகும். இந்தப் பகுதி தான் ஆரியர் முதன்முதலாக இந்தியாவில் குடியேறிய இடமாகும். அதனால் தான் ஆரிய மொழிக்கு வடமொழி என்று பெயர்.



தமிழ் மொழி நிலைமை

தமிழ் எல்லாத் துறைகளிலும் தனியாட்சி செலுத்தி முதன்மையாகத் திகழ்ந்தது. இடைக்காலத்தில் வடமொழி தேவபாஷை மூவேந்தரால் ஏற்றுக் கொண்டதால் ஆரியராகிய பிராமணர்கள் நடத்தும் பூஜை காரணங்களுக்கெல்லாம் தமிழ் விலக்கப்பட்டது. வடமொழி பேசுவது உயர்வு என்ற கருத்து நாளடைவில் எழுந்தது. தமிழரசரும் ஒருசில தமிழ்ப்புலவரும் தமிழைப் புறக்கணிக்கவும் தலைப்பட்டனர்.

தமிழ், வடமொழி கிளையெனக் கருதப்பட்டு, 11ம் நூற்றாண்டில் வடமொழி இலக்கணம் தழுவி வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திலிருந்து ஆரியக் கருத்துகளும் தமிழ் இலக்கியத்தில் புகுத்தப்பட்டதால் தமிழ் வரலாற்றிலும், தமிழ் நாட்டு வரலாற்றிலும் புராணக் கருத்துகள் புகுந்தன.

தமிழுக்கும் தமிழனுக்கும் தாழ்வு

வடமொழி வழிபாட்டு மொழியாகவும், சடங்கு மொழியாகவும் வழக்கூன்றிய பின், தமிழ் அவற்றிற்குத் தகாததென்று தள்ளப்பட்டு தன் பழந்தன்மையை இழந்தததுடன், தாழ்வும் அடைந்தது. வடசொற்களைச் சொன்னால் உயர்வும் தென்மொழிகளைச் சொன்னால் தாழ்வும் உண்டாகுமென்ற தவறான கருத்து, தமிழ் மக்கள் உள்ளத்தில் புகுந்ததினால், வடசொற்கள் ஒவ்வொன்றாய் வழக்கில் புகுந்து, ஆயிரக்கணக்கான தூய தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து போயின.

தமிழுக்கு நேர்ந்த தாழ்வு தமிழனுக்கும் நேர்ந்தது. அதனால், பிராமணன் தொட்டதை எல்லாம் தமிழரும் உண்ணலாமென்றும், எத்தணை உயர்ந்த தமிழனாயினும், அவன் தொட்டதைப் பிராமணன் உண்ணக் கூடாததென்றும் சமுதாய மாற்றங்கள் அடைந்தன. இது தமிழ் மக்களின் பொருளியல் வாழ்வைப் பெருமளவில் பாதித்தது.

தமிழ் மக்கள் தமிழின் உயர்வையும், வரலாற்றையும் அறியாது, தம்மைச் சத்திரியரென்றும், வைசியரென்றும் சொல்லித் தமக்கு ஆரியத் தொடர்பு கோரவும், சில உயர் வேளாளர் தம்மைச் சூத்திரர் என்றழைத்து, தம்மை உயர்த்துவது போல் கருத்தில் கொண்டு தம்மை தாழ்த்தும் நிலை ஏற்பட்டு விட்டது.

சூழலும் தாக்கமும்

ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் மற்றொரு மொழி பெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டே தாக்கமும் ஆதிக்கமும் நிகழும். தமிழ்ச் சமூகப் பண்பாடு இலக்கியப் பரப்புகளில் சமஸ்கிருத மொழியோடு தமிழ் கொண்ட தொடர்பு சமஸ்கிருத மொழியின் தாக்கமாக இங்குக் கருதப்படுகிறது.

கி.பி 11ம் நூற்றாண்டில் தமிழ் சமஸ்கிருத மொழிக் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து நடை என்பது அதன் பொருளாகும். சமஸ்கிருதம் இறைவனுடைய மொழியாக போற்றப்பட்ட, இக்காலத்தில் இந்நடையில் எழுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையினை உருவாக்கியது.



வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்பு சமமாக இருக்கவில்லை. சமஸ்கிருதம் தமிழ்மொழி மீது அதிகாரமும் செலுத்தியது. இதை மு.வ பின்வருமாறு கூறுகிறார்,

“பழமையும் தனிமையும் உடைய வளர்ச்சி தமிழ் இலக்கியத்திற்கு இருப்பதைப் பிற்கால வடமொழி அறிஞர் மறந்துவிட்டனர். தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை. எல்லாப் பெருமையும் வடமொழிக்கே என்று வீண் வம்பு பேசினர். தமிழில் உள்ள பல சொற்கள் வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்ற கருத்தைப் பரப்பினர். தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் மதிப்பு கொடுத்து போற்றவில்லை. தமிழை நீச்சபாஷை என்று ஒதுக்கி வடமொழி மட்டுமே தேவபாஷை என்று உயர்த்திப் பேசினார்கள். தமிழ் நூல் அழிப்பு தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து தமிழ்மொழிகளை அழித்து விட்டனர். வடமொழியாளர்கள் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுத்தனர். தமிழரிடத்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியிலிருந்து தமிழிற்கு இவை வந்தன என்றும் கூறினர்.

வடமொழி ஏற்றத்துக்கும், ஆரியர்தம் பெருமைக்கும் துணை நின்று நூலெழுதும் தமிழ்ப் புலவர்களைத் தாங்கிப் போற்றிப் பாராட்டுதலும், உதவிகள் செய்தலும், இதுபோல் இல்லாத தமிழ்ப் புலவர்களை, வடமொழிக்கு துணைநிற்கும் தமிழ்ப் புலவர்களைக் கொண்டு தாக்கவும் முற்பட்டனர்”

முடிவுரை

தமிழும் வடமொழியும் ஏற்கனவே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட மொழிகள். வடமொழி ஒரு காலத்தில் பாரததேசம் முழுவதற்கும் பொது மொழியாக விளங்கியதாலும், தெய்வீக மொழியாகி சமய நூல்கள் தோன்றுவதற்கும், அரசியலில் சிலாசனங்கள் அமைக்கவும் எடுத்தாளப்பட்டதாலும், வடமொழித் தொடர்பு மற்ற மொழிகளுக்கு பெரிதும் தேவைப்பட்டது.

தமிழின் பிள்ளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய தலையாய திராவிட மொழிகள் பிரிவதற்குக் காரணம் சமஸ்கிருதமே. ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியப் பண்பாட்டையும் பரப்பி வருகின்ற நிலையில், தமிழர்கள் விழிப்பின்மை, ஒற்றுமையின்மை, மொழியறிவு, உணர்வின்மை, துணிவின்மை முதலியவற்றால் வடமொழி ஊடுருவலைத் தடுக்க தமிழ்மொழிக்கென போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

‘ஆரியர் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பர்’ என்ற பழமொழியை மனதில் எண்ணிக் கொண்டு ஆயிரக் கணக்கான வருடங்களாக அடிமைகளாகவும், ஏமாளிகளாகவும் இருந்த தமிழ் மக்கள் விழிப்புற வேண்டும்.

கடந்த மூவாயிரம் ஆண்டாகத் தமிழர்களின் உள்ளத்தில் ஊட்டப்பட்ட ஆரிய நஞ்சை உடனே வெளியேற்ற முடியாததால் படிப்படியாகத் தமிழர் சமுதாயம் திருந்தி வர வேண்டும். ஆரியர்களுக்குத் தமிழே தாய் மொழியாக இருந்தும், அவர்களுக்கு அடிமைப்பட்ட அரசியல் கட்சியாளரின் பேதமையாலும், வேற்று மொழிகளேப் போற்றப்பட்டு நாட்டுமொழி தூற்றப்படுகிறது. இந்தநிலை எந்தச் சூழ்நிலையிலும் மாற்றப்பட வேண்டும், இல்லையென்றால், தமிழ் மொழி வாழவும், தமிழன் முன்னேறவும் எள்ளளவும் இடமில்லை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p21.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License