தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
23. வைணவக் கலம்பகங்களில் அகத்திணை மரபுகள்
கு. கீதா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
ஏழு திணைகளில் ஒன்றான கைக்கிளை என்பது ஒருதலைக்காதல் பற்றி குறிப்பிடுகின்ற திணை ஆகும். வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்களும் இறைவனுடைய அருளைப் பெற முடியாத நிலையில் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் நினைத்து வருத்தப்படுகின்றனர். இது ஒரு வகை என்றாலும் கலம்பக உறுப்புகளான கொற்றி, மதங்கி, வலைச்சி, இடைச்சி ஆகிய எளிய நிலையினரும் இலக்கிய உறுப்புகளாய்ப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். திருவாய்மொழி கலம்பகத்தில் காதலைப்பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வலைச்சியர்
வலைச்சியர் என்பது வலைக்குலப் பெண் ஒருத்தியைக் கண்ட இளைஞன் ஒருவன் காமுற்றுக் கூறுவதாக இவ்வுறுப்பு உருவகிக்கப்படும். திருமாலின் அடியவன் ஒருவன் அப்பெண்களிடம் திருவாய்மொழியில் மனதைச் செலுத்தியதால் ஒரு வலையினும் சிக்காத திறத்தினை,
“கொண்டுவலைக் குமைத்துக் கொன்றுன் சிலந்திவலை உலகியற்கும்
துண்டு வலைத்தரளம் நூக்கும் வேலை வலைக்கயங்கள்
பண்டு வலைக் குடிப்பிறந்தீர் பழுது நும்கயல் வலைக்கயம்
குண்டுவலைக் தமிழ்நூல் கோத்தான் மாறன்மால் குமைத்துப் பண்டே” (திருவாய்மொழி .8107)
கடலிலே வலையாலே மீன் பிடிக்கும் பழமையான பரதவர் குடியில் பிறந்த பெண்களே, திருவாய்மொழிக் கலம்பகத்தை இயற்றியவரே, என் மயக்கங்களைப் போக்கிவிட்டார். சிலந்தி வலையைப் பின்னி அதில் சிக்கும் பூச்சிகளை அழுத்தும் துன்பத்தைப் போல உலகியல் வலைக்கும் உங்கள் கண்களாகிய வலைக்கும் என்னை அகப்படுத்தும் ஆற்றல் இல்லை. ஆதலால் உங்கள் எண்ணம் அழியும் என்று அடியவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இடைச்சியர்
இடைச்சியர் என்பவர் தெருவில் மோர் விற்றுச் செல்லும் இடைக்குலப் பெண்ணின் மீது இளைஞன் ஒருவன் காமுற்றுச் சிலவற்றைக் கூறுவதாக அமைவது இவ்வகையாகும். இவையும் கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகும். இங்கு இடைச்சியர் கடைந்தெடுக்கும் வெண்ணையும் மாறன் அருளிய திருவாய்மொழியும் கண்ணனுக்கு உயிர் போன்றதாகும் என்று அடியவர் ஒருவர் இடைச்சியரிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலாவது,
“மைதோய்ந்த கயல்விழியீர் மழைநிறத்த கண்ணனுடன்
நெய்யமுதும் நிறையமுதும் பிறர்க்குளிப்பீர்
செம்கையொத்தால் நுமதொழிப்பான் இனம்ஒன்றே செளிப்பதவள், மடநங்கைச்
செய்மறை ஆய்ச்சியர் நெய்யும் அசகத்துயிர்க்கும் இனிதுயிரோ?”
என்னும் பாடலடிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மைதீட்டிய கயல் போன்ற கண்களை உடைய பெண்களே, கண்ணன் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் வழங்கியது போல நீங்களும் தயிரைக் கடைந்து உலக மாந்தருக்கு வெண்ணையாகிய அமுதத்தைத் தருகின்றீர்கள் என்றாலும் நீங்களும் கண்ணனும் ஒன்றாக முடியுமா? பிறவியை ஒழிப்பதற்காக அவன் பிறவி எடுக்கிறான் என்பதை ஆழ்ந்து நோக்கும் போது உங்கள் நெய்யும் கண்ணனுக்கு இனிய உயிர் போல்வனவோ? ஏன இடைச்சியரிடம் திருவாய் மொழியில் தேர்ந்தவர் ஒருவர் இயம்பும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.
கொற்றியார்
கொற்றியார் என்பது கலம்பக உறுப்புகளுள் ஒன்றாகும். கொற்றியார் என்பது வைணவச் சின்னங்களுடன் பிச்சையெடுக்க வருபவளைக் கண்ட காமுகன் ஒருவன் கூறுவதாக அமைவது. இங்கு காமம் என்பது ஈண்டு இறைவனிடத்துக் கொண்ட காமமாகும். உடலின் இழித்தன்மையைச் கூறிக் கொற்றியார் பாடும் போது;
“நீருடன் நாலாறு நினைவுறு பல்வேறு குறுமாறுசருநாப்
விஉளக்குறு கோளாறு செய்யுங் சீமாறுத்
சீருற நினைப்பேணி பூசிப்பொன்கலன் பூப்பி உளனுடை புஉணவேணி
செம்மாந்து மேனானும் செகபதியின் செயல்நானி”
என்ற பாடல் வரிகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.
உடலே நீர்த் தத்துவத்தோடு இருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டாக உடைய நீ கொடிய நரகத்தை அடையுமாறு என்னை தீவினைக்குரிய செயலில் ஈடுபடுத்துகிறார். உணவு, உடை, போன்ற இயற்கை அழகோடு செயற்கை நலனும் கண்டு மகிழும் உலகின் செயலுக்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். உன்னினும் உயர்ந்த ஆத்மாவைப் பெறுவதற்குத் திருவாய் மொழியே வெற்றி. உன்னுடையது என்று நினைக்குமாறு திருவாய்மொழியைத் தெருவில் பாடிச் பிச்சைப் பெற்றும் கொற்றியார் அடிச்சுவட்டைப் பற்றி விட்டோம். உலகையெல்லாம் உண்ட எம் திருமால் மிகுந்த விருப்பத்தோடு என்னை அடியவனாக ஏற்பான் என்று கொற்றியாரின் பாடலில் ஈடுபட்ட ஒருவன் கூறியது.
மதங்கியார்
மதங்கியார் என்பது கலம்பக உறுப்புகளில் ஒன்றாகும். முதங்கியார் என்பது இருகைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி ஆடும் தங்க சாதிமங்கை ஒருத்தியை நோக்கி இளைஞன் ஒருவன் காமுற்றுக் கூறுவதாகும். முதங்கியார் பாடியாடும் திருவாய் மொழியில் தோய்ந்தவர்கள் இறைவனுக்கு இலக்காகும் செய்திகளை எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ள பாடல்,
“உலகுண் பரபரன் மூன்றச் ரசரமுதல்தனி
கரணன் ஒழிவின் றுரைப்பரன் முழுதுட்
நியமனன் கருணைப் பரவசத் துடனாயே
அலர்மா துறையரன் அடைதற்கும் பயனடைந்த
குறுகுணம் அடைய் பூரணன் தன்வேங்”
என்னும் பாடலடிகளின் மூலம் அறிய முடிகிறது. உலகு ஏழும் உண்டவன், மேலானவன் எல்லாப் பொருட்களையும் இயக்குபவன். திருமகள் தங்கும் குணங்களுடைய மார்பினை உடையன். அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை அடைவது தவிர்த்து வேறு புகழ் இல்லை என்றும் திருவாய் மொழியை ஆராய்ந்தும் படித்தும் இசையில் வடிந்து மதங்கி ஆடுகின்றாள். இது மாயை ஆகிய திரையை விலக்குகின்றது. உலக இன்பம் பேறு என நினைப்பவர்களுக்கு இது பேரிழப்பாகும். இவள் வடிவழகில் ஈடுபட்ட உலகமக்கள் மன அமைதியடைவது கடினமான செயலாகும். இவள் பேசும் விரிவுரையை கேட்டவர் இவ்வுலகில் இருப்பார்களா? என்று மதங்கி பாடிய உலகமுண்ட என்ற திருவாய்மொழிப் பாடல் உள்ளம் உருகிய அன்பர் ஒருவர் கூறுவதாகும்.
முடிவுரை
வ்கலம்பகத்தில் பல அகத்திணைப் மரபுகள் காணப்படினும் இக்கட்டுரை எளிய நிரை மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றான கைக்கிளை பற்றி எடுத்து இயம்பும் விதமாக அமைந்துள்ளதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
1. திருவாய்மொழிக் கலம்பகம்.
2. மணிவேல்.மு., கைக்கிளைக் காதல்.