இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

3. சங்க காலப் புலவர்களின் குறியீட்டுச் சிந்தனைகள்


முனைவர் ஆ. அறிவுமொழி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி, சென்னை - 15

முன்னுரை

சிந்தனைப் போக்கிற்கு நிலைக்களனாக விளங்கி, கருத்துப் பரிமாற்றத்திற்குக் கருவியாக அமைந்து, அறிவு வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்வது மொழி. இம்மொழியானது ஒரு கூட்டுச் செயலாகச் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைப்பதாக உள்ளது. இத்தகைய மொழியின் ஒவ்வொரு சொல்லும் குறிப்பாகப் பொருள் உணர்த்தும் தன்மையுடையது. அதாவது யானை என்ற சொல்லிற்கும் அது குறிக்கும் பொருண்மைக்கும் தொடர்பில்லை.

மொழியால் உருவாக்கப்படும் இலக்கியமே அம்மொழியின் குறியீட்டு ஒழுங்கமைவாகிறது எனலாம். மனிதனின் சிந்தனையை வளர்ப்பதாக மொழி அமைவதுடன் அச்சிந்தனையின் வழியாக வளமை பெற்ற இலக்கியங்கள் காலந்தோறும் படைக்கப்பட்டும் வருகின்றன. இலக்கியம் என்பதற்குள் பல உத்திமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் குறியீடு. இக்குறியில் இலக்கியங்களின் ஆழ்ந்த விளக்கத்தையும் புதுமையினையும் நுண்மையினையும் மேற்கொண்டு வருகின்றது. இக்குறியியல் துறை தமிழ் இலக்கிய வகைமையைப் பொறுத்தவரை சங்க இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் அடுத்தடுத்த நிலைகளுக்கும் செல்கின்றது.

கருத்தாழமிக்க உத்தியாக உள்ள குறியீடு, ஆதிமனிதனின் சைகைகளாலும், ஒலிகளாலும் தன் கருத்தைப் புலப்டுத்த முயன்ற பொழுதே தோன்றிவிட்டது. அத்தகைய குறியீடு ஓவிய எழுத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது. மேலும், குறியீடுகள் அக்காலத்திய தெய்வங்கள், கோள்கள், தொன்மங்கள், பிறப்பு, இறப்பு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து வளர ஆரம்பித்தது. இடைக்காலத்தில் கல்லெழுத்திலும், விலங்குக் கதைகளிலும் கூட குறியீடுகள் தோன்றாலாயின. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே குறியீட்டுப் பாங்கினைக் கொண்ட இலக்கியங்கள் பல தமிழில் இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் காட்டும் அடிவரையற்ற ஆறு செய்யுள் வகைகள் பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு, என்ற நான்கும் மற்றொன்றை உணர்த்தும் இயல்புடையன (தொல்காப்பியம் - 1336), என்பதை அவரது செய்யுளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தினால் அறியமுடிகிறது.

சங்க இலக்கியக் காலத்தை இயற்கைக் குறியீட்டுக் காலம் எனும் அளவிற்கு இயற்கையை மனிதனின் வாழ்வோடு பிணைத்துக் காணும் குறியீட்டியப் பார்வையானது அக்காலத்துச் சங்கப் புலவர்களிடம் இயல்பாகவே இருந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் இடம் பெறுகின்ற இயற்கை சார்ந்த பொருட்கள் வெறும் வருணனையாக மட்டும் இடம் பெறாமல் அகத்திணை மாந்தரின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பினால் உணர்த்தும் குறியீடுகளாகவே இடம்பெற்றுள்ளன. அத்தகைய குறியீட்டுச் சிந்தனை குறித்து சங்க அகஇலக்கியங்களில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



நீர்

ஐந்து நிலத்திற்கான நீர்நிலைகளும் குறிப்பான்களாக நின்று பற்பல குறியீடுகளைத் தருகின்றன. ‘இந்தியாவில் நீர் உயிரைக் காக்கும் பொருளாகக் கருதப்படுகிறது. அளவற்றதாகவும் அழியாததாகவும் உள்ள நீர், பூமியில் உள்ள எல்லாப் பொருள்களின் தோற்றமும் முடிவும் ஆகும். சுருங்கக் கூறின் சக்திகளின் கூட்டமே நீர் ஆகும். நீரில் மூழ்குதல் உயிர்சக்தியைத் தீவிரப்படுத்துகிறது. கிறித்துவத் துறவியான ஜான் கிரி ஜோஸ்டன் என்பார், “ஞான ஸ்நானம் என்பது இறப்பதையும் குறிக்கும். அத்துடன் வாழ்வையும் உயிரத்தெழுதலையும் குறிக்கும்” (J.E. Cirlot, A Dictinary fo Symblos , P.N. 274) என்பதாக நீரின் குறியீடு சார்ந்த விளக்கம் அமைகின்றது.

குறிஞ்சி - அருவி நீர்

குறிஞ்சி நிலத்தின் நீர்நிலையாக விளங்கும் குளிர்ச்சி பொருந்திய சாரல் மணம் கமழும் அருவி நீரானது குறியீடாக இடம்பெறுகிறது. தலைவனும் தோழியும் வள்ளைப் பாட்டுப் பாடிக்கொண்டே தலைவன் மலைவளம், அவனது சூள், வரைவே வேண்டி வந்தமையைப் பாடுகின்றனர். அதில் தலைவன் மேல் மாறாத உறுதிப்பாடு கொண்ட தோழி தலைவியிடம் தந்தை திருமணத்திற்கு உடன்பட்டதனை எடுத்துச் சொல்கிறான். அதோடு தலைவன் எந்நாளும் குற்றம் அற்றவன் என்றும், சூள் பொய்காதவன் என்றும் கூறி தலைவியிடம் தலைவனது உறுதிப்பாட்டினை மிகுவிக்கின்றாள் என்பதாக இப்பாடல் முழுவதும் பொருள் அமைந்துள்ளது. அத்தலைவனது நாட்டு மழைநீர் எந்நாளும் வளம் குன்றாது கொட்டிக் கொண்டே இருக்கும் வள்ளன்மை உடையது. அதுபோலத் தலைவன் திருமணம் செய்து கொள்வேன் என்று செய்த சூளினை ஒருபோதும் மறக்கவோ மாற்றவோ மாட்டான். அதாவது தலைவனது நாட்டு அருவியின் வள்ளன்மைக்கு நிகரானது தலைவனது சூள்மொழி என்று தோழி கூறுகின்றாள். இதனை,

“இலங்கு அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை” (கலித்தொகை 41)

எனும் வரிகளில் சூள்பொய்த்தவன் என்று தலைவி இயற்பழித்தவழி அதனை மறுத்து, அவ்வாறு மறுத்தானெனின் வேங்கை மரத்தின் கீழ் நின்று தந்தையோடு திருமணம் பேசிடும் முயற்சியைத் தலைவன் ஏன் செய்கிறான்’ என்று கேட்டதாக அமைந்துள்ளது.

குறிப்பான் - மலையருவி நீர், குறிப்பீடு - வளம் குன்றாது கொட்டும் நிலை, குறியீடு - தலைவன் சூள், குறியீட்டுப்பொருள் - எந்நாளும் பொய்த்துப் போகாது (அதன்படியே தந்தையோடு திருமண முயற்சியை வேங்கை மரத்தின் கீழ் நின்று பேசி உடன்பாட்டினைப் பெறுகின்றான்)

மலையருவி நீர் - சூள் பொய்க்காது நடந்து கொள்ளும் தலைவனுக்குக் குறியீடாகிறது.



மழை நீர்

“மழை செழிப்பின் குறியீடாம் வானுலகினின்று வீழ்கின்றது என்னும் காரணத்தினால் தூய்மையின் குறியீடாகவும் குறிக்கப்படுகிறது. புராணங்கள் வானுலகில் செல்வாக்கால் மழை பூமியின் மீது விழுகின்றது என்கின்றன. அதோடு மழை என்பது சுருங்கும் நிலையினையும் குறிப்பதாக அமைகின்றது.” (J.E. Cirlot, A Dictinary fo Symblos , P.N. 271) இத்தகைய மழைநீரின் குறியீட்டமைப்பினைப் பின்வருமாறு காணலாம்.

நற்றிணையில் 68 - ஆவது பாடல் தலைவனின் நாட்டு மலையில் பெய்யும் மழை சிறிய நுரைகளைச் சுமந்து கொண்டு நறுமணமிக்க மலர்களுடனே ஆற்றில் பொங்கி வருகின்ற புதுநீரில் மனம் மகிழ்ந்து விளையாட அன்னையிடம் அனுமதி பெற இயலாதவனாகத் தலைவி இற்செறிப்பில் இருந்தாள் என்பதனைச் சிறைப்புறமிருக்கும் தலைவனுக்குக் கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.

குறிப்பான் - மழையின் புதுநீர், குறிப்பீடு - தலைவன் மலையிலிருந்து குறுநுரை சுமந்து நறுமலர் மிதக்கப் பொங்கியபடி வருகின்றது. குறியீடு - தலைவன், குறியீட்டுப் பொருள் - தன் நாட்டிலிருந்து தமருடன் வந்து இற்செறிப்பில் இருக்கும் தலைவியைத் திருமணம் பேசி முடித்து புதுப்புனலில் விளையாடும் இன்பத்தைக் கொடுக்க வேண்டும்.

மழையின் புதுநீர் - தலைவனையும், இளையோர் - தலைவியையும், இற்செறித்தல் - தலைமக்கள் புனலாட முடியாத தடையையும், குறுநுரை, நறுமலர் சுமந்து வரும் நீர் - தலைவன் தம் தமருடன் சுற்றத்தோடும் வருதலையும், மலைமகிழ்ந்து ஆடுதல் - தலைமக்கள் தடையின்றி கூடி மகிழ்ந்திருத்தலையும் குறிக்கின்றன.

பொங்கி வரும் மழையின் புதுநீர் - விரைந்து தமருடன் வந்து இற்செறிப்பிலுள்ள தலைவியைத் திருமணம் புரிந்திட வேண்டிய தலைவனது குறியீடாகின்றது.

தெளிக்கப்படும் நீர்

“இரும்பு செய் கொல்லவன் வெவ் உலைத் தெளித்த
தோய் மடற் சில் நீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே”

எனும் வரிகளில், தலைவி தோழியிடம் “இரும்பு வேலை செய்யும் கொல்லன், தனது வெம்மை மிகுந்த உலையிலே பனைமடலில் தோய்த்துத் தெளிக்கும் சிலவாகிய நீர்த்துளிகள் உலையின் நெருப்பினைச் சிறிதே குறைப்பது போன்று தனக்குத் தோழி கூறும் தேறுதல் மொழிகள் நோயைச் சிறிது தணித்துப் பாதுகாப்புச் செய்கிறது” என்று கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.

குறிப்பான் - நீர் தெளித்தல், குறிப்பீடு - கொல்லன் உலையின் வெம்மையைக் குறைக்க பனைமடலில் தோயத்துத் தெளித்தாள், குறியீடு - தோழியின் ஆறுதல், குறியீட்டுப் பொருள் - தலைவனின் பிரிவால் மிகுந்த வருத்தமுற்று இருந்த தலைவிக்குத் தோழியின் ஆறுதல் மொழி சற்றே பிரிவு நோயைத் தணித்தது. ஆக நீர் தெளித்தல் - வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழி கூறும் ஆறுதல் மொழி சற்றே வருத்தத்தைக் குறைக்கும் குறியீடாகின்றது.



முல்லை - காட்டாறு

மலையில் இருந்து அருவியாகக் கொட்டும் நீர் முல்லை நிலப்பகுதியில் காட்டாறாக உருவம் கொள்கிறது. “ஒரு புறம் இது செழிப்பு மற்றும் நீர்ப்பாசனத்தின் முன்னேற்றத்தைக் குறிப்பதாகிறது. மறுபுறம் இது மீண்டும் திரும்ப இயலாத கால வட்டத்தைக் குறிக்கும். அதன் விளைவாக, இழப்பு மற்றும் மறதி என்னும் உணர்ச்சிகளையும் குறியிடுவதாக அமைகிறது.” (J.E. Cirlot, A Dictinary fo Symblos , P.N. 274) என்கிறது.

“கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்” (நற்றிணை - 381)

எனும் வரிகளில் தலைவனது பிரிவினை ஆற்றாத தலைவி, கரையை மோதி ஓடும் காட்டாற்றின் இடிகரையில் வேர்களெல்லாம் அசைந்து பிடிப்பற்றுத் தோன்றிக் காற்றாலசையும் மரத்தினது அழகிய தளிரைப் போல் நடுக்கம் குறையாமல் தன் நெஞ்சமிருப்பதாகக் கூறுகிறாள்.

குறிப்பான் - காட்டாறு, குறிப்பீடு - கரைமோதி மரத்தின் வேரை அசைத்தமையால் அதன் தளிர் நடுங்கிற்று, குறியீடு - (தலைவனின்) பிரிவச்சம், குறியீட்டுப் பொருள் - தலைவியின் மனநிலையைச் சிதைத்து நடுக்கமுறச் செய்தது.

காட்டாறு - தலைவனது பிரிவு அச்சத்தையும், மரவேர் - தலைவியையும், தளிர் - மென்மையான நெஞ்சத்தினையும், அசைத்தல் - பிரிவு தாங்காது நடுங்கினமையும் குறிக்கின்றன. காட்டாற்றின் செயல் - பிரிவச்சத்தால் சிதைந்துள்ள தலைவியது மனநிலைக்குக் குறியீடாகிறது.

மருதநிலம் - பொய்கை

முல்லை நிலம் வழியாக காட்டாற்றின் வேகம் குறைந்து ஆறாகவும், ஏரி, குளமாகவும், நீர் நிலையாக மருதநிலத்தில் காணப்படும். “இந்நீர்நிலை இறப்பினைக் குறியீடு ஆகும். திரவக் குறியீடு, வாழ்வு மற்றும் இறப்புக்கு இடையில் உள்ள பயணம் ஆகும். மேலும், புலப்படாத மர்மமான அம்சங்கள் நிறைந்த இடமாகவும் கருதப்படுகிறது” (J.E. Cirlot, A Dictinary fo Symblos , P.N. 175) இப்பொய்கையின் குறியீட்டமைப்பினைப்,

“பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ” (அகநானூறு - 146)

எனும் வரிகளில் காணலாம். ‘குளிர்ந்த மலர்களையுடைய பொய்கையின் கண் பகல் முழுவதும் கழியும் வரை சுழன்று உழக்கிவிட்டு பெண் எருமையோடு சென்றது. அத்தகைய ஊரின் தலைவன், என்று தலைவி சினத்துடன் கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.


குறிப்பான் - பொய்கை, குறிப்பீடு - குளிர்ந்த மலர்களையுடையதும், பகற்பொழுது முழுவதும் எருமை உழக்குவதுமாக இருத்தல், குறியீடு - பரத்தையர் சேரி, குறியீட்டுப் பொருள் - அழகிய பரத்தையர்களைக் கொண்டதும், பகலெல்லாம் தலைவன் தங்கும் இடமுமாக இருக்கின்றது. பொய்கை - பரத்தையர் சேரியையும், எருமை - தலைவனையும், பகலில் உழக்கல் - பகலிலும் பரத்தமை ஒழுக்கம் கொள்ளுதலையும், குளிர்ந்த மலர்கள் - அழகிய பரத்தையரை உடையதற்கும் குறியீடாகிறது.

பொய்கை - பரத்தையர் சேரியின் குறியீடாகிறது. இதே போன்ற குறியீட்டமைப்பினை அகநானூறு 96 வது மருதப்பாடலும் கொண்டது. இதிலும் பொய்கை என்னும் நீர்நிலையானது ‘பரத்தையர் சேரியினை’ க் குறிக்கும் குறியீடாக ஆளப்பட்டுள்ளது. மேலும், குறுந்தொகையின் 91 ஆவது மருதப்பாடலில் இலஞ்சி எனும் நீர்நிலையானது ‘பரத்தையர் இல்லத்தினைக் குறிக்கும் குறியீடாக ஆளப்பட்டுள்ளது.

மேலும், நற்றிணை 310 ஆவது பாடலில் ‘பொய்கை’ கீழ்க்கண்ட குறியீட்டமைப்பினைப் பெற்றுள்ளது. குறிப்பான் - ஆழமான நீருடையப் பொய்கை, குறிப்பீடு - இறங்கிய மகளிர் அஞ்சிட, தாமரை வருந்திட வாளைமீன்கள் துள்ளிப் பாய்ந்தன, குறியீடு - பரத்தையர் சேரி, குறயீட்டுப் பொருள் - தலைவி வருந்திட, காமக்கிழத்தியர் அஞ்சிட தலைவனின் பரத்தையர் ஒழுக்கம் அதிகமானது. தாமரை - தலைவியையும், மீன் - தலைவனையும், மகளிர் - காமக்கிழத்தியையும், துள்ளிப் பாய்தல் - தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினையும் குறிக்கின்றன.

ஆழமான பொய்கை (குண்டு நீர்) - பரத்தையர் சேரிக்குக் குறியீடாகிறது.

குட்டம்

“கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பற்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
துண்துறை ஊரன் தண்டாப் பரத்தமை” (நற்றிணை - 280)

எனும் வரிகளில் தலைவனுக்கு வாயில் மறுத்த தலைவி தோழியிடம், ‘மாமரத்திலிருந்து வீழ்ந்த இனிய பழம் கொக்கினது கூம்பிய நிலை போன்ற அரும்புகளைக் கொண்ட ஆம்பல் பூக்கள் மிக்குள்ள ஆழமான நீரில் துடுமென விழுகின்ற ஊரினை உடையவன்’ என்று கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.


குறிப்பான் - குட்டம் (நீர்நிலை), குறிப்பீடு - கொக்கிடமிருந்து தப்பி மாமரத்திலிருந்து துடுமென விழுந்த பழம் ஆம்பல் மிக்க குட்டத்தில் விழுந்தது, குறியீடு - இல்லம், குறியீட்டுப் பொருள் - பரத்தையை நீங்கிய தலைவன் விரைந்து சுற்றத்தார் கூடிய இல்லத்தினை அடைந்தான். கொக்கு - பரத்தையையும், பழம் - தலைவனையும், ஆம்பல் - தலைவியையும், துடுமென விழுதல் - தலைவன் விரைந்து வருதலையும் குறிக்கின்றன.

ஆம்பல் மிக்க குட்டம் - தலைவி உள்ள இல்லத்தின் குறியீடாகிறது. குறிஞ்சி நிலத்தில் உள்ள அருவி நேர்மையான தலைவனுக்கும், காட்டாறு பிரிவால் துன்பமுறும் தலைவிக்கும், பொய்கை பரத்தையின் இல்லத்திற்கும் குறியீடாக ஆளப்பட்டுள்ளது.

மொழியும் குறியீடும் பிரித்தறிய முடியாத ஒன்று என்பதையும் இவை ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் என்பதையும் உணரமுடிகிறது. குறியீடுகளில் உள்ளுறைப் பண்பு சில சேர்ந்து வரும். இலக்கியக்குறி என்பது படைப்பாளிக்கும், வாசிப்பவனுக்கும் இடைப்பட்ட புரிதலை உள்ளடக்கியது என்பதும், உருவக்குறி, சுட்டுக்குறி, குறியீட்டுக்குறி என்பன இலக்கியக் குறிகளில் சிறப்புப் பெறுகின்றன என்பதும் பெறப்படுகிறது.

பயன்கொண்ட நூற்கள்

1. செயபால். இரா. (உ.ஆ), 2004, அகநானூறு (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

2. பாலசுப்பிரமணியன். கு. வே., 2004, நற்றிணை (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

3. அப்துல் ரகுமான், 1990, புதுக்கவிதையில் குறியீடு, செல்மா, சிவகங்கை.

4. இளம்பரிதி. மொ., 2006, குறியியல் - ஒரு சங்கப்பார்வை, காவ்யா, சென்னை.

5. சுப்பிரமணியன். அ. வெ., 2001, சங்கப்பாட்டில் குறியீடு, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

6. தமிழவன், 1992, தமிழும் குறியியலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p3.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License