இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

59.நற்றிணையில் விளையாட்டுச் சிந்தனை


செ. தங்கராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்செங்கோடு.

முன்னுரை

பழங்காலம் தொட்டு இன்றைய காலம் வரை விளையாட்டை நினையாதவர் எவரும் இலர். விளையாட்டை ஆடவர் விளையாட்டு, மகளிர் விளையாட்டு எனக் கூறலாம். ஆண்கள் விளையாட்டில் எந்தளவிற்குப் பங்குகொண்டனரோ அதே அளவிற்குச் சங்ககால மகளிரிரும் பங்கு கொண்டுள்ளனர். புலவர்கள் சங்கப்பாக்களில் அகம், புறம் எனும் செய்திகளைக் கூறுமிடத்து விளையாட்டையும் இணைத்துக் கூறியிருப்பதால், அன்றைய கால மக்கள் விளையாட்டோடு இரண்டறக் கலந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது. சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் உள்ள நற்றிணை எனும் நூலில், புலவர்கள் சுட்டியுள்ள விளையாட்டுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியரும் விளையாட்டும்

விளையாட்டு என்பதற்குப் புலவர்கள் சரியான ஒரு வரைமுறையைத் தரவில்லை. இருப்பினும், தமிழில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூலகக் கருதப்படும் தொல்காப்பியம் விளையாட்டு பற்றிய ஒரு சில செய்திகளை முன்வைத்துச் செல்கின்றது.

“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” (1)

மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் உவகை எனும் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களன்களில் விளையாட்டும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பழங்கால மக்கள் விளையாடும் விளையாட்டு முறைகளை வைத்து அவற்றைக் கெடவரல் என்றும், பண்ணை என்றும் குறிப்பிடுகிறார்.

“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (2)

கெடவரல் என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டையும், பண்ணை என்பது நீரில் விளையாடும் விளையாட்டையும் குறிக்கின்றது.

நற்றிணையில் விளையாட்டு

சங்ககாலக் கட்டத்தில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்த நிலையில் நற்றிணையில் ஓரை விளையாட்டு, வட்டாடுதல், ஊசலாட்டம், பந்தாட்டம், சிற்றில், கழங்காடுதல், வண்டலிழைத்தல், புனல் நீராடுதல், கடற்கரையில் விளையாடுதல் போன்ற விளையாட்டுகளைப் புலவர்கள் கூறியிருக்கின்றனர். விளையாடுவதினால் உடலில் தோன்றிய களைப்பு நீங்கியமைக்கு,

“வடிக்கொள் கூழை ஆயமொடு ஆடலின்
இடிப்பு மெய்யதுஒன் றுடைத்தே” (நற்.23 : 2-3)

எனும் நற்றினைப் பாடலடிகளே சான்று.



ஓரை விளையாட்டு

ஓரை சங்ககால மகளிரில் இளையோர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. ஓரை என்பது ஒலித்தல் தொழிலைக் குறிக்கின்றது. எனவே இவ்விளையாட்டின் போது ஆரவாரம் எழும் என்பது திண்ணம். நண்டு, ஆமை முதலிய உயிரினங்களைச் சிறுகோல் கொண்டு அலைத்து விளையாடும் விளையாட்டாகும். அதுமட்டுமின்றி நீரில் விளையாடுதலும் ஓரை விளையாட்டு எனக் கூறப்படுகிறது.

அன்னை தன் மகளை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறாள். அப்போது தோழி தலைவியிடம் பேசுவது போல, புதுநீர் பெருக்கெடுத்து வரும் இவ்வேளையில் தலைவி இற்செறிக்கப்பட்டிருப்பது அறமன்று. இதனால் செல்வம் தேயும் எனக் கூறுவார் யாரும் இலர் என நற்றிணைப் பாடலில் தோழி புலம்புகிறாள். இதனை,

“விளையாட்டு ஆயமொடு ஓரையாடாது
இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்”(நற்.68 : 1-3)

எனும் பாடலடியின் மூலம் பிரான் சாத்தனார் உரைக்கிறார். தலைவி தோழியருடன் கடற்கரை மணலில் நண்டு பிடித்து விளையாடிய செய்தியை,

“நன்னர் மாலை நெருநை நின்னொடு
சிலவிளங்கு எல்வளை நெகிழ
அலவன் ஆட்டுவேள் சிலம்புஞெமிர்ந்து எனவே” (நற்.363 : 8-10)

எனும் பாடலடியின் மூலம் அறிகிறோம். தலைவியது தோழியர் ஓரை விளையாடுவதையும், ஆடும் இடமாகிய நொச்சி வேலினையும் காண்டு தலைவனுடன் உடன்போக்கு சென்ற தனது மகளை நினைத்து நற்றாய் வருத்தமுறுகிறாள். இதனை,

“ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும்” (நற்.143 : 3-4)

என கண்ணகாரன் கொற்றனார் பாடுகிறார். ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயமகளிருடன் கூடிப் பாவை செய்து விளையாடாமல் இருக்கின்றாய் என்பதை,

“ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்” (நற்.155 : 1)

பரயனார் எனும் புலவர் கூறுகிறார். இதற்கு உரையெழுதும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், “பஞ்சாய்க்கோரையாலே பாவை செய்து வைத்து விளையாட்டயவாது” (3) எனக் கூறுகிறார்.

ஓரையாடும் பாவையை தனது மகள் ஓரிடத்தில் வைத்தால் என்பதை,

“இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப்
பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி” (நற்.179 : 1-2)

எனும் பாடலடிகளின் மூலம் உணர முடிகிறது. நற்றிணையில் மட்டுமன்றி சங்க இலக்கியங்களான புறநானூறு, பட்டினப்பாலை, குறுந்தொகை போன்றவற்றிலும் ஓரை விளையாட்டு பற்றிக் கூறப்பட்டுள்ளது.



வண்டலிழைத்தல்

வண்டலிழைத்தல் என்பது பழங்கால விளையாட்டுகளுள் ஒன்றாகும். மணலை நீளமாகக் குவித்து, அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைப்பர். மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மணலுக்குள் குச்சி அல்லது விதை இருக்கும் இடத்தை மூடிக் கொள்வர். அப்போது அவர் கையில் குச்சியோ அல்லது விதையோ அகப்பட்டுவிட்டால் அவர் வெற்றி பெற்றவராகக் கருதப்பெறுவர்.

தலைவி தோழியர்களுடன் வண்டல் விளையாட்டை விளையாடக் கடற்கரைக்கு சென்றாள் என்பதை,

“வண்டல் ஆயமொடு பண்டுதான் ஆடிய” (நற்.127 : 6)

என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.

மணலில் உருவங்களைச் செய்து அவற்றிற்குப் பூ முதலியவற்றைச் சூட்டி மகிழ்வதும் வண்டல் விளையாட்டில் உண்டு. நற்றிணை நெய்தல் திணைப்பாடலில் வரும் சிறுமியர் மணலில் வண்டல் பாவையைச் செய்து விளையாடியுள்ளனர் என்பதை,

“நேரிழை மகளிர் வார்மனல் இழைத்த
வண்டற் பாவை வனமுலை முற்றத்து” (நற்.191. 2-3)

எனும் அடிகள் வெளிப்படுத்தியுள்ளது.

ஊசலாட்டம்

மரக்கிளைகளில் கயிற்றினை அல்லது கொடிகளைக் கட்டி அதிலமர்ந்து ஆடி விளையாடுவது ஊசலாட்டமாகும். அச்சமயத்தில் பாடப்பம் பாடல் ஊசல் வரியாகும். இதனை ஊஞ்சலாட்டம் என்றும் கூறுவர்.

பொன்னரிமாலை கழுத்தில் அசைந்தாட பனைநாரால் திரித்த கயிற்றினால் கட்டப்பட்டிருந்த ஊசலில் ஓடி அமருகின்ற காட்சியையும், பூப்போன்ற கண்களையுடைய அவளது தோழிமார்கள் அவ்வூசலை ஆட்டிய காட்சியையும்,

“வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்களிறு நாலும் இரும்பனம் பினையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்” (நற்.90 : 5-7)

என அஞ்சில் அஞ்சியார் எனும் புலவர் தம் பாடலடியில் விளக்குகிறார்.



சிற்றிலும் பந்து விளையாட்டும்

சிறுவர் சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டு இது. தாய் தந்தையர் வீட்டில் வாழும் பாங்கினை அதே போல் விளையாட்டாக இவர்கள் நடித்துக் காட்டுவர்.

பந்தாடமானது சங்க கால மகளிரால் விரும்பி விளையாடப் பெற்ற ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டு வீட்டு முற்றத்திலும், மாடங்களிலும், மணல் மேடுகளிலும் ஆடப்பட்டது.

தன்னுடன் வரும் தலைவியைப் பார்த்து நீ மணல் கண்டவிடத்திலெல்லாம் சிற்றில் கட்டி விளையாண்டு வருந்தாமல் வருக எனக் கூறுகிறான். இதனை,

“மணல்காண் தோறும் நெடிய வைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே!” (நற்.09 : 8-9)

எனும் பாடல் அடியால் உணரமுடிகிறது.

உடன்போக்குச் சென்ற மகளை நினைத்துத் தாய் வருந்துமிடத்து, தோழி விளையாடிய இறுக்கிக் கட்டிய பந்தும், தன் மகள் சிற்றில் அமைத்து விளையாடிய இடமும் வீட்டின் எதிரே உள்ளது எனக் கூறுகிறாள். இதனை,

“வரியணி பந்தும் வாடிய வயலையும்
மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்” (நற்.305 : 1-2)

எனும் பாடலடி விளக்குகிறது. பந்தைக் காலில் உதைக்கும் காட்சியை நற்றிணை அழகாகக் கூறுகிறது.

“ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி
அஞ்சில் ஓதி இவளுரும்” (நற்.324 : 7-8)


வட்டாடுதல்

வட்டை நாக்குப் போன்ற தடியால் அடிக்கும் விளையாட்டு வட்டுநா விளையாட்டு எனப்பட்டது. அரக்கினால் சிவப்புப் புள்ளிகல் இடப்பட்ட வட்டினை நாக்குப் போன்ற வளைந்த நுனி கொண்ட கோலால் அடிக்கப்படும்.

நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு சிறுவர்கள் ஆடிய செய்தியை,

“கட்டளை அன்ன இட்டரக்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்” (நற்.03 : 3-4)

எனும் அடிகளில் விளங்கிக் கொள்ள முடிகிறது. அருவியில் நீராடி வெறுத்துப் போன பெண் ஒருத்தி, சிவப்புப் புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டுச் சாடியின் நாக்கிலிருந்து வடிக்கப்படும் கள்ளை மகிழ்ச்சியுடன் ஆடற்கு ஏற்பப் பருகுவாள் என்ற செய்தியை,

“வங்க வரிப்பாறைச் சிறுபாடு முணையின்,
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும
விளையாடு இன்நகை அழுங்கா” (நற்.341 : 1-3)

என்று மதுரை மருதன் இளநாகனார் எனும் புலவர் கூறுகிறார்.

கழங்காடுதல்

பருவ மகளிர் விரும்பி விளையாடும் விளையாட்டாகக் கழக்காடுதல் உள்ளது. கூரை வீடுகளிலுள்ள தொடியணிந்த மகளிர் முற்றத்து மணலில் விளையாடிய விளையாட்டாக கழங்காடுதல் எனும் விளையாட்டை நற்றிணை சுட்டுகிறது. இதனை,

“கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
மணலாடு கழக்கின்” (நற்.79 : 2-3)

எனும் கண்ணகனார் பாடலின் மூலம் அறிய முடிகிறது.


நீராடல்

குளம், அருவி, ஆறு, கடல் போன்ற இடங்களில் சங்ககாலத் தமிழர்கள் நீராடியுள்ளனர். நீராடுவதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளது. தலைவி தோழிகளுடன் சேர்ந்து நீராடியக் காட்சியை,

“பொருஇல் ஆயமொடு அருவி ஆடி
நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண்” (நற்.44 : 1-2)

எனும் அடிகளில் பெருங்கௌசிகனார் கூறுகிறார்.

முடிவுரை

சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்பெறும் நற்றிணை எனும் பழந்தமிழ் இலக்கியம் அகப்பொருளைக் கூறினானும் அதனுள்ளாக விளையாட்டுச் செய்திகளையும் சேர்த்துக் கூறிய புலவர்களின் சிந்தனை பாராட்டுதலுக்குரியது. பழங்காலகட்டத்தில் விளையாடப்பட்டு வந்த பல விளையாட்டுகள் தற்போதைய கால கட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்விளையாட்டுகளைப் பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும், அரசும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நமது பாரம்பரியத்தை தொலைத்து நாதியற்று நிற்போம் என்பது உறுதி.

சான்றெண் விளக்கம்

1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல், நூற்.எண்: 255

2. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல், நூற். எண்: 319.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/seminar/s3/p59.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License