தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
62.வாஸந்தியின் பெண்ணியப் பார்வை
ம. திவ்யா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக்கல்லூரி, தருமபுரி.
அறிமுகம்
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கு
இணைப்பில்லை காணென்று கும்மியடி”
என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி. அவர் இந்திய நாடு சுதந்திரம் பெறுவதுடன் இந்தியப் பெண்ணும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினார்.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா”
என்றெல்லாம் 20ம் நூற்றாண்டில் பெண்ணுரிமைக்கென்று குரல் கொடுத்தவர்கள் ஏராளம். அவர்களில் வாசஸந்தியும் குறிப்பிடத்தக்கவர்.
திருக்குறளில் பெண்மை
இல்லாத வாழ்வில் இருக்கக்கூடிய ‘கற்பு” என்னும் மனஉறுதி வாழ்வில் இணையும் இருவரிடத்தும் அமைந்து நிலையாக இருந்தால் அந்தப் பெண்ணைக் காட்டிலும் வேறு எந்தப் பெருமையும் உலகில் இல்லை என்பதை
‘பெண்ணின் பெருந்தக்க யாவளகற்கு எண்ணும்
தின்மைஉண் டாகப் பெறின்” (குறள் - 54)
என்றவாறு எடுத்துரைத்துள்ளார்.
பெண்ணின் சிந்தனைத் திறன்
பெண்களின் தன்னம்பிக்கையின் மூலம் தமக்கென எதையும் பிரித்துக் கேட்கும் வகையில் பேச்சுத்திறனும், உரிமைத்திறனும் அவர்களிடம் வளர்ந்து வருகிறது என்பது வாஸந்தியின் நாவல்களில் அறிய முடிகிறது.
1. பிரச்சனைகளை எதிர்நோக்கும் தைரியம்
2. சின்னச்சின்ன ஆசைகளுக்கு மனதைப் பறிகொடுக்காமல் சமூக உணர்வில் ஈடுபாடு
3. எதையும் தீர்மானிக்கும் அதிகாரம்
4. போராட்டத்தில் தலைமை தாங்கும் ஆளுமை
ஆகிய காரணங்களால் பெண்கள் தங்களுடைய சிந்தனைத் திறத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
மு. வ வின் கள்ளோ? காவியமோ? வில் பெண்
பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் பெண்களுக்குச் சமூகம் தரும் அவமரியாதையினை இப்புதினம் எடுத்துரைக்கின்றது. உலகம் பெண்ணைப் போகப்பொருளாகவே கருதுகின்றது என்ற கருத்தினை இப்புதினத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
சமூகத்தில் ஆண் தவறுகள் செய்யும் போது பொறுத்துக் கொள்ளும் சமூகம், பெண்ணானவள் உடலளவிலோ, உள்ளத்தளவிலோ தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்யும் போது, அதனை எவ்விதத்தில் எதிர் கொள்கிறது என்பதை இப்புதினத்தின் கதையாக்கி உள்ளார்.
தாய்மையில் பெண்மை
ஒரு பெண்ணிற்குப் பெருமை சேர்ப்பது தாய்மை என்ற உணர்வு, தாயானவள் தான் பெற்ற மக்களே அவருடைய சிறந்த பொருள்கள் என்று அறிஞர் பெருமக்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர். இதனை;
‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்” (குறள் -63)
மேலும்
‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்” (குறள் - 64)
என்பதிலிருந்து தான் பெற்ற மக்களிலிருந்து கிடைக்கும் உணவானது பெற்றோர்களுக்கு அமிழ்தைக் காட்டிலும் இனிமையானது என்று கூறுகிறார்.
பெண்ணுரிமை
உடல் வலிமைக்கு மதிப்பு தந்து, அறிவு நுட்பம், கலையுணர்வு, பண்பாடு போன்றவற்றிற்கு மதிப்புத் தராத காலக்கட்டத்தில் ஆணை முன்னிலைப்படுத்தத் தந்தையின் பெயரைக் குழந்தைகளின் அறிமுக எழுத்தாக எழுதும் வழக்கம் அக்காலங்களில் இருந்தது. இதற்குக் காரணம் பெண்ணின் வண்ணச் சீரடி மண்மகள் அறியாமல் பெண்ணை வீட்டிற்குள்ளேப் பூட்டி வைத்தமையாகும். ஆனால் இன்று ஆணுக்கு நிகராகப் பெண்ணும் அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வாஸந்தியின் நாவல்
வாஸந்தியின் ‘கடைசிவரை’ என்ற நாவலில் சமுதாயத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து மருத்துவர் என்ற அந்தஸ்தைப் பெற்ற பெண் எவ்வாறு வரும் இன்னல்களை புறந்தள்ளுகிறாள் என்பது பற்றியும், பெண்களைச் சமுதாயத்தில் கிள்ளுக்கீரையாக மட்டுமே பார்க்கின்றனர் என்றும், பெண் பிள்ளைகளைக் கருவிலேயே அழிக்கின்றனர் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
ஒரு ஆணால் தான் வெறுக்கப்படுவதையும், ஆனால் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தன் வேலையில் தான் கவனமாக இருப்பதையே கூறியுள்ளார்.
கல்வி வளர்ச்சியில் பெண்
கல்வி வளர்ச்சியில் ஆண்களை விடப் பெண்கள் தான் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் எய்துகிறார்கள் இதையே மு. வ. பெண்கள் முன்னேற விட்டால் நாடு இப்படியேதான் இருக்கும் என்று கூறுகிறார்.
அதேபோல் வாஸந்தியும் பெண்களை மையப்படுத்திப் பல நாவல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்திலும் பெண்களே உயர்வானவர்கள் என்றும், அனைத்து விதப் பிரச்சனைகளும் தீர்ப்பவர்கள் பெண்களே என்றும் கூறியுள்ளார்.
பெண் மதிப்பு
பொதுவாக. நாம் பேசும்போது அப்பா வந்தது, அண்ணன் வந்தது, தம்பி வந்தான் என்று பேசுவதனைச் சமுதாயத்தில் காணலாம். அப்பாவையும், அண்ணனையும் அழைக்கும் பொழுது உயர்திணைப் பலர் பாருக்குரிய ‘ஆர்” விகுதியை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்துவது சிறப்புடையது. ஆனால், அம்மானுந்தாள், அக்கா வந்தாள் என்று மரியாதை நிமித்தம் இல்லாமல் பல இடங்களில் பெண்களை அழைப்பதுண்டு.
ஆனால் வாஸந்தி தன் நாவல்களில் அவ்விதமான எதிர்மறை வார்த்தைகள் பயன்படுத்தாமல், அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் மதிப்பு அளித்தே தன் உயர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.
முடிவுரை
சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்ணியம் பற்றிப் பல புலவர்கள், சான்றோர்கள் போன்றோர் பலக் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
இக்கட்டுரையின் மூலம் வாஸந்தி பெண்களை எவ்வாறு உயர்வுபடுத்திக் கூறியுள்ளார் என்பது பற்றி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.