இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

63.புறநானூற்றில் இலக்கியச் சிந்தனைகள்


முனைவர் ப. தினகரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு.

புறநானூற்றின் சிறப்பு

இந்நூல் தமிழிலக்கியத்தின் அணையா விளக்கு; பழங்கால கருவூலம்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் சேமிப்பு. எட்டுத்தொகையுள் இதற்கிணையானது ஏதொன்றும் இல்லை, எத்தகைய புகழுக்கும் எற்றது புறநானூறு.

ஏனைய நூல்களைக் காட்டிலும் இந்நூலால் பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள் பலவற்றை அறியலாம். இந்நூல் நமக்குக் கிடைத்திராவிட்டால் தமிழர் பெருமையை - வரலாற்றை - பண்பாட்டை நாம் இன்று அறிந்திருக்கும் அளவுக்கு வேறு எந்த நூலாலும் அறிந்து கொள்ள முடியாது.

இந்நூற் பாட்டுக்களிலே பெரும்பாலானவை வறுமையையே வாழ்க்கையாகக் கொண்ட பல புலவர்களால் பாடப்பட்டவை; தங்கள் வறுமையைத் தீர்க்கும் வள்ளல்களைப் பாராட்டிப் பாடப்பட்டவை அவை. ஆகையால் அவர்களுடைய பாடல்களிலே பல உண்மைகளையும், மக்கட் பண்பையும் காணலாம்.

தமிழர்களின் சிறந்த சமுதாய வாழ்வு. விருந்தோம்பற் சிறப்பு, உயர்ந்த ஒழுக்கம், உறுதியான கொள்கை, தன்னலமற்ற தியாகம், தலைநிமிர்ந்த தன்மான வீரவாழ்வு இவைகளையெல்லாம் இந்நூலில் அறியலாம். “பண்டைத்தமிழர் வரலாற்று நூல்” என்று புறநானூற்றைக் கூறுவது சாலவும் பொருந்தும்.

தமிழர் பண்பாடு

பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த - பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எல்லா ஊர்களும் எம்முடைய சொந்த ஊர்கள்; எல்லா மக்களும் எம்முடைய உறவினர்; எம்முடைய நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல, யாம் இன்புறுவதும் துன்புறுவதுங் கூட அவை போலத்தான். சாவு ஒரு அதிசயமன்று இயற்கை. ஆகையால் இவ்வுலக வாழ்வு இனிமையானது என்று மகிழவும் மாட்டோம்; வெஞ்சினத்தால் இவ்வாழ்வு துன்பமுடையது என்று வெறுக்கவும் மாட்டோம்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன” (பா - 192)

இது கணியன் பூங்குன்றனார் பாட்டு. இதுவே தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்கப் போதுமானதாகும்.

“யாதானும் நாடாமல், ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” (குறள் - 397)

என்ற குறளும் புறநானூற்றுப் பாடலின் கருத்தை விளக்குவதுதான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இந்தப் புறநானூற்று வரியின் உண்மைக் கருத்தை உலக மக்கள் பின்பற்றி ஒழுகுவார்களேயானால் இவ்வுலகில் எத்தகைய குழப்பமும் ஏற்படாது. உலகத்தை உருக்குலைக்கும் போர் வெறி ஒழிய வேண்டுமானால், இன வெறி மறைய வேண்டுமானால், சாதி வெறி சாகவேண்டுமானால், மதவெறி மாளவேண்டுமானால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழி உலகம் முழுவதும் பரவ வேண்டும். இது உலகச் சமாதானத்தை நிலைநாட்டும் உயர்ந்த குறிக்கோளுடைய ஒப்பற்ற மொழி.

தீமையும் நன்மையும் பிறரால் வருவனவல்ல, இன்புறுதலும் துன்புறுதலுங் கூட இவை போலத்தான்; நம்முடைய அறிவுத் திறமை, நடத்தை காரணமாகத்தான் இவைகள் நம்மையடைகின்றன. இவ்வுண்மையை உணர்ந்திருப்பவர்கள் எவரிடமும் வெறுப்புக் காட்ட மாட்டார்கள். எவரையும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள்; எவருக்கும் இன்னலிழைக்கவும் மாட்டார்கள். அனைவரிடமும் நண்பர்களாக - உறவினர்களாகப் பழகுவார்கள்.



தமிழர் வீரம்

தமிழர்களின் ஒப்பற்ற வீரத்தைப் பற்றி உரைக்கும் பாடல்கள் பலவுண்டு. வீரம் என்றால் இளைத்தவர்களை வீணாக இன்னலுக்கு ஆளாக்கித் தான் மட்டும் இன்புற்று வாழ்வதன்று; மற்றவர்களைக் காட்டிலும் தான் ஆற்றலுடையவன் என்பதை அறிவித்துக் கொள்வதன்று. தான் கொண்ட கொள்கையிலே உறுதியுடன் நிற்றல், தான் செய்யத் தொடங்கிய செயல்களை முட்டுக்கட்டைகளுக்கு அஞ்சாமல் முயற்சியுடன் செய்து முடித்தல். தன்மானத்திற்கு இழுக்கு வராமல் தன் செயலிலே வெற்றியடைதல். தன்னைக் காரணமின்றி தாழ்த்திப் பேசுவோர் நாணும்படி அவர்கள் செருக்கைச் சிதைத்தல். இவைகளே வீரத்தின் இயல்பு. இத்தகைய சிறந்த வீரமுடையவர்களே இந்நாட்டுத் தமிழ் மன்னர்கள்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு ஒன்றே இவ்வுண்மையை விளக்கப் போதுமானதாகும். இவன் வீரத்திலே மிகுந்த வேந்தன் மட்டும் அன்று, செந்தமிழ்ப் புலவனாகவும் சிறந்திருந்தான்.

“படை பலத்தால் என்னை இகழ்ந்துரைத்த வேந்தர்களுடன் வீரப்போர் புரிவேன்; அவர்கள் சேனைகள் சிதையத் தாக்குவேன். அவர்களுடைய முரசுகளுடன் அவர்களையும் சிறை பிடிப்பேன். இப்படிச் செய்யேனாயின் என் குடை நிழலிலே இருப்பவர்கள், தாங்கள் போய்த் தங்குவதற்கு வேறு இடங்காணாமல் “எமது அரசன் கொடுங்கோலன்” என்று என்னைத் தூற்றும் கொடியவனாவேன்.

உலகம் உள்ளவரையிலும் மாறாத புகழுடைய மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட புலவர்கள் என்னுடைய நாட்டைப் புகழ்ந்து பாடாமல் புறக்கணிப்பார்களாக. இரக்கின்றவர்களுக்கு எதையும் கொடுக்க முடியாத வறுமையையும் யான் எய்துவேனாக.

“உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேனாயின், பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது” (பா - 72)

இந்தப் பாட்டிலே நெடுஞ்செழியனுடைய வீரமும், நேர்மையும், புலவர்களுடைய பெருமையும் காணப்படுகின்றன. பகைவர்க்குப் பணிகின்றவன் வீரமுடைய வேந்தன் அல்லன்; குடிகளைக் கொடுமைப்படுத்துகின்றவன் ஒரு கோழை. புலவர்கள் வீரனையே விரும்புவார்கள். அவனுடைய நாட்டையே பாராட்டிப் பாடுவார்கள். இவ்வுண்மை இப்பாடலிலே பொதிந்திருப்பதைக் காணலாம்.

இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சேர மன்னன்; ஒப்பற்ற வீரன். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் அவனைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார்.

“பகைவர்களுடைய கோட்டை அவர்களிடமும் இருக்கும் போதே, அதைப் பிறர்க்குத் தானமாகத் தந்து விடுவாய்! “அந்தக் கோட்டை உங்களுடையது, எடுத்துக் கொள்ளுங்கள்” என்று உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குக் கொடுக்கும் பண்புடைய வள்ளல் நீ.

“ஒன்னார்
ஆர் எயில் அவர்கட் டாகவும் நுமது எனப்
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்!” (பா - 203)

இப்பகுதி அந்த இளஞ்சேட் சென்னியின் வீரத்தை விளக்கும். இவ்வீரமும் தன்னலமற்ற ஆண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

எதிரியின் கோட்டையைத் தன் வசமாக்குவதற்கு முன்பே அதை மற்றொருவர்க்குக் கொடுப்பதென்றால், இதற்கு எத்தகைய நெஞ்சுரம் வேண்டும்? எதிரியை வெல்வது உறுதி என்பதில் எவ்வளவு நம்பிக்கை வேண்டும்? தோல்வி மனப்பான்மையே தமிழனிடம் இருந்ததில்லை என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும்.



வரலாற்றுச் சிந்தனைகள்

புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டு, தமிழ்நாட்டு வள்ளல்களின் வரலாறுகளை வரையலாம். ஔவை, கபிலர் போன்ற புலவர்களின் வரலாறுகளைப் புனையலாம். இவர்களுடைய வரலாறுகளை வரிசைப்படுத்தி வரைவதற்கான பாடல்கள் பல காணப்படுகின்றன.

இப்பொழுது வழங்கும் கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் புறநானூற்றுப் பாடல்களின் ஆதரவைக் கொண்டவைகள்தாம். குமணன் வரலாறு புறநானூற்றிலிருந்து பிறந்தது. நட்புக்கு நல்ல உதாராணமாகக் காட்டப்படும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் வரலாற்றுக்குப் புறநானூற்றுப் பாடல்களே அடிப்படை.

இன்று தமிழ்நாட்டிலே வழங்கிவரும் புலவர்கள் வரலாறுகளிலே பெரும்பான்மையானவை கற்பனைகள் நிறைந்தவை, கர்ண பரம்பரைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டவை. ஔவையார் வரலாறு ஒன்றே இதற்குப் போதுமான உதாரணம். புறநானூற்றுப் பாடல்களை வைத்துக்கொண்டு உண்மையான ஔவையார் வரலாற்றை வரைய முடியும். சங்ககால ஔவையாரின் சரித்திரத்தைத் தீட்ட முடியும். இதுபோல் இன்னும் பல புலவர்கள் - மன்னர்கள் - வீரர்கள் - வள்ளல்கள் வரலாறுகளையும் வரைய முடியும்.

தெய்வச் சிந்தனைகள்

பண்டைத் தமிழ்நாட்டு மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர். அவர்கள் வணங்கிய தெய்வங்களுக்குக் கோயில்களும் இருந்தன.

“பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே” (பா - 6)

முனிவர்களால் வணங்கப்படும் சிவபெருமானது கோயிலை வலம் வரும் பொருட்டு உன்னுடைய குடை தாழ்க. அரசர்கள் கோயிலை வலமாகச் சுற்றி வரும்போது குடைபிடித்திருக்க மாட்டார்கள்.

“ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணிமிடற்றோனும்
கடல் வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெம் நாஞ்சில் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயில் உயரிய மாறாவென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்” (பா - 56)

காளையை வெற்றிக் கொடியாக உயர்த்தியவன். தீயைப்போல் ஒளி வீசும் சடையையுடையவன், மாற்ற முடியாத மழுப் படையை உடையவன். நீலமணி போன்ற கழுத்தையுடையவன் சிவபெருமான். கடலிலே வளரும் வலம்புரிச்சங்கு போன்ற வெண்மையான மேனியன். பகைவர்களைக் கொல்லும் கொடுமையான கலப்பைப் படையையுடையவன். பனை எழுதிய கொடியுடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற மேனியன் மேலே உயர்த்திய கருடக் கொடியை உடையவன். வெற்றியிலே என்றும் விருப்பமுடையோன் திருமால். மணி நிறமுள்ள மயிலைக் கொடியாக உயர்த்தியவன், வீழாத வெற்றியுடையவன், பிணிமுகம் என்னும் மயிலை வாகனமாக உடையவன், ஒளி பொருந்திய செந்நிறமுள்ளவன் முருகன். சிவன், திருமால், முருகன், பலராமன் என்னும் நான்கு தெய்வங்களும் இச்செய்யுளில் காணப்படுகின்றன. இந்நான்கு தெய்வங்களும் தமிழகத்திலே சிறப்பாக வணங்கப்பட்டன.

நம்பிக்கைச் சிந்தனைகள்

பலவகையான நம்பிக்கைகள் பண்டைத் தமிழர்களிடம் குடி கொண்டிருந்தன. அவைகளில் சில கீழ்வருவன:

* இம்மையிலே செய்த நன்மைக்கு மறுமையிலே பலன் கிடைக்கும்.

* நன்மை செய்வதன் சுவர்க்கம் புகுந்து இன்பந்துய்ப்பான். தீமை செய்தவன் நரகத்தையடைந்து துன்புறுவான்.

* நல்ல நாட்கள், தீய நாட்கள் உண்டு. பறவைகள் பறப்பதைக் கொண்டு நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது உண்டு.

* பார்ப்பார்க்குத் தானம் கொடுப்பதால் புண்ணியம் உண்டு. யாகம் செய்வதால் துறக்கம் பெறலாம்.

* மக்களைத் தெய்வங்கள் பிடித்து ஆட்டும், பேய் பிசாசுகள் உண்டு, ஆலமரங்களிலும் மலைகளிலும் தெய்வங்கள் வாழும்.

* தென்புலத்தூர் என்னும் பிதிரர்கள் செய்யும் சடங்குகளினால் பிதிரர்கள் நன்மை பெறுகின்றனர்.

* எதிரிகளை விரட்டியடித்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பிள்ளைப் பேறு வேண்டும்.

இவை போன்ற பல நம்பிக்கைகள் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்தன.



பழக்கவழக்கங்கள்

* பண்டைத் தமிழர்கள் கள்ளையும், புலாலையும் கடிந்து ஒதுக்கவில்லை. இவைகளைச் சிறந்த உணவாக ஏற்றுக் கொண்டனர். ஔவையார், கபிலர் போன்ற சிறந்த புலவர்களெல்லாம் மாமிசமும் மதுவும் உண்டு மகிழ்ந்தனர். பெண்களும் மதுவருந்தினர்.

* போர்க் காலத்தில் பல கொடுமைகள் நடைபெறும். பண்டங்களுக்குப் படுசேதம் உண்டாகும். எதிரியின் ஊர்களை எரியிட்டுக் கொளுத்துவார்கள். பயிர் செய்திருக்கும் வயல்களிலே குதிரைகளை ஓட்டிப் பாழ் பண்ணுவார்கள். கழனிகளிலே விளைந்திருக்கும் தானியங்களைக் கொள்ளையிடுவார்கள். விரோதிகளின் நாட்டையும் கோட்டை கொத்தளங்களையும் தரைமட்டமாக்குவார்கள். அவ்விடங்களிலே கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு, கொள்ளு முதலியவற்றை விதைப்பார்கள்.

* வெற்றி பெற்ற வேந்தர்கள் தோல்வியடைந்த மன்னர்களின் முடியினால் வீரகண்டாமணி செய்து கால்களிலே அணிந்து கொள்வார்கள். பகையரசர்களுடைய பட்டத்து யானையின் நெற்றிப்பட்டயத்தை அழித்து அந்தப் பொன்னால் தாமரை மலர்களைச் செய்வார்கள். அவைகளைத் தம்மைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்கள்.

* பெண்கள், மாண்ட கணவனுடன் உடன்கட்டை ஏறும் பழக்கம் பழந்தமிழ் நாட்டில் உண்டு. தாமரைக் குளத்திலே நீராடப் புகுவது போல, கற்புடைப் பெண்கள் கணவனுடைய ஈமத்தீயிலே புகுந்து மடிவார்கள்.

* கணவனை இழந்த பெண்கள் தலைமயிரைக் களைந்துவிடுவார்கள். எள்ளும் புளியும் சேர்த்துச் சமைத்த வேளைக் கீரையை உண்பார்கள். பாயின்றி கரடுமுரடான நிலத்திலே படுப்பார்கள்.

* கல்வியினால் உயர்வு தாழ்வுகள் ஒழிந்து போகும். மக்களுக்குள் ஒற்றுமை உண்டாக்கும். ஆகையால் அனைவரும் எப்படியாவது - யாரிடமாவது கல்வி கற்க வேண்டுமென்று கூறிவந்தனர்.

முடிவுரை

சங்க இலக்கிய நூலாகிய எட்டுத்தொகையிலே இயம்பும் பல உண்மைகள் இங்கு எடுத்துக்காட்டப்பட்டன. பழந்தமிழர்களின் பண்பாட்டை அறிவதற்குப் புறநானூற்றின் இலக்கியச் சிந்தனைகள் நமக்கு பெரிதும் உதவி செய்கின்றன.

பார்வை நூல்கள்

1. புறநானூறு கணியன்பூங்குன்றனார், பா.எண் - 192

2. திருக்குறள் மு.வரதராசனார், குறள் - 397

3. புறநானூறு பா.எண் - 72

4. புறநானூறு பா.எண் - 203

5. புறநானூறு பா.எண் - 06

6. புறநானூறு நக்கீரர், பா.எண் - 56


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p63.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License