இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

65.பெரியாழ்வார் பாசுரங்களில் இறைச்சிந்தனை


ந. நீலவர்மன்
முதுகலை இரண்டாமாண்டு, தமிழ் இலக்கியம், தமிழாய்வுத்துறை,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி,வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

திருமாலை முழு முதற் கடவுளாகக் கொண்டு போற்றப்படும் சமயம் வைணவ சமயம். திருமாலின் பக்தர்களை ஆழ்வார்கள் என்று சிறப்பு பெயரிட்டு அழைப்பார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்கள் பாடிய பாசுரங்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தமாக உருப்பெற்றுள்ளது. திருமாலை முல்லை நிலக் கடவுளாகச் சிறப்பித்துச் சொல்லுவர். இதனை,

“மாயோன் மேய காடுறை உலகமும்”

என்ற தொல் காப்பியரின் நூற்பாவால் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் திருமாலின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றது. மேலும், திருமாலின் சிறப்புகளைப் பற்றியும், திருமாலை வழிபடும் முறைகள் பற்றியும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இளங்கோவடிகள் “மாங்காட்டு மறையனின்” வாயிலாக இதனை உறுதிப்படுத்துவார். இதனை,

“சிலப்பதிகாரம் ஆச்சியர் குரவையில் இளங்கோவடிகள் கண்ணனையும், இராமனையும் பாடி உருகுவார். அதனால் திருமாலின் வழிபாடு தமிழரின் தொடக்கக் காலத்திலேயே இருந்துள்ளது. மேலும். அது பக்தி என்பதை இயக்கக்காலத்தில் வளர்ந்துள்ளது” என்று சுப்பிரமணியம் தனது இலக்கிய வரலாற்றில் கூறுவதிலிருந்து அறியலாம்.

ஆழ்வார்களில் கருடனின் அவதாரமாக இருப்பவர் பெரியாழ்வார் ஆவார். அவர் பிரம்மாவால் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாபெரும் சக்தி. அத்தகைய பக்தரின் பாசுரங்களின் வழி திருமாலின் இறை வழிபாட்டினை ஆராய்ந்து அறிவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

பெரியாழ்வார் விளக்கம்

ஆழ்வார்கள் என்பது திருமாலின் அடியார்கள். இவர்கள் பக்தியில் ஆழ்ந்தவர்கள் என்று கழக அகராதி குறிப்பிடும். எல்லாவற்றிலும் பெரியவனானத் திருமாலைத் தனக்குள் வைத்ததனால் இவரைப் பெரியாழ்வார் என்று கூறுவது மிகவும் பொருத்;தமானது என்பதை அறியலாம்.

திருமாலைத் தன் உள்ளத்தில் வைத்து நாள்தோறும் பாடியதால் அத்தகைய பெயரை அவர் பெற்று இருக்கலாம். இதனை,

‘எம் பெருமானுடைய திவ்ய மங்களவிக்ரகம் நிலைத்திருக்க வேண்டுமென்று பல்லாண்டு பாடியதால் இவர் பெரியாழ்வார் என்று பெயர் பெற்றார் என்று உபதேச ரத்தின மாலை விவரிக்கிறது” என்று கல்விக்கடல் எஸ். கே. இராமராஜன் ‘ஆழ்வார்களும் கம்பனும்’ என்ற நுலில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

கருடனின் அவதாரம்

உலகம் ஐம்பொறியாளாகிய வேடர்களால் துன்புற்றுக் கொண்டிருந்தது. இதனை மேல் உலகத்திலிருந்து ஏழுலகையும் ஆள்பவனான பரமன் கவனித்தான். அவன் பொய்யான தன்மை படைத்த அற்பப் பாம்புகளாகிய மனிதர்களை அழித்து, உலகைத் திருத்த கருடனைப் பெரியாழ்வாராக அவதரிக்குமாறு செய்தார். இதனை,

ஏழுலகாள்வான் பொய் திறத்தார் புலைச்சற்பம் பொடியாகக் கருடனைத்தன் என்ற சித்திரத்தால் பெரியாழ்வாராய் உலகைத் திருத்தென்றான் ஆழ்வார் பாசுரங்களின் வழி அறியலாம்.

இவர் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். இவரை விஷ்ணு சித்தர், பட்டர்பிரான், புதுமை மன்னர், வேயர் குலத்துத் தலைவராய் திகழந்த சிற்றரசர் என்றும் கூறுவர்.

இவரது காலம் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் என்ற பாண்டியன் காலம் என்பதைக் கோபிநாத்ராவ் அவர்கள் கூறியதை ச. வே. சுப்பிரமணியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். “பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. 500 முதல் கி.பி. 800 ஆண்டு வரையிலான கால அளவில் வாழ்ந்தவர்கள் என ஆய்வாளர்கள் சிலர் கருதுவர்” என்று கே. கே. பிள்ளை தனது ‘தமிழக வரலாற்று மக்களும் பண்பாடும்’ என்ற நூலில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

இவர் ஸ்ரீ வைணவ அந்தணர் குலத்தைச் சார்ந்தவர் நாலாயிரத்துத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் இவரது பாசுரங்கள் இடம் பெறுகின்றன.



பெரியாழ்வார் பாசுரங்கள்

பெரியாழ்வார் இறைவனின் மீது கொண்ட அன்பைத் தன் பாசுரங்களில் படம் பிடித்து காட்டுகின்றார். அப்பாசுரங்கள் பக்தி சுவை நனி சொட்ட சொட்ட இயற்றப்பட்டதாகும். இதனை,

“ஓங்காரத்திற்கு இணையாக திருப்பல்லாண்டைத்
திருவாய் மலர்ந்தவர் பெரியாழ்வார்”

என்ற கூற்றினால் அறியலாம்.

திருமாலின் அவதாரமான கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து பாசுரங்களைப் பாடியுள்ளார். மேலும், பெரியாழ்வாரின் பாசுரங்கள் அவரின் அனுபவத்தையும், பக்தி நெறியையும், திருமாலின் சிறப்பையும் தெளிவுபடுத்தியுள்ளன. இதனை,

“பெரியாழ்வாரின் பாடல்களில் முதிர்ந்த அனுபவமும், மிகுந்த
எளிமையும், தூய அமைதியும், சோகம்
கலந்த அன்பு முதிர்ச்சியும் காணப்படுகிறது”

என்று ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில் ச. வே. சுப்பிரமணியன் கூறும் கூற்றினால் அறியலாம்.

பெரியாழ்வார் இறை வழிபாடு

பெரியாழ்வார் கண்ணனின் திருவுருவத்தைக் கண்ணால் கண்டு, மனத்தினால் போற்றி வழிபட்டார்.

செந்தாமரைத் திருவடிகளில் மோதிரங்களும், பாதச் சதங்கை ஒலியும், திருவரையில் சாத்தியுள்ள பொன் அரை நாணும், பொன்மனிக் கோவையும், கை விரல்களில் ஆழிகளும், மணிக்கட்டில் சிறுபவள வடமும், திருமார்பில் ஐம்படைத் தாலியும், தோள்களில் வளைகளும், காதுவணிகளும், மகரக்குழைகளும், செவிமடல் மேல் வாளிகளும், நெற்றியில் சுட்டியும், ஒளி வீசும்படி எங்கள் குடியினைக் காப்பவனே! என்று பாடுகின்றார். இதனை,

“செங்கமலக் கழலிற் சிற்றதழ் போல் விரவிற்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாள் நன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக”

என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. கண்ணன் அணிந்துள்ள ஒவ்வொரு அணிகலன்களையும் கூறித் தம் மனதுள் அவனை எண்ணி வழிபடுகிறார்.



இசை உணர்வு வழிபாடு

பெரியாழ்வார் “இசைக்கு மயங்காதவர் எவருமில்லை” என்பதற்கிணங்கக் கண்ணன் மீது இசை பாடி மகிழ்கிறார்.

செண்பக, மல்லிகை, இருவாட்சி போன்ற மலர்களைக் கண்ணணுக்குச் சூட்ட வேண்டுமென்று, யசோதை சொல்லியவற்றை எல்லாம் பெரியாழ்வார் இசையுடன் சொல்கிறார்.

“செண்பக மல்லிகையோட செங்கழு நீர்; இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்டவா”

இதனை மேலும் கண்ணன் ஆழிக்கையுடைய குழந்தையாகி யசோதையின் முதுகை அணைத்தைப் பாசமாக்கிப் பாடினார்.

“ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந் தோளி விட்டு சித்தன் மகிழ்நது
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே”

தமிழ்ப் பாசுரங்களை இசைக்க வல்லவர்கள், எம்பெருமானுக்கு மங்களம் பாடி இசைக்க நன் மக்களைப் பெற்று மகிழ்வர் என்று கூறுகிறார்.

கண்டம்

பெரியாழ்வார் கண்டம் என்னும் திருப்பதியில் பதினொரு பாசுரங்கள் பாடியுள்ளார்.

அகார, உகார, மகார, ‘ஓம்’கார மந்திரம் மூன்று சொல்லால் மூன்று பொருளுக்கு வாசகமாயிருக்கும். அதேபோல், மூன்று எழுத்தாகிய இருப்பிடம் எதுவென்றால், நறுமனம் கமழும் பெரிய சோலைகளால் சூழ்ந்த கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் சிறப்பான நகரமே ஆகும் என்கிறார் பெரியாழ்வார்.

“மூன்றெழுத்து தனை மூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
என்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன் குடைய
எம் புருடோத்த மனிருக்கை”

கண்டம் என்னும் திருப்பதியை “தேவ பிரயாகை” என்று ‘வைஷ்ணவ திவ்ய தேச யாத்திரை’ எனும் நூல் கூறுகிறது.



திருக்கோட்டியூர்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியிலுள்ள திருப்பத்தூரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

“காசின் வாய்க்கரம் விற்கிலும் கர
வாது மாற்றிலி சோறிட்டு
தேசவர்த்தை படைக்கும் வண்கைமி
னார்கள் வாழ்திருக் கோட்டியூர்...”

இத்திருத்தலத்தில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமமிழிசையாழ்வார் ஆகியோர் பாசுரங்கள் பாடியுள்ளனர்.

ஆய்வு முடிவுகள்

* பெரியாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானைச் சேவித்துப் பாடியுள்ளார் என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

* இவர் பாடிய தாலாட்டுகள் குழந்தை இலக்கியத்திற்கான கூறுகளை உள்ளடக்கிக் காணப்படுகிறது.

* ஆழ்வார்களிளே, எம்பெருமானின் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரியாழ்வார் என்பது ஆய்வில் நிறுவப்பட்டுள்ளது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p65.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License