தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
67.தமிழ் மொழி கூறும் விழுமியச் சிந்தனைகள்
பா. பரிதா
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), தமிழ்த்துறை,.
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
எளையாம்பாளையம், திருச்செங்கோடு.
முன்னுரை
‘தமிழ் - தன்னேரில்லாத் தமிழ்” என்னும் சிறப்பு அடைமொழியால் போற்றப்படும். இலக்கிய வளத்திலும் இதிகாசச் சிறப்பிலும் கூட தமிழ் ஈடு இணையற்ற மொழி, தொன்மையான மொழி தனித்தன்மையான மொழி தமிழ். அகமும், புறமும் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பரிபாடலும் என, தமிழர்களின் சிந்தனை வளத்துக்கும் சமுதாய ஒப்புரவிற்குச் சான்று கூறுவனதாக அமைவதையும் உண்மையான வாழ்க்கையை இயற்கையோடு சேர்ந்து வாழ்பவர்களின் வாழ்க்கை முறையே எதிர்கால சந்ததியினருக்கு அவர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்குவது என அறிய முடிகின்றது.
மனிதனுடைய வாழ்க்கையில் அகவாழ்க்கை, புறவாழக்கை என இரு பிரிவுகளைக்கொண்டதும். அகவாழ்க்கை என்பது காதல், அன்பு போன்றதும், அதாவது இல்லற வாழ்க்கையை போன்றது. புறவாழ்க்கையில் ஒருவருடைய புகழ், பெருமை, கொடை, வீரம், வெற்றி எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இரண்டு வாழ்க்கையும் இரு கண்கள் என இலக்கணம் வகுத்துள்ளனர்.
திருமணம், இல்லறம் என்ற ஐந்தெழுத்துச் சொற்களை வைத்துத் தமிழ்மொழி தன் சிறப்பை வெளிப்படுத்துகிறது. தமிழும், தமிழரும், தமிழ்க் கலாச்சாரமும் தான் மனிதன் மனிதனாகி உயர்நிலை அடையவும், மனிதநேயம், நெறியுடன் வாழ உலகிற்கு வழிகாட்டியது என்பதைப் பற்றி அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
விழுமியச் சிந்தனை வரையறை
மனிதனுடைய பயனுள்ள அறக்கருத்துகளையும் உயர்ந்த பண்புகளையும், எடுத்தாளப்படுவது. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகளை தெறிந்து கொள்ளவும், அவர்களின் சிறந்த பண்புகளை ஆராய்ந்து கூறுவது. மேலும், ஒருவருடைய வாழ்க்கையினை மதிப்பீடு செய்வதற்கும், அவனின் தனித்தன்மையை எடுத்துக் கூறுவது. விழுமியம் எனலாம்.
விழுமியங்கள், மனித குலத்தின் மதிப்பு மிக்க அரும் பெரும் சொத்து. அவற்றைப் பேணிக் காக்கவேண்டும். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே” என்ற கீழைத் தேசியக் கவிஞனின் கருத்ததிலும், மனிதன் இயற்கையில் தீயவனாக பிறப்பதில்லை சமூகத்தின் குறைபாடுகளே அவனை தீயவனாக்குகின்றது என்கிற ரூசோ கூற்றிலும் விழுமியம் அறியலாம்.
போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற இராவணனை ‘இன்றுபோய் நாளைவா … என்ற சிறந்த சிந்தனையும் உயர்ந்த விழுமியத்தினையும் அறியலாம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மனிதநேயத்தின் அடிப்படையில் சமுத்துவத்தின் உயர்வினை எடுத்துக் கூறுவது விழுமியம் என்பதை அறிய முடிகிறது.
மனிதனின் சக்தி
மனிதன், எதையும் தாங்கும் இதயத்துடன் மரம்போல் நின்று செயல்படுகிறான். இன்றைய தமிழருக்குப் பள்ளியில் தமிழ் இருப்பதே சில பேருக்கு தெரியாது. “ஆங்கிலப் பாம்பைத் தோளில் போட்டுச் சுமக்க மட்டும் தெரியும், தமிழ் யானை மீதேறி வலம் வரத் தெரியாது”
உலகம் முழுவதும் பசுமையாக, உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு உணவும், நீரும், சுத்தமான காற்றும் கிடைக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் அமைதியாக வாழ மனிதனின் உழைப்பு ஒன்றே வழியாகும். பசுமை இருந்தால் சக்தி கிடைக்கும் என்கிறது தமிழ்மொழி.
இல்லறத்தில் இறைவன்
இறைவன் உலகத்தை உணர்ந்து வா என்று மனிதனை விதையாக உலகில் விதைத்தான். விழுந்த விதை ஆண் செடியாக, பெண் கொடியாக உருவெடுத்து, ஆண்செடி மரமானது, மரபனுவுக்கு மூலமானது.
பெண் கொடி ஆண் மரத்தை சுற்றிப்படர்ந்து செழுமையாக, ஆழமாக வளர்ந்தது. நாளாக நாளாக பெண்கொடி, கொடியதாக மாறி, ஆண் மரத்தையே, தன்னை உயர்த்தி வாழ்வு கொடுத்த ஆண்மரத்தை தனக்குள் கட்டுப்படுத்திவிட்டது.
* உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடக்கும், ஆண், பெண் போராட்டம் கொடியவளிடம் சிக்கிய மரம் போலத் தப்பிக்க முயல்கிறான் முடியவில்லை, இயற்கையின் நியதிப்படி, பலர் இல்லறத்திலேயே வாய் மூடியாக உறவுகளின்றித் துறவிபோல தனித்து வீட்டிலே வாழ்கிறார்கள்.
* வானுயர வளர்த்தும் ஆண்மரத்தை அதன் போக்கில் விடுவது தான் பூங்கொடிகளின் வாழ்க்கைக்கு அழகாகும். “உழைக்கத் துணிந்துவிட்டால் பிழைப்பு தானாக நடக்கும், அழைப்பும் தானாக வரும்”
* உழுபவனுக்கு உழைக்கும் மாடு விடும் அழைப்பு தானே மகிழ்ச்சியைத் தருகிறது. சுகமும், கஷ்டமும் அவரவர் எண்ணத்தில் தான் இருக்கிறது. அதனால் எண்ணித்துணிக… அதுவே கனிணாகும். இறைவன் தான் இல்லறத்திற்கு மூலம் என்பதை அறியமுடிகின்றது.
புதுச்செருப்பின் தத்துவம்
நம் முன்னோர்கள் ஒவ்வொரு தம்பதியினரும் இல்லறத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நடைமுறைக்குப் பாதுகாப்பு தரும் செருப்பைச் சீர் செய்து கொடுத்துச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் புதுக்காலணி தரும் சீர் பற்றி…
கணவன் மனைவி இருவரும் இல்லறச்சுமை அனைத்தையும் ஒரு சோடிச் செருப்பு போல ஏற்று நடக்க வேண்டும். பழகும் வரை ஒரு பத்து நாளுக்காவது காலைக் கடிக்கும். பிறகு, இரண்டுமே காலுக்கும், காலத்திற்கும் ஒத்துப் போகும். இது போன்றது தான் தம்பதியினரின் குணமும் என அறிய முடிகின்றது.
இப்படிப் பழகிவிட்ட சோடியில் ஏதாவது ஒன்று பழுதுபட்டு விட்டால் வேறு சோடியிலிருந்து ஒன்றைப் பிரிந்து சோடி சேர்க்க மாட்டார்கள். அப்படிச் சேர்ந்தாலும் ஊரார் மதிக்க மாட்டார்கள். அதுபோலத்தான் இல்லறத் தம்பதிகளும் இணை மாற்றாமல் வாழ வேண்டும்.
“கோடி சேர்ந்தாலும் சோடி மாறி சேர்ந்து வாழக்கூடாது”
என்கிறது புதுக்காலணி தரும் தத்துவம் என தமிழ் மொழி கூறுகிறது.
கல்வெட்டும் கல்யாணமும்
நமது முன்னோர்களில் சிலர் சிந்தனைச் சிற்பிகளாக இருந்தனர். எதிர்காலச் சந்ததியர்க்கு, கல்வெட்டுகள் மூலம் அரிய பல செய்திகளையும் ஆவணங்களாக அளித்துள்ளனர். இதன் மூலம் நம்முன்னோர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் நேர்முகம் இல்லாமலே அறியமுடிகின்றது.
மனித இனம் எக்காலத்திலும் மகிழ்ச்சியாக ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்துவிட்டு வாலிபப் பருவத்தையும் உச்சபட்சமாக பாரபட்சமில்லாது அனுபவிக்க வேண்டுமென்று தான் கல்வியை அழியாது காக்கும் கல் ஆவணனம் போலவே தொடர்கல்யாணம் என்னும் ஏற்பாட்டின் நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர்.
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல “ஒருவனுக்கு ஒருத்தி” என்னும் உத்தியைக் கையாண்டு பாலியல் நோய் வராமலிருக்கக் கல்யாண முறையைக் கையாண்டு உலகிற்கு தந்தது நமது தமிழ் முன்னோர்கள்.
தாலி பெண்ணுக்கு வேலி
“காட்டுக்கு வேலி போட்டால் மதிப்பு வந்துவிடும்.
பெண்ணுக்குத் தாலி போட்டால் மதிப்பு வந்துவிடும்”
“பெண் அமைதியாகி வாழ அங்கீகாரம் தருவது தாலி
இடையிடையே புதுபிக்க முடியாதது பெண்ணின் தாலி”
தாலி இருந்தால் பெண் தெய்வமாகி முழுமையான மரியாதை பெறுவாள். தாலியுள்ள பெண் முழுக்குடம், தாலி இல்லையேல் பெண் காலிக்குடத்திற்குச் சமம் என்கிறது. நமது முன்னோர்களின் வாக்கு என்பதை ஆராய்ந்து அறிய முடிகின்றது.
அன்றும் - இன்றும் விழுமியச் சிந்தனைகள்
தமிழும், தமிழரும் தான் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயரின் அறிவியலுக்கும் மூலமாக இருந்திருக்கிறார்கள். அன்று புறாவின் மூலம் ஒளி வேகமாகச் செய்தியை அனுப்புதல், பெறுதல் இருந்தன. குதிரை மூலம் ஒலி வேகத்தில் செய்தியை அனுப்பி பெற்றனர். காட்டு வழியிலும் பறை அடித்தல் மூலம் செய்திகளைப் பரவச் செய்தனர்.
தமிழர்கள் அடியோ அடியோ என்று அடித்துதான் இன்று ஆடியோ ஆகிவிட்டது.
இன்று பறை கோபுரத்தில் இருக்கிறது. அதை அறையினுள் இருந்து செய்தியாக்க ‘கீபோர்டு’ மூலம் அடிக்கப்படுகிறது. அன்று குச்சியைக் கொண்டு பறை அடித்தார்கள் என செய்தி பரவியது. இன்று இலேசான உலோகப் பறை கோபுரத்தின் உச்சியில் நின்று உலகம் முழுவதும் செய்தியைப் பறைகிறது.
புரவியின் (குதிரை) செய்திப் பரவல் இரவு பகல் என்று எப்பொழுதும் பரவும், புரவியும், புறாவும் ஒலி, ஒளிக் காட்சிதான் இன்று தொலைக்காட்சிப் பெட்டியின் மூலம் செய்திகளைத் தருகிறது என்பதை அறிய முடிகின்றது.
நிரையுறை
இறைவனை மொழி என்பதால் தான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ் என கூறியுள்ளனர். இப்டிப்பட்ட மனிதனின் கைகளில் முழுமையாக இருப்பது இறைவனாகிய தமிழ்மொழி;
‘நல்லதை நினை - மனம் சுத்தமாகும்
நல்லதை செய் - உடல்; சுத்தமாகும்
நல்லதை நினைத்து - நல்லதைச் செய்தால்
வீடும் வாசலும் சுத்தமாகும்’
இறைவன் போடும் பிச்சையில் பிழைக்கும் மனிதன் தனக்கு வரும் லாபத்தில் ஒரு சிறு பகுதியை ஏழை எளியோர்க்கு வழங்கினால், அதுவே ஒருவன் நல்ல மனிதநேய மிக்க மனிதன் என நிரூபிக்கலாம் என்பதைத் தமிழ் மொழி கூறும் விழுமியச் சிந்தனை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
துணைநூல் பட்டியல்
1. தெ.போ. மீனாட்சி சுந்தரனார், தமிழ்மொழி வரலாறு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை - 17.
2. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001.
3. மு. இராமசாமி, தமிழ் மொழியின் சிறப்பு, மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17.
4. உஜேந்தன் பி.எட், மனித விழுமியம், ஸ்ரீலங்கா.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.