தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
83.வேதாத்திரி மகரிஷியின் கல்வியியல் கருத்துகள்
பி. முத்துகிருஷ்ணன்
முனைவர் பட்ட ஆய்வாளர், இக்கால இலக்கியத்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21
முன்னுரை
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பார்வையில் கல்வி, அதன் நோக்கில் குறிக்கோள்கள், கல்வியின் பரிமாணங்கள், காலத்திற்கேற்ற கல்வி, மொழிக்கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, குழந்தை வளர்ப்பு தொழில் கல்வி, ஒழுக்கக் கல்வி, பண்பாட்டுக் கல்வி, அருட்கல்வி, நெய்விளக்கக் கல்வி, நடத்தை மாற்றத்திற்கான கல்வி ஆகியவை குறித்தான விளக்கங்களையும் கருத்துகளையும் இக்கட்ரையில் காண்போம்.
கல்வியின் நோக்களும் குறிக்கோள்கள்
நோக்கங்கள்
வேதாத்திரி மகரிஷியின் பார்வையில் கல்வியின் நோக்கங்கள் கீழ்கண்டவைகளாக அமைகின்றன.
* கல்வியின் மூலமாக தனிமனித அமைதியை ஏற்படுத்துதல்
* மனிதன் தன் உரிமையை மற்றும் கடமையாகிய இவற்றின் முழுமையான அறிவைப் பெற்று இருத்தல்
* சமுதாயத்திற்கு ஆண், பெண் ஆற்ற வேண்டிய கடமைகளை அறிந்து உணர்தல்
* பிறர்க்குத் தான் பெற்ற அறிவுவைக் கொண்டு போதனையாலும், சாதனையாலும் நல வாழ்விற்கு ஏற்ற முறைகளை அறிவித்தல்
* நமது உரிமைகளையும், கடமைகளையும் உணர்ந்தவர்கள், உணராதவர்களுக்கும் அன்போடு உதவியாற்றி உணர்த்துதல்
குறிக்கோள்கள்
1. போரில் நல்லுலகம் படைத்தல்
2. பொருட்துறையில் சமநீதிமுறையை ஏற்படுத்துதல்
3. நேர்மையான நீதிமுறையை அமைத்தல்
4. நிலவுலகுக்கோர் ஆட்சியை ஏற்படுத்துதல்
5. சீர் செய்த பண்பாட்டையும் சிந்தனை போர் வழி வாழ்வைப் பின்பற்றுதல்
கல்வியின் பரிமாணங்கள்
1. சிறந்த கல்வி
2. பயனுள்ள கல்வி
3. முழுக் கல்வி
4. காலத்திற்கேற்ற கல்வி
சிறந்த கல்வி
கல்வி முன்னேற்றமே ஒரு நாடு வளமடைய, வலிமையடைய, மேன்மையடைய உதவும் என்பது உலகினர் அனைவரும் அறிந்த பொது உண்மை. கல்வி அத்தகைய முன்னேற்றத்தை ஒரு நாடு அளிக்குமெனில் எந்தக் கல்வி மக்களின் வாழ்வை இனிதாக்கி உள்ளத்தில் எழும் கேள்விக்களுக்கு எல்லாம் அறிவு சார்ந்த விடை கண்டுவிடுமோ. அக்கல்வித்தான் சிறந்த கல்வியாகும். இத்தகைய கல்வியினால்தான் சிந்தனைத் திறன் பெருகி, செய்தித் திறன், உடல் திறன் இவற்றால் நாடும், வீடும் சிறக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
பயன்னுள்ள கல்வி
எந்த ஒன்றும் பிறருக்குப் பயனாகும் போதுதான் மதிக்கப்படுகின்ற ஒன்றாய் அது விளங்கும். அந்த வகையில் தனக்கும் பயனாகிய சமுதாயத்திற்கும் பயனாகும். அப்படியான கல்வியை மகரிஷி வடிவமைக்கிறார். அதாவது;
“கல்வியெனில் எழுத்து தொழில் ஒழுக்கம் ஞானம்
கற்பதும் பின் வழுவாது நிற்பதும் ஆம்”
என்கிறார். அதாவது, எழுத்து, தொழில், ஒழுக்கம், ஞானம் ஆகியவற்றை முறையாகக் கற்பதும், பின் அதன்படி வழுவாது தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும், தான் கருத்துயர்ந்து அன்பை ஒழுங்குவிக்கின்ற முறையாகும் என்கிறார்.
முழுக்கல்வி
தற்காலக் கல்வி முறைமைதனை நாம் நன்கு உற்றுணர்ந்தோமேயானால் அதனில் எழுத்தறிவு மற்றும் தொழிலறிவு ஆகியவை மட்டுமே உள்ளதென அறிவோம். ‘இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக, நிறைவுடையதாக, அறநெறிப்படி வாழ மேற்கண்ட இரண்டும் போதுமா? எனில் போதாது என்பதே நமக்குக் கிட்டும் பதிலாக உள்ளது. இயற்கைத் தத்துவ அறிவும், ஒழுக்கப் பழக்கங்கள் இவையும் இணையும் போதுதான் அந்தக் கல்வியானது முழுக்கல்வியாகிறது என்கிறார் மகரிஷி. ஒழுக்கப் பழக்க அறிவும் இயற்கைத் தத்துவயறிவும் கிட்டாமையால் தற்போதைய மாணவா;களின் நடத்தைகளை வன்முறைகளை நாம் அவ்வப்போது நாளேடுகளால் அறிவோம். இவைகளைக்களைய எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவம், ஒழுக்கப்பழக்க அறிவு ஆகிய நான்கும் அத்யாவசியம் என்று மகாஷி சொல்கிறார்.
காலத்திற்கேற்ற கல்வி
“குற்றவாளி, பாவியென்று யாருமில்லை உலகிலே குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயமே கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம் கடமையினைச் சிந்தித்து செயலாற்றி உய்வோம்” என்று மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமாயின் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறும் மகரிஷி.
1. பாடத்திட்டம்
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கீழ்கண்ட பாடத்திட்ட திணை பட்டயம் மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை பயில்வோருக்குப் பரிந்துரை செய்கிறார்.
1. உடல் நலம்
2. உயிர்வளமும் மனவளமும்
3. குணநலப்பேறும் சமுதாயம் நலனும்
4. இறைஞானமும் முழுமைப்பேறு
2. பயிற்சிமுறை
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பயிற்சி முறையானது தியானத்தை அடிப்படையாகத் கொண்டது. மனதை ஒரு நிலைப்படுத்துகின்ற தியானத்தின் மூலமாக மனவளம் கூடுவதுடன் மனவாதத்தோடு தொடர்புடைய உடல்நலமும் மேலோங்குகின்றது. மேலும் பயிற்சி முறைகளில் உடற்பயிற்சியானது சிறப்பிடம் பெறுகிறது. ஆக்கினை (புருமத்தி) மூலதாரம் (ஆசனவாய்ப்படுத்திக்கு ஒரு அங்கமூலம் மேல் முதுகுதண்டின் கடைசி முள் எலும்புக்கு அங்குலம் கீழ்) துரியம் (உச்சந்தலை) இந்த ஆதாரங்களில் மனம் வைத்துதவம் செய்யும் பயிற்சி முறையினால் உடல் ,மன, உயிர் வளம் மேலோங்குவதாக தனது தவவிளக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தகைமை
உடலுக்குத் தேவையான உணவினை அளித்து வேளாளர் எவ்வாறு உலகம் காக்கின்ற செயல் செய்கிறாரோ, அது போல உடல் மற்றும் அறிவிற்கு ஒழுக்கம் எவை எனக் காட்டி அதனை உயர்த்தி வாழ்வின் வளத்தைக் காப்பவரே ஆசிரியர் என்கிறார் மகரிஷி மூலம், ஆசிரியர் என்பவர் தனது வாழ்வினை கல்வி போதனைக்காக நல்கி உயார்நிலை பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
முடிவுரை
வேதாத்திரி மகரிஷி அவர்களின் கல்வியல் கருத்துகளாகக் கல்வி பற்றிய நோக்கம், குறிப்புகள், கல்வியின் பரிமாணங்களாக சிறந்தகல்வி, பயனுள்ள கல்வி, ஒழுக்கக் கல்வி காலத்திற்கு ஏற்ற கல்வி மற்றும் அதன் பாடத்திட்டம் பயிற்சிமுறை ஆசிரியர் தகைமை போன்ற கல்வியில் முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.