இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கட்டுரைத் தொடர்கள்

கற்றல் - கற்பித்தல்

முனைவர் மா. தியாகராஜன்


4. கற்றல் கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு.

முன்னுரை

முதன் முதலில் மானுட இனம் தோன்றிய போதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி வளர்ந்த போதும், ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வழியேதும் கிடையாது. பிறகு, நாளடைவில் அவனின் அறிவுத் தூண்டுதலினால் செய்கை மூலம் கருத்தைப் பரிமாறிக் கொண்டான். பிறகு ஒலிக்குறிப்பு, வரிவடிவக் குறியீடு என வளர்ச்சிப் பெற்றுள்ளான். அறிவு வளர்ச்சிக்கும் கருத்துப் பகிர்விற்கும் மொழி இன்றைய தினம் இன்றியமையாததாகி விட்டது.

உலகில் பல மொழிகள் பேசப்படுகிறது. அவரவர்களுக்கு அவரவர் தாய்மொழி சிறப்பிற்குரியது. தாய்மொழி மூலம் கற்றுத் தேர்வதே சிறந்தது. அத்தகைய நோக்கில் ‘‘அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை’’ தாய்மொழியாய்க் கொண்டவர்கள் அம்மொழியைச் சிறந்த முறையில் பேசிட, எத்தகைய நன்முறைகளைப் பின்பற்றுதல் நலம் பயக்குமென இக்கட்டுரை வாயிலாகக் காண்போம்.

பேச்சு தான் அனைவருக்கும் மூச்சு

உலகிலுள்ள மொழிகளனைத்திலும் பேச்சு மொழி உண்டு. ஒலியைக் குறிப்பிட்ட ஒழுங்கில் உச்சரிப்பதே பேச்சு. மனிதன் எல்லா தேவைகளையும் ஒருவரை ஒருவர் சார்ந்தே பூர்த்தி செய்து கொள்கிறான். அதற்குப் பேச்சு தான் துணை புரிகிறது. பேச்சு மனிதனுக்கு ‘மூச்சு’ப் போன்றது என்று சொல்வது மிகையல்ல. அத்தகைய பேச்சில் தேர்ச்சிப் பெறுவது - மாணவப் பருவத்தில் மிகவும் நலம் பயக்கும். பள்ளிச் சூழலில் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த மொழி ஆற்றலையும் ஆளுமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள முடியும். மாணவர்கள் பேச்சுத் திறனுடையவர்கள் ஆகுதற்கு அதிலும் குறிப்பாகச் சிங்கப்பூர் போன்ற பல இனமக்கள் வாழும் சூழலில் ஆசிரியர்கள் மிகுந்த திறனையும் ஆர்வமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.



தேமதுர தமிழோசையில் தேர்ச்சி வேண்டும்

மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கூறியதன் வாயிலாகத் தமிழை இனிய மொழி என்று கூறினார். அவர் மேலும்,

‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றார். அத்தகைய தமிழ் மொழியை அதன் சுவை, ஓசை குறையாமல் போற்றி வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆங்கில மோகம் தலை விரித்தாடும் இக்காலக் கட்டத்தில் மொழியாசிரியர்கள், புத்தம் புதிய உத்திகளாலும் தளராத உழைப்பினாலும் மட்டுமே மாணவர்களை ஆர்வமுடன் தமிழைப் பேச வைக்க இயலும். இல்லையென்றால் பேசுகின்ற ஆர்வம் குறைந்து போய் விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திறன்வளர் பயிற்சிகள்

மேலே குறிப்பிட்டுக் காட்டிய வழிமுறைகளில் - திறன்களின் கூறுபாடுகள் விரிவடைகிறது. இத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்ள ஆர்வமும் புத்தம் புதிய சிந்தனையும் இருக்க வேண்டியதொரு நல்ல சூழலும் திறமையான வழிகாட்டலும் மாணவனுக்கு அமைதல் வேண்டும்.

பேச்சுப் பயிற்சிக்குரிய செயல்பாடுகள்

‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற நான்றோர் வாக்கை நாம் மறத்தல் கூடாது. பாத்திரத்தில் இருந்தால் தான் பரிமாற முடியும் - அதாவது ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’. நிறைய சொற்களை அறிந்திருந்தால் தான் அவற்றைப் பயன்படுத்திப் பேச முடியும். இத்தகைய சொற்களை நிறையப் பெறுவதற்குப் பள்ளிச் சூழலில் பல்வேறு பயிற்சிகளை ஆசிரியர்கள் அறிமுகம் செய்தல் வேண்டும்.

நமது பகுதியில் நடைபெறுகின்ற விழாக்கள் குறித்து மாணவர்களை உரையாடும் படி ஆயத்தம் செய்தால் அவர்கள் மிகவும் ஆர்வமும் அத்தகைய உரையாடலில் பங்கேற்றுப் பேசத் தொடங்குவார்கள்.



உரையாடல்: திருவிழாவில் கண்ட நிகழ்ச்சிகள்

I. விளையாட்டுச் சாதனங்களின் பெயர்கள்

II. நடனங்கள் - பெயர்கள், (சிங்க நடனம்) முதலியன

III. சிங்கனடனத்தின் சிறப்பு / வரலாறு

இத்தகைய கோணங்களில் மாணவர்கள் உரையாடலைத் தொடங்கும் போது, ஒருவக்கொருவர் ஆர்வமுடன் சலிப்பின்றித் தங்கள் கருத்துக்களைக் கூட கூறுவர் - இதன் மூலம், மாணவர்களின் மனதின் உற்சாகம், கற்கும் ஆர்வம் நிரம்பி வழியும் என்பதில் ஐயமே கிடையாது.

விலங்குகள் பறவைகள்

மாணவர்களின் பேச்சுப் பயிற்சியைத் துரிதமாகவும் என்றும் நினைவில் நிற்கும் படியும் வளர்ப்பதற்கு அவர்கள் கண்டு ரசித்த பறவைகள், விலங்குகள் முதலியவற்றைப் பற்றி உரையாடச் செய்வது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

எ.டு:

பருந்து - புறா - மயில் - காகம்

சிங்கம் - மாடு - புலி - யானை

இவை போன்ற மற்ற பறவைகளின் பட்டியல்களை மாணவர்கள் தயாரிக்க வேண்டும். பிறகு, அதனைப் பற்றி கருத்தப் பரிமாற்றம் செய்தல் வேண்டும். இதன்படி ‘பருந்து மேலே பறந்து சென்றது’ என்ற சொற்றொடரில் ‘ரு’, ‘ற’ வேறுபாட்டை மாணவர்கள் எளிதில் உணர முடியும்.

‘சிங்கையில் சிறந்தது சிங்க நடனம்’



இத்தொடரில், சிங்கை - சிங்கம் என்ற சொற்றொடரின் தன்மையை உணர்ந்த மாணவர்கள் எதுகை மோனை முதலிய இலக்கணச் சிறப்பையும் அறிந்து கொள்கிறார்கள்.

(முதலெழுத்து ஒன்றாய் அமைவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை)

‘ஜல்லிக் கட்டுக்காளைத் துள்ளிக்கிட்டு ஒடுது’

இச்சொற்றொடரை உச்சரிக்கும் போது, ‘ல’, ‘ள’ என்ற வேறுபாட்டுடன் உச்சரிக்க கற்றுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு ர, ற, ள, ழ, ண, ந, ன முதலிய எழுத்துக்களை அதன் தன்மையறிந்து ஒலிக்கும் முறையை அறிந்து நுட்பமாக ஒலிக்க வேண்டும் என்பதை அறிகிறார்கள். இல்லையென்றால், பேச்சில் பிழை ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதை அவர்கள் அறிய முடிகிறது. அதற்கு ஆசிரியர்கள்,

பலம் பவளம் பழம்

பணம் நலம் மனம்

முதலிய சொற்களை முறையான ஒலிக் குறிப்புகளோடு உச்சரிக்கும் பயிற்சியினை வழங்க வேண்டும்.



பேச்சுப் பயிற்சிக்கு மேலும் சில வழிமுறைகள்

1. ஊரின் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் குறித்து விவாதம்; உரையாடல் நடத்துதல்

2. மாணவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளைப் (அவரவர்களுக்குப் பிடித்த) பற்றிக் கலந்துரையாடல் செய்யச் சொல்லலாம். விளையாட்டு வீரர்களின் பெயர்களைச் சொல்லுவதன் மூலமும் கடினமான சொற்கள் எளிதாய் உரையாடலில் கலந்து விடவதால் மாணவர்களுக்கு நல்ல பலனுண்டு.

3. தொலைக்காட்சிகளில் கண்டு சுவைத்து, மகிழ்ந்த நிகழ்ச்சிகளை உரையாடச் செய்யலாம். இது பற்றி மாணவர்கள் உரையாடும் போது, ஆசிரியர் துணை நின்று - ஒருவர் கூறும் கருத்தை மற்றவர் ஒட்டியும் வெட்டியும் பேசுமாறு வழிகாட்டுதல் மிகவும் நலமாகும். இதன் மூலம் உடனுக்குடன் சிந்திக்கும் ஆற்றலையும் மாணவர்கள் பெறுகிறார்கள்.

பள்ளி, கோயில், கடல், மலை, நதி முதலிய மாணவர்கள் அறிந்த தலைப்புகளில் - தலைப்புகள் தந்து சொற்பொழிவு ஆற்றச் செய்யலாம்.

எ.டு: பள்ளியின் பயன்கள், ஆலயமும் ஆண்டவனும், கடலும் கப்பல் பயணமும், மலையும் மண்ணும், நதிகளும் நாட்டு வளமும்

இதனால் புதுப்புதுச் செய்திகளையும் சொற்கட்டு முறையும் மாணவர்களை எளிதில் சென்றடைகிறது.

4. விளையாட்டு மையத்தில் ‘கிரிக்கெட்’ எனும் மட்டைப் பந்தாட்டம் நடைபெறுகிறது; அல்லது காற்பந்து ஆட்டம் நடைபெறுகிறது; அல்லது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வர்ணனை செய்யச் சொல்லலாம். இதனால் கண்ணால் காணும் நிகழ்ச்சியை உடனே மனதில் நிறுத்தி, அதை பிறருக்கு விளங்குபடி எடுத்துரைக்கும் ஆற்றலை மாணவன் பெறுகிறான். இத்தகைய நிகழ்வின் மூலம்,

பெறுதல் - தருதல்

படித்தல் - படைத்தல்

ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே சமயத்தில் மாணவரிடம் நடைபெறுகிறது. இதனால் மாணக்கரின் ஆற்றல் பெருகுகிறது.

5. பள்ளியில் நடைபெறும் இறைவழிபாட்டுக் கூட்டம், வகுப்பறைக் கூட்டம், இலக்கியக் கூட்டம் ஆகியவை பற்றி உரையாடச் செய்யலாம்.

6. பறவை, விலங்கு, மனிதர்கள், வாகனங்கள் போன்றவை எழுப்புகின்ற ஓசையைப் போல் ஓசை எழுப்பச் செய்தல் பலகுரல் (மிமிக்கிரி) நடிப்பு முதலியனவையும் நற்பலன் தரும்.

தொடக்கநிலை மாணவர்கள் பேச்சுத் திறனில் சிறந்து விளங்கிட கூடுதலாகச் சில யோசனைகள்

1. பயிற்சி என்பது தொடர்ந்து எல்லாச் சூழலிலும் இருத்தல் வேண்டும். புதுமுறை பயிற்சிகள் முக்கியம்.

2. மாணவர்கள் பயன்படுத்துகின்ற அல்லது அவர்களுக்குப் பிடித்தமான சொற்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

எளிய இனிய பாடல்களைக் குழுக்களாகச் சேர்ந்து பாடுதல்.

நன்றாக அறிந்து தகவல்களைப் பற்றி சரி - தவறு என்று பதில் வருமாறு விடையளிக்கும் பயிற்சியளித்தல்.

வேறுமுறை: விளையாட்டுக் கட்டம்

கட்டங்கள் அமைத்து அக்கட்டங்களுக்குள் சொற்களை நிரப்பி சில குறிப்புகளைத் தந்து அக்குறிப்புகளைக் கொண்டு கட்டத்தில் உள்ள சொற்களைக் கண்டுபிடிக்கச் செய்தல்.

குறிப்பு:

1. காட்டில் ராஜா சிங்கம்

2. உலகின் சந்தை சிங்கப்பூர்

இதன் வாயிலாக, பேச்சுத் திறன் மட்டுமல்ல சிந்திக்கும் திறனும் உருவாகும் அல்லவா?



வரைதலும் அறிதலும்

மாணக்கர்களை அவர்கள் விரும்பும் படத்தை வரையச் செய்து அதற்கு எதிரே அதன் பெயரை, எழுத்துக்களை மாற்றி எழுதி முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சொல்லச் சொல்லி உற்சாகப் படுத்தலாம்.

மாதிரி

1. குழந்தைகளுக்குப் பிடிக்கும் ‘பு’ = இனிப்‘பு’.

2. வானில் வரும் ‘லா’ = நி‘லா’.

3. வீட்டில் வளர்க்கும் ‘னை’ = பூ‘னை’

இப்படிப்பட்ட விளையாட்டு முறைகளாலும் பேச்சுத்திறன் மிளிரும்.

சொல்லகராதியின் பயன்

அகராதி என்பது சொற்களஞ்சியம், சொற்பட்டியல் என்பதாகும். நிறைய சொற்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம், உரையாடலின் போது தங்கு தடையின்றி புதிய புதிய சொற்களை கையாண்டு இனிமையாகப் பேச முடியும், திரும்பத் திரும்ப ஒரே சொல்லைப் பயன் படுத்தும் நிலை ஏற்படாமல் இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் இத்தனை சொற்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.

முடிவுரை

தமிழ்மொழி கற்பித்தலில் பேச்சுத்திறனின் பங்கு வழிமுறைகளைக் கண்டோம். இத்தகைய வழிகளையும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற நல்ல அனுபவங்களையும் பயன்படுத்தி தாய்மொழியாம் தமிழ்மொழியை மாணவர்கள் செம்மையுடன் பேசி வழி செய்வோம்.

பார்வை நூல்கள் விவரம்

1. தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பரம், டிசம்பர்2000.

2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.

3. கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Skinner, B.F., (1967), “A Functional Analysis Of Verbal Behaviour”.

5. Bright Ideas – Teacher Handbooks – Developing Children’s Writing , Scholastic Publications.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p4e.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License