ஒருவர் மனநல மருத்துவருடன் நண்பராக இருந்தார்.
நண்பர் மனநல மருத்துவரிடம், ”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சுன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?” என்று கேட்டார்.
“அதற்கு சில சின்னச் சின்னப் பரிசோதனைகள் இருக்கு...” என்றார் மனநல மருத்துவர்.
“உதாரணமாக, ஒன்றைச் சொல்லுங்கள்...”
“ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் நிரப்பி வைத்து, பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு கப் ரெண்டும் வச்சிடுவோம். நோயாளியிடம், அந்த பக்கெட்டிலிருக்கும் தண்ணீரைக் காலி செய் என்று சொல்வோம்...”
“ஓ... புரியுது. குணமாகாத ஆளாக இருந்தால் ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளியிலே ஊற்றிக் காலி பண்ணிக் கொண்டிருருப்பான், சரியா டாக்டர்...?”
“சரிதான். இதேக் கேள்வியை நான் உங்களிடம் கேட்டால் நீங்க என்ன பண்ணுவீங்க...?”
“நான் கப்பில தண்ணீரை எடுத்து வேகவேகமாக் காலி பண்ணுவேன்...”
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்...”
“என்ன டாக்டர், இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்...?”
“பக்கெட்டை எடுத்து ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டுப் போய்கிட்டே இருப்பான்...”
நண்பர் அசடு வழிந்தார்.