ஒரு கஞ்சன் ஆற்றில் விழுந்து விட்டான். அவனுக்கு நீந்தத் தெரியாது.
வெள்ளத்திலேத் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
கரையில் நின்ற ஒருவர், “உன் கையைக் கொண்டா இப்படி, பிடித்து இழுத்துக் கரையிலே சேர்க்கிறேன்" என்று கத்தினார்.
எதையும் கொடுத்துப் பழக்கமில்லாத அந்தக் கஞ்சன் கையைக் கொடுக்க மாட்டேன் என்று தலையாட்டினான்.
இவர் யோசித்தார்.
அவனிடம் ‘உன் கையைக் கொடு’ என்று சொல்வதற்குப் பதிலாக, “இந்தா, என் கையைக் தருகிறேன் பிடிச்சுக்கோ!" என்று கத்தினார்.
உடனே கஞ்சன் ‘கப்’பென்று கையைப் பிடித்துக் கொண்டான்.
அவன் உயிர் பிழைத்தான்.