எரிப்பதா? புதைப்பதா?
இமாம்.கவுஸ் மொய்தீன்
வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்:இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்:அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது!
*****
வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்:எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்:சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.
டாக்டர்:இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.
*****
வெளிநாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, "மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".
கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"
மீண்டும் தந்தி வந்தது, "பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"
கணவர் பதில் அனுப்பினார், "பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து விடவும்."
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.