உன்னை விட உன் அம்மா அழகு...!
தேனி.எஸ்.மாரியப்பன்
மனைவி (முதலிரவில்): என்னைப் பெண் பார்க்க வந்த போது என்ன நினைத்தீர்கள்?
அப்பாவி சுப்பையா: உன்னை விட உங்க அம்மா அழகா இருக்காங்களேன்னு நினைச்சேன்..!
*****
ஒருவர்: உங்க பையனுக்கு வேலை கிடைக்கலேன்னு சொன்னீங்களே... இப்ப என்ன செய்கிறான்?
அப்பாவி சுப்பையா: வேலை பார்க்கிற பெண்ணைக் கட்டி வைத்து விட்டேன். இப்ப நிம்மதியா இருக்கான்.
*****
ஒருவர்: போன மாசம்தானே உங்க பொண்ணுக்கு காது குத்து விழா வைத்தீர்கள்... இது என்ன பத்திரிகை?
அப்பாவி சுப்பையா: இது மூக்குக் குத்து விழா அழைப்புங்க...!
*****
ஜோசியர்: இப்ப உடனடியா உங்களுக்கு இடமாற்றம் தேவை...!
அப்பாவி சுப்பையா: சரிதாங்க...! சுற்றி இருப்பவர்கள் எல்லோரிடமும் கடன் வாங்கிட்டேன்.
*****
மனைவி: பையன் என்ன தப்பு செய்தான். இப்படிப் போட்டு அடிக்கிறீங்க?
அப்பாவி சுப்பையா: ஒரு தப்பும் பண்ணல... பின்னால எப்படி பிழைக்கப் போறான்னு அடிக்கிறேன்...!
*****
ஒருவர்: ரெண்டு மனைவிகளை ஒரே வீட்டில் வைத்துக் குடும்பம் நடத்துகிறீர்களே...எப்படி?
அப்பாவி சுப்பையா: ஒருத்தி ஊமை. ஒருத்தி செவிடு. அதனால எந்தப் பிரச்சனையுமில்லை...!
*****
ஆசிரியர்: நான் படிக்குப் போதெல்லாம் தினம் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வந்தேன்.?
அப்பாவி சுப்பையா: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...!
*****
டாகடர்: பத்து நாளைக்கு தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடுங்க...
அப்பாவி சுப்பையா: மொத்தமே எங்க வீட்டுல ஆறு ஸ்பூன்தான் டாக்டர் இருக்கு...!
*****
ஒருவர்: என் மனைவி அவ அம்மா வீட்டிற்குப் போயிருக்கிறாள். எப்போ வருவாளோ தெரியல...!
அப்பாவி சுப்பையா: என் மனைவியும் அவ அம்மா வீட்டிற்குப் போயிருக்கிறாள். இப்போ வந்திடுவாளோ...ன்னு பயமா இருக்கு...!
*****
டாகடர்: உங்க மனைவிக்கு இனிமேல் காது கேட்காது சார்...!
அப்பாவி சுப்பையா: அதே மாதிரி வாய்க்கும் ஏதாவது வைத்தியம் இருந்தா செய்திடுங்க டாக்டர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.