மசாலா மோர்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கெட்டித் தயிர் - 1/2 கோப்பை
2. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
3. இஞ்சி - சிறிது
4. பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
5. மல்லித்தழை - சிறிது
6. கறிவேப்பிலை - சிறிது
7. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. மிக்ஸியில் பெரிய ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
2. அந்தக் கலவையுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த கலவையை ஒரு வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.
4. வடித்து வைத்திருக்கும் மோரில் தேவையான அளவு தண்ணீர் கலந்து நீர்க்க வைக்கவும்.
5. நீர்த்த பின்பு பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.