கேரட் - வெள்ளரி ஜூஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 1/2 கிலோ
2. வெள்ளரி - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. வெள்ளை மிளகு - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - 2 சிட்டிகை
6. கருப்பட்டி - 50 கிராம்
7. எலுமிச்சைச்சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. கேரட்டைத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. வெள்ளரி, தக்காளியை வட்டமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. கேரட், வெள்ளரி, தக்காளி, கருப்பட்டி, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.