மேங்கோ ஐஸ் டீ
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் – 2 எண்ணம்
2. சிறிய தேநீர் பைகள் – 2 எண்ணம்
3. எலுமிச்சைச் சாறு – 1/2 தேக்கரண்டி
4. பனங்கற்கண்டு – தேவையான அளவு
5. புதினா இலைகள் – சிறிது..
செய்முறை:
1. மாம்பழங்களைத் தோல் சீவி, நறுக்கி வைக்கவும்.
2. நான்கு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் தேயிலைப் பைகளைப் போட்டுப் பத்து நிமிடம் வைக்கவும்.
3. டீத்தூள் நிறம் வந்ததும் அதனுடன் நறுக்கி வைத்த மாம்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. கடைசியாக எலுமிச்சைச் சாறைச் சேர்த்து கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள், புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.