நீர் மோர்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தயிர் – 1/2 கப்
2. தண்ணீர் – 1 ½ கப்
3. கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
4. மல்லித்தழை – சிறிதளவு
5. இஞ்சி – சிறிதளவு
6. பச்சைமிளகாய் – 1 எண்ணம்
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றி, அதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு கடையவும்.
2. கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாகக் கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும்.
3. இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
4. பின்னர் அதனைப் பருகலாம் அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.