மாதுளை ஜூஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாதுளம்பழம் - 1 எண்ணம்
2. எலுமிச்சை பழம் - 1 எண்ணம்
3. சர்க்கரை - 3/4 = 1 கப்
செய்முறை:
1. மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து அரைத்துச் சாறெடுத்து வடிகட்டவும்.
2. எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டிப் பழத்தைப் பிழிந்து சாறெடுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு 4 கப் தண்ணீர் விட்டுப் பிசுபிசுப்புப் பதம் வந்தவுடன் இறக்கவும்.
4. சர்க்கரைப்பாகு ஆறியதும் மாதுளை, எலுமிச்சை சாறுடன் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.
குறிப்பு: குளிர்ச்சி வேண்டுபவர்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தோ அல்லது பனிக்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.