மல்லி ஜூஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மல்லித்தழை - 100 கிராம்
2. எலுமிச்சை - 1 எண்ணம்
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மல்லித்தழையைச் சுத்தமாகக் கழுவிச் சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த மல்லித்தழையைப் போட்டுச் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும்.
3. ஆறிய மல்லித்தழைச் சாற்றில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.
குறிப்பு:வாய்ப்புண்கள் குறையும், செரிமானப் பிரச்சனைகள் தீரும், இரத்த அழுத்தப் பிரச்சனைகள், இரத்த சோகை போன்றவை நீங்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.