மசாலா மோர்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. தயிர் – 1 கப்
2 இஞ்சி – சிறிய துண்டு
3. பூண்டு – 1 பல்
4. சீரகம் (வறுத்துப் பொடித்தது) - 1 தேக்கரண்டி
5. மல்லிப் பொடி – 1 தேக்கரண்டி
6. உப்பு – சிறிது
7. மல்லித்தழை – சிறிது
தாளிக்க:
1. எண்ணெய் – 1 தேக்கரண்டி
2. கடுகு – சிறிது
3. பெருங்காயம் – சிறிது
4. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துப் பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும்.
2. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்தை அடித்து வைத்திருக்கும் மோர்க்கலவையில் சேர்த்து, சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
5. பரிமாறும் போது, அதில் மல்லித்தழை சிறிது தூவிக் கொடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.