பனங்கற்கண்டு - துளசி பானகம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பனங்கற்கண்டு - 25 கிராம்
2. துளசி - 20 இலைகள்
3. மிளகு - 4 எண்ணம்
4. ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
5. ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
1. மிளகைத் துளசியுடன் சேர்த்து, 1/4 கப் நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறவிடவும்.
2. ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும்.
3. பனங்கற்கண்டைப் பொடித்து 3/4 கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும்.
4. அதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறலாம்.
குறிப்பு: இந்தப்பானம், கோடைக்கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்து.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.