தர்ப்பூசனி ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தர்ப்பூசணிப் பழம் (சிறிது) - 1 எண்ணம்
2. இஞ்சி - சிறிது
3. புதினா இலை - 4 எண்ணம்
4. சர்க்கரை – சிறிது
5. எலுமிச்சைச் சாறு - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. ஐஸ்கட்டி - தேவையான அளவு
செய்முறை:
1. தர்ப்பூசனியின் மேல்த்தோலையும், உள்ளிருக்கும் விதைகளையும் நீக்கவும். தோலை ஒட்டி வெண்மையான காய் போன்ற பகுதி இருந்தால் அதையும் நீக்கவும்.
2. தர்ப்பூசனிப் பழத்தைத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. நறுக்கிய தர்பூசணிப் பழத்துண்டுகள், இஞ்சி, இரண்டு புதினா இலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
4. பழக்கூழை எடுத்து பாத்திரத்தில் விட்டு, உப்பு, சிறிது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
5. அதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக் கலந்து பருகவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.