தக்காளி ஜூஸ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி (பழுத்தது) – 6 எண்ணம்
2. சர்க்கரை – தேவையான அளவு
3. எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
4. உப்பு – 1 சிட்டிகை
5. பனிக்கட்டி அல்லது குளிர்ந்த நீர் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தக்காளி எடுத்து உள்ளே இருக்கும் தண்டை நீக்கி, சூடான தண்ணீரில் அவற்றை போட்டு வேக விடவும்.
2. சிறிது நேரம் கழித்துத் தக்காளியைக் குளிர்ந்த நீரில் போட்டு தோல் உரித்து ஜாரில் போட்டு மசிக்கவும்.
3. பின் அவற்றை வடிக்கட்டி பனிக்கட்டி அல்லது குளிர்ந்த நீர், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.