கறிவேப்பிலை ஜூஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கறிவேப்பிலை - 1 கப்
2. பனங்கற்கண்டு - 50 கிராம்
3. தேங்காய்ப்பால் - 1/2 கப்
4. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. கறிவேப்பிலையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்.
2. துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக, பாலாக அரைத்துக் கொள்ளவும்.
3. பனங்கற்கண்டை நன்றாகப் பொடித்து அதில் எலுமிச்சைச்சாறு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலை ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.