கற்றாழை ஜூஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சோற்றுக் கற்றாழை - 1 மடல்
2. வெல்லம் - 50 கிராம்
செய்முறை:
1. சோற்றுக் கற்றாழை மடலை மண் போக கழுவி, மேல் தோலை மட்டும் சீவி எடுக்கவும்.
2. உள்ளே ஜெல் போல இருப்பதை சிறிய துண்டாக நறுக்கி, அதையும் இரண்டு முறை நல்ல நீரில் கழுவவும்.
3. வெல்லத்தைப் பொடி செய்து வைக்கவும்.
4. நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் அரைக்கவும். அரைக்கக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.
5. கடைசியில் வெல்லம் சேர்த்து ஒரு சுற்றி எடுக்கவும்.
6. ரொம்ப தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் திக்காகவே (சிரப் போல்) கலக்கி குடிக்கவும்.
7. குளிர்ச்சியாக வேண்டும் என்றால் சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து குடிக்கவும். ஐஸ் சேர்க்க கூடாது.
குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்து வந்தால் ஒரு மாதத்திலேயே நல்ல பலன் தெரியும். ஹீமோகுளோபின் அளவு கூடும். முகம் பளபளப்பாக மாறும். உடல் சூடு குறையும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.