கேரட் ஜூஸ்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கேரட் - 4 எண்ணம்
2. எலுமிச்சை - 1/2 எண்ணம்
3. சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
1. கேரட்டைத் தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்சியில் நறுக்கிய கேரட் மற்றும் 3/4 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
3. அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
4. மீதமிருப்பதை மீண்டும் 1/2 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும்.
5. வடிகட்டிய ஜூஸில் எலுமிச்சையைப் பிழியவும்.
6. தேவைக்கு ஏற்றபடி சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.