காய்கறி லஸ்ஸி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புளிப்பில்லாத தயிர் – 2 கப்
2. கேரட் துருவல் – 1 மேசைக்கரண்டி
3. மாங்காய்த் துருவல் – 1 தேக்கரண்டி
4. வெள்ளரிக்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. இஞ்சி – சிறிது
7. உப்பு – தேவையான அளவு
8. வறுத்துப் பொடித்த சீரகப்பொடி – 1/2 தேக்கரண்டி
9. கடுகு – 1/2 தேக்கரண்டி
10. சீனி - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் – தேவையான அளவு
12. மல்லித்தழை – சிறிது.
செய்முறை:
1. பச்சைமிளகாய், இஞ்சியைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சீனி போட்டு அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. பின்னர் அதில் கேரட், மாங்காய் மற்றும் வெள்ளரிக்காய்த் துருவல்களைச் சேர்த்துக் கலக்கவும்.
4. அத்துடன் வறுத்துப் பொடித்த சீரகத்தூள் சேர்க்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகைப் போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.
6. காய்கறி லஸ்ஸியின் மேலாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.(பனிக்கட்டி சேர்க்க விருப்பமுடையவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.