கடல்பாசி சர்பத்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பால் - 1/2 லிட்டர்
2. கடல்பாசி - 10 கிராம்
3. சர்க்கரை - 1/2 கப்
4. ரோஸ் வாட்டர் - 3 மேசைக்கரண்டி
5. முந்திரிப்பருப்பு - 1/4 கப்
செய்முறை:
1. பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும்.
2. கடல்பாசியைக் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்த பின் கொஞ்சமாக சீனி போட்டுக் காய்ச்சி வடி கட்டிக் வைக்கவும்.
3. அதில் விரும்பிய நிறங்களை தனித் தனியாக கலந்து தட்டுகளில் ஊற்றி ஆற வைத்து பத்து நிமிடங்கள் கழிந்ததும் சிறிது சிறிதாக வெட்டவும்.
4. குளிர்ந்த பாலில் ரோஸ் வாட்டர் மற்றும் மெல்லிதாய் நறுக்கிய முந்திரிப்பருப்பு மற்றும் கடல்பாசியைச் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இதனுடன் நன்னாரி சர்பத் கலந்தும் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.