மாதுளை லஸ்ஸி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கெட்டியான தயிர் - 1 கப்
2. மாதுளை விதைகள் – 1/2 கப்
3. ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
4. சர்க்கரை - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. மாதுளை விதைகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
3. அரைத்து வடிகட்டிய விழுதுடன் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
4. பின்னர் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச் செய்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.