சப்போட்டா மில்க் ஷேக்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காய்ச்சிய பால் – 2 கப்
2. சப்போட்டா பழம் – 3 எண்ணம்
3. பாதாம் பருப்பு – 8 எண்ணம்
4. சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
1. சப்போட்டா பழங்களைக் கழுவி, தோல், விதை நீக்குங்கள்.
2. பழத் துண்டுகளைப் பால், சர்க்கரையுடன் மிக்சியில் போடுங்கள்.
3. கொதிக்கும் வெந்நீர் 1/4 கப் எடுத்து, அதில் பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் நீக்குங்கள்.
4. பாதாம் பருப்பைப் பால் கலவையுடன் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் குளிர வைத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.