கிவி மாம்பழ ஜூஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கிவி பழம் (நறுக்கியது) - 2 கப்
2. மாம்பழம் (நறுக்கியது) - 2 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. பனிக்கட்டி - தேவையான அளவு
செய்முறை:
1. நறுக்கி வைத்திருக்கும் கிவி பழத்தில் 1 1/2 கப் அளவு மற்றும் மாம்பழத் துண்டுகளில் 1 1/2 கப் எடுத்து, அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2. பழச்சாற்றை டம்ளரில் ஊற்றி, அதனுடன் மீதமிருக்கும் கிவி மற்றும் மாம்பழத் துண்டுகளைச் சிறிது கலந்து கொள்ளவும்.
3. அதனுடன் தேவையான பனிக்கட்டிகளைக் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.