மசாலா மோர்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கெட்டியான தயிர் – 1 கப்
2. குளிர்ந்த தண்ணீர் – 11/2 கப்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4.இஞ்சி – சிறிய துண்டு
5. சீரகம் – 1/4 தேக்கரண்டி
6. மல்லித்தழை – சிறிது
7. உப்பு – தேவையான அளவு
தாளிக்க
8. எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
9. கடுகு – 4 தேக்கரண்டி
10. பெருங்காயத்தூள் – சிறிது
11. கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாகக் கடையவும்.
2. அதன் பிறகு, தயிருடன் குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து மத்து வைத்துக் கடையவும். (மிக்சியில் அடித்துக் கொள்ளலாம்ம். சிறிது குளிர்ச்சி குறையும்)
3. இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு கருவேப்பிலை அனைத்தையும் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
4. தட்டிய அனைத்தையும் மோரில் கலந்து, தேவையான உப்பு சேர்க்கவும்.
5. மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி, மோரில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
6. ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து, வெடித்து வரும்போது, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
7. தாளிசத்தை மோரில் சேர்த்துக் குளிர்ச்சியாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.