ஓட்ஸ் உப்புமா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பால் - ஓட்ஸ்- 100 கிராம்.
2. பாசிப்பருப்புப் பொடி - 50 கிராம்.
3. இஞ்சி - சிறிது.
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்.
5. கடுகு, உளுந்து - தேவையான அளவு.
6. வெங்காயம்- சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
8. நல்லெண்ணெய் - சிறிது.
9. கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. மிளகாய், வெங்காயம், இஞ்சி இம்மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கருவேப்பிலை மல்லித்தழை சேர்த்து தாளிக்கவும்.
3. நறுக்கி வைத்த மிளகாய், வெங்காயம், இஞ்சி போன்றவற்றைப் போட்டு வதக்கவும்.
4. தேவையான நீருடன் உப்பைக் கலந்து கொதிக்க விடவும்.
5. கொதிக்கும் கலவையில் ஓட்ஸ், பாசிப்பருப்பு பொடி சேர்த்து சிறிது சிறிதாகக் கிளறவும்.
6. வெந்து உதிரியாக வந்த பின்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.