வெஜ் ரவா கிச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1/2 கிலோ
2. பட்டாணி - 100 கிராம்
3. கேரட் - 100 கிராம்
4. பீன்ஸ் - 100 கிராம்
5. தக்காளி - 2 எண்ணம்
6. வெங்காயம் - 2 எண்ணம்
7. கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
8. பட்டை, லவங்கம் - சிறிதளவு
9. ஏலக்காய் - 5 எண்ணம்
10. நெய் - 100 கிராம்
11. முந்திரி - 25 கிராம்
12. மஞ்சள் பொடி - சிறிதளவு
13. இஞ்சி, புண்டு விழுது - தேவைக்கேற்ப
14. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பட்டாணி, பீன்ஸ், கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வைக்கவும்.
2. வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியை வெறுமனே சூடுபடுத்தி, அதில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வேக வைத்த காய்களைச் சேர்த்து வதக்கவும்.
8. எல்லாம் நன்கு வதங்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும்போது உப்பு சேர்க்கவும்.
9. தண்ணீர் கொதித்ததும் அத்துடன் ரவையைச் சேர்த்துக் கிளறவும்.
10. நன்கு கிளறி ரவை வெந்தவுடன் வறுத்த முந்திரியையும், மல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.