நாண்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு – 2 கிண்ணம்
2. பேக்கிங் பவுடர் – 3/4 தேக்கரண்டி
3. சோடா உப்பு – 1/4 தேக்கரண்டி
4. பால் – 50 மி.லி.
5. தயிர் – 50. மி.லி
6. உப்பு – தேவையான அளவு
7. சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்து வைக்கவும்.
2. பின்னர் அதில் வெது வெதுப்பான பால் மற்றும் புளிக்காத தயிர் ஊற்றிக் கைகளால் இலேசாகக் கலந்து விடவும்.
3. மாவை அழுத்தி பிசையாமல், ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும் போது, கை விரல்களால் அப்படியே கலந்து திரட்டி உருட்டி வைக்கவும்.
4. உருட்டி வைத்ததை மூடி போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
5. பின் மாவை உருண்டைகளாக பிரித்து, அவற்றைச் சப்பாத்தி போடுவது போல் மைதா தூவி தேய்க்கவும்.
6. பின்னர், நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, தேய்த்து வைத்த நாணை வைத்து மேலே நீர் தெளித்து நீர் உள்ள பக்கம் தவாவில் படுவது போல் ஒட்டி விடவும். இதை மூடி ஒரு நிமிடம் மிதமான நெருப்பில் வேக விடவும்.
7. நன்றாக ஆங்காங்கே உப்பி வரும். பின்னர், நாணை எடுத்து மேல் பக்கத்தை நேரடியாக தீயில் திருப்பி போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.