பிரட் உப்புமா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. ரொட்டித் துண்டுகள் - 8 எண்ணம்
2. பெரிய தக்காளி - 1 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 4 எண்ணம்
5. இஞ்சி - சிறு துண்டு
6. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
8. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - 4 தேக்கரண்டி
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
12. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது
14. எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
15. உப்பு - 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. ரொட்டித் துண்டுகளின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கிவிட்டுச் சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
4. அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் ரொட்டித்துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும்.
7. பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துச் சிறிது தண்ணீரைத் தெளித்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும்.
8. சிறு நெருப்பில் இடையிடையே கிளறி விட்டுப் பத்து நிமிடங்கள் கழித்துக் கீழே இறக்கி வைக்கவும்.
9. கடைசியாக அதில் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.