அரிசி உப்புமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி- 1 1/2 கப்
2. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
4. உப்பு- தேவையான அளவு
தாளிக்க
5. எண்ணெய் - 2 தேக்கரண்டி
6. கடுகு - 2 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
8. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. பச்சைமிளகாய் - 1 எண்ணம்
11. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
12. இஞ்சி - 1 துண்டு
13. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. அரிசியை மூன்று மணி நேரமாவது சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.
2. அரிசியை ஈரம் போக உலர்த்தி, உப்பு சேர்த்துச் சொரசொரப்பாக அரைத்து எடுக்கவும்.
3. துவரம் பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிச் சுட வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் தாளிசப் பொருட்களைச் சேர்த்துத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
6. கொதிக்கும் சுடுநீரை அரிசிக் கலவையுடன் சேர்க்கவும்.
7. துவரம் பருப்புடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளற வேண்டும்.
7. சில நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.
குறிப்பு: அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.