வெஜிடபிள் ரவா உப்புமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1/4 கிலோ
2. பட்டாணி - 100 கிராம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. கேரட் - 1 எண்ணம்
5. குடமிளகாய் - 1 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. பீன்ஸ் - 4 எண்ணம்
8. கடுகு - 1/4 தேக்கரண்டி
9. பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
10. இஞ்சி - சிறிய துண்டு
11. மல்லித்தழை - சிறிது
12. கறிவேப்பிலை - சிறிது
13. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
14. நெய் - சிறிது
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
2. அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
3. பிறகு, பொட்டுக்கடலை சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
4. எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும்.
5. அது கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான நெருப்பில் அடுப்பை வைத்து, ரவையை மெதுவாகத் தூவவும்.
6. எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.