கேழ்வரகு இடியாப்பம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சிவப்பு அரிசி மாவு - 250 கிராம்
2. கேழ்வரகு மாவு - 250 கிராம்
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றிச் சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு மற்றும் கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து, அதில் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
3. பின் இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழிய வேண்டும்.
4. இட்லிச் சட்டியில் வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.