மரவள்ளி மசாலா சப்பாத்தி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 2 கப்
2. மரவள்ளிக்கிழங்கு துருவல் - 2 கப்
3. தக்காளி - 3 எண்ணம்
4. வெங்காயம் - 3 எண்ணம்
5. இஞ்சி - 1 துண்டு
6. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. எள் - 2 மேசைக்கரண்டி
9. மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் கோதுமை மாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ள வேண்டும்.
2. பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
3. அதனுடன் சிறிதளவு உப்பு, பெருங்காயம், இஞ்சி, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
4. பின் எள், மரவள்ளிக்கிழங்கு துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் தனியாக இறக்கி வைத்துக் கொள்ளவும்.
5. கடைசியாக பிசைந்து வைத்த மாவைச் சப்பாத்தியாகத் தேய்த்து, நடுவில் 2 தேக்கரண்டி மரவள்ளிக் கலவையை வைத்து மூடி, சப்பாத்தியாகத் தேய்க்க வேண்டும்.
6. பிறகு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.