சில்லி நூடுல்ஸ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் - 200 கிராம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. கேரட் - 1 எண்ணம்
4. கோஸ் - 1/2 கப்
5. சிவப்பு குடை மிளகாய் - 1/2 கப்
6. பச்சை குடை மிளகாய் - 1/2 கப்
7. வெள்ளை வெங்காயம் - சிறிது
8. பல்லாரி வெங்காயம் (சுருள்சுருளாக வெட்டியது) - சிறிது
9. சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
10. வினிகர் - 2 மேசைக்கரண்டி
11. கிரீன் சில்லிசாஸ் - 1 மேசைக்கரண்டி
12. ரெட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
13. பூண்டு - 2 பல்
14. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
15. மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
16. உப்பு - தேவையான அளவு
17. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெள்ளை வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து, அதில் தேவையான தண்ணீர் ஊற்றிச் சூடுபடுத்தவும்.
3. அதில் ஒரு சிட்டிகை உப்பைத் தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
4. நூடுல்ஸ் 90 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு அகலமான பாத்திரத்தை மிதமான நெருப்பில் வைத்து அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
6. அதன் பிறகு, அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், வெள்ளை வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
7. அதன் பிறகு அதில் 2 மேசைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
8. பின்னர் அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும்.
9. கடைசியாக பல்லாரி வெங்காயச் சுருளை மேலாகத் தூவிக் கிளறி இறக்கவும்.
7. பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.