பொறி உப்புமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பொறி – 3 கப்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
4. கேரட் (பொடியாக நறுக்கியது) – 3 தேக்கரண்டி
5. எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
7. உப்பு – தேவையான அளவு
தாளிக்க
8. எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
9. கடுகு – 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
11. கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
12. வேர்க்கடலை – 2 மேசைக்கரண்டி
13. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
1. பொறியை நன்கு அலசி, ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
3. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5. பொறியை தண்ணீர் இல்லாமல் வடித்து, அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
6. கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:
இதற்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் தேவையில்லை. அப்படியேச் சாப்பிட முடியும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.