பிரெட் சில்லி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பிரட் துண்டுகள் - 4 எண்ணம்
2. குடமிளகாய் - 1 எண்ணம்
3. வெண்ணெய் - 25 கிராம்
4. பூண்டு - 2 பற்கள்
5. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
6. தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
7. உப்பு - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
தாளிக்க
9. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
10. பல்லாரி வெங்காயம் - 1 எண்ணம்
செய்முறை:
1. பல்லாரி வெங்காயத்தை நீளவாக்கிலும், குடமிளகாயை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
2. பூண்டுப் பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.
4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடானதும் வெண்ணெய்யைச் சுற்றிலும் ஊற்றி, பிரட் மீதும் தேய்த்து விடவும்.
5. பிரட் துண்டுகளைத் திருப்பி போட்டு சுற்றிலும் வெண்ணெய் ஊற்றி, பிரட் மேற்பகுதியிலும் தேய்த்துக் கொள்ளவும்.
6. அனைத்து பிரெட்டையும் இதே போல் வெண்ணெய் ஊற்றி சிறிது வேகவைத்து எடுத்து, பின்னர் அதனைச் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் பொன்னிறமானதும், தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
10. பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.